நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT

உபவாசம் என்பது

 உபவாசம் என்பது கிறிஸ்தவர்களாகிய நமக்கு மட்டுமே உரியது என்று நம்மில் அநேகர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை உங்களில் யாராவது அப்படிப்பட்ட சிந்தையுள்ளவர்களாயிருந்தால் தயவுசெய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

யூதர் மற்றும் கிறிஸ்தவரல்லாத புறஜாதிகளான எகிப்தியர் பெர்ஸியர் கிரேக்கர் ரோமர் போன்ற பிற இனத்தவர்களான மக்களுக்குள்ளும்
உபவாசம் ஒரு சடங்காக இருந்தது.இன்றைய நாட்களில் கூட இந்துக்கள் விரதம் இஸ்லாமியர் நோன்பு என்று தாங்கள் கடவுள்கள் என்று நம்புகிறவற்றிற்கு முன்பாகவும் நாத்திகர்கள் கடவுள் நம்பிக்கையில்லாதவர்களானதால் மனிதர்களுக்கு முன்பாகவும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

பரிசுத்த வேதாகமத்தின் முறமையின்படி உபவாசம் தன்னை படைத்த கடவுளுக்கு முன் தன்னைத் தாழ்த்துவதைக் குறிக்கும். லேவி 16: 30 31
யூதர்களுடைய கட்டளைகளில் ஒன்று உபவாசம் 1சாமு 7: 6 எஸ்தர் 4:16  ஏசா 58 :4 யோவேல் 2:12 அப் 27: 9
மோசேயின் நியாயப் பிரமானத்தில் பெரிய நாளில் உபவாசிக்கக் கட்டளை இருந்தது. லேவி 16: 29
போரில் தோல்வி என்றால் உபவாசம் நியா 20: 26 1சாமு 20: 34
வாதை என்றாலும் உபவாசம் யோவே 1: 14
தேவன் ஜனத்தை பயமுறுத்தினாலும் 2சாமு 12: 16 1ராஜா 21: 27
ஜனங்களுக்குள் பொதுவான பயம் ஏற்பட்டாலும் 1சாமு 7: 6 யோவே 2: 12
இஸ்ரவேல் ராஜ்யங்கள் அழிக்கப்பட்ட நாட்களை நினைவு கூர்ந்து உபவாசம். கல்தேயர் வந்த 4- வது மாதமும் தேவாலயமும் பட்டணமும் அழிக்கப்பட்ட 5-ம் மாதமும் கெதலியாவும்
அவனோடிருந்த யூதர்கள் கொல்லப்பட்ட 7 –வது மாதமும் முற்றிகைப் போடப்பட்ட 10 – வது மாதத்திலும் உபவாசம் யூதர்களுக்கு பொதுவான பிரமானமாயிற்று. 
                          மழை பெய்யாவிட்டால் ஜனங்கள் ஒன்றுகூடி உபவாசம் இருக்க வேண்டுமென்று எருசலேம் ஆலோசனை சங்கம் கட்டளையிட்டது.
யூதர்களில் பெரும்பான்மையானோர் உபவாசம் இருப்பதை புண்ணியமாகவும பெருமையாகவும் கருதினார்கள். லூக் 18 :12

பரிசேயர் மோசே சீனாய் மலையின் மேல் ஏறின வாரத்தின் 5 –ம் கிழமையிலும் (வியாழன்) அவன் திரும்பி இறங்கின 2- ம் கிழமையிலும் (திங்கள்) உபவாசித்தார்கள். இந்த உபவாசம் மாலையில் தொடங்கி மாலையில் முடிந்தது. சிலநேரம் இன்னும் அதிகமாகவும் உபவாசித்தார்கள்.
எஸ்தர் 4:15 ன்படி யூதர்கள் தொடர்ச்சியாக 3 நாள் உணவு சாப்பிடாமல் இருந்ததுடன் தண்ணீர் குடியாமலும் இருந்தார்கள்.
பாவநிவிர்த்தி நாளில் வழக்கமான ஆடைகளுக்கு மேல் வெள்ளை உடை அல்லது குல்லா அணிந்து வெள்ளை உபவாசம் என்றனர்
துக்கம் மனஸ்தாபம் என்றால் உடையை கிழித்து இரட்டுடுத்தி தலையில் சாம்பலைப் போட்டுக்கொண்டோ அல்லது கருப்புக் கம்பளி போர்த்திக் கொண்டோ கருப்பு உபவாசம் என்பார்கள்.

உபவாசம் இருக்க வேண்டுமென்பது புதிய ஏற்பாட்டு விசுவாசிக்குப் பிறகு பிரமாணம் அல்ல…

யோவான்ஸ்நானகனும் அவரது சீஷர்களும் அடிக்கடி உபவாசம் இருந்தனர். ஆனால் இயேசுவின் சீஷர் உபவாசம் இருக்கவில்லை. மாற் 2: 18
மத் 9: 16 17 – க்குப் பின் உபவாசம் தேவையில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.
அப்போஸ்தலர்களும் பூர்வ கிறிஸ்தவர்களும் அடிக்கடி உபவாசித்தார்கள். ஆனால் அது கட்டளையினால் அல்ல…

புசிப்பும் குடிப்பும் தேவராஜ்யம் அல்ல என்கிறார் அப்போஸ்தலனாகிய பவுல்
முதல் இரண்டு நூற்றாண்டுகளில் திருச்சபை உபவசம் இருப்பதும் இராமல் இருப்பதும் அவரவர் இஷ்டம் என்றது. 3 வது நூற்றான்டிலேதான் உபவாசம் பிரமாணமாயிற்று. 4-ம் நூற்றாண்டில் பாவநிவிர்த்திக்கான புண்ணியம் என சில போதகர்கள் போதித்தனர். அதன்பின் சில கிறிஸ்தவர்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்டவர்களில் சிலர் சாம்பல்புதன் மற்றும் பெரியவெள்ளிகிழமைகளிலும் சிலர் பெரிய வெள்ளிக்கிழமைக்கு முந்தைய 40 நாட்களும் உபவாசம் எனத தீர்மானித்துக் கொண்டனர். இதற்கு ஆதரவாக சீனாய் மலையில் மோசே 40 நாட்கள் இருந்ததையும் இஸ்ராயீல் ஜனங்கள் வனாந்தரத்தில் பயணித்த 40 வருஷத்தையும் இயேசுகிறிஸ்து வணாந்திரத்தில் உபவாசித்த செய்தியையும் ஒப்பிட்டு தங்களது உபவாசத்தை புனிதமாக்கிக் கொண்டனர்.
சுவிஷேச திருச்சபையானது (Re Formed)  வேத உபதேச அடிப்படையில் உபவாசம் பிரமானம்p அல்ல என்று சொல்லுமே தவிர உபவாசத்தை வேண்டாமெனத் தள்ளவில்லை.

லூதர் :- உபவாசம் என்பதும் சரீர ஒடுக்கம் என்பதும் புறம்பான நல்லொழுக்கமே சரீர நிறைவு எப்பொழுதும் ஜெபத்திற்கு ஆதரவாக இருப்பதில்லை.


கல்வீன் :- கொஞ்சநாள் அதிகநாள் சைவ அசைவ உணவுவகைகள் என்பதெல்லாம் கவனிக்கத் தகுந்ததல்லஉணவு உன்னை ஜெபிப்பதற்கு தடை செய்கிறதென்றால் உபவாசித்து ஜெபி என்றார்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்