நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » » ஆபாச இணையதளங்கள் - திகைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்!

ஆபாச இணையதளங்கள் - திகைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்!

இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் அதன் முடிவில் கூறப்பட்டுள்ள ஒரு தீர்மானத்தை கட்டாயமாக எடுக்க வேண்டும் 


அறிவியல் கண்டுபிடிப்பு என்பது எப்போதுமே கத்தியை போன்றது. இரண்டையுமே  நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம் அல்லது கெட்ட விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம். அது  பயன்படுத்துபவரை பொறுத்தது. அறிவியலின் இணையற்ற கண்டுபிடிப்பான இணையமும
அதற்கு விதிவிலக்கல்ல. நவீன போக்குவரத்தின் மூலம் சிறிதாக்கப்பட்ட உலகம் இணையத்தின் மூலம் மிகச் சிறிதாக்கப்பட்டது. உலகத்தையே நம் வீட்டின் சிறிய அறைக்குள் கொண்டு வந்துவிட்டோம். அதன் கூடவே வேண்டாத குப்பைகளையும்  நம் வீட்டிற்குள் கொண்டு வந்து விடும் சூழ்நிலை இன்று உள்ளது.
நாளுக்கு நாள் ஆபாச இணையதளங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு காரணம் அத்தளங்களுக்கு உள்ள மக்கள் ஆதரவுதான். இணையத்தை பயன்படுத்தும்போது நம் அனுமதி இல்லாமலேயே கூட  நாம் ஆபாச இணைய தளங்களுக்கு கடத்தப்படலாம். ஆபாச தளங்கள் பற்றிய சில புள்ளி விவரங்கள் நமக்கு எல்லாவற்றையும் விட மிகப் பெரிய ஆச்சரியத்தை தருகின்றன. அதற்கு முன் ஒரு விஷயம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள்  பெரும்பாலானவற்றில் ஆபாச சினிமாக்கள், இணையதளங்கள் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டவை ஆகும். மேலும் இங்கு தரப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் உலக அளவிலானவை. 
இனி புள்ளி விவரங்களை ஜாலியாக பார்க்கலாமா !?
1) ஒவ்வொரு வினாடியும் ஆபாச தளங்களை பார்வையிட   3,075.64 அமெரிக்கன் டாலர் செலவிடப்படுகிறது.
2) ஒவ்வொரு வினாடியும் ஆபாச தளங்களை 28,258 பேர்  பயன்படுத்துகின்றனர். அதே ஒவ்வொரு வினாடியிலும் 372 பேர் கூகிள் போன்ற தேடுதல் பொறிகளில் செக்ஸ் சம்பந்தப்பட்ட வார்த்தைகளை தட்டச்சு செய்து ஆபாச தளங்களைப் பற்றிய விவரங்களை தேடுகின்றனர்.
3) ஒவ்வொரு 39 நிமிடத்திற்கும் ஒரு புதிய ஆபாச காணொளி அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிறது.
4) ஆபாச இணையதளங்களின் மொத்த வியாபாரம், Microsoft, Google, Amazon, eBay, Yahoo, Apple EarthLink. and Netflix ஆகிய நிறுவனங்களின் மொத்த கூடுதல் வியாபாரத்தை விட அதிகம். 2006- ஆம் ஆண்டில் ஆபாச இணையதளங்களின் மொத்த வருமானம்  $97.06 பில்லியன் ஆகும்.
ஆபாச இணையதள வருமானத்தில் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகள்.
     தரம் (Rank)
   நாடு
வருமானம் (பில்லியனில்)
1
சீனா
$27.40
2
தென் கொரியா
$25.73
3
ஜப்பான்
$19.98
4
அமெரிக்கா
$13.33
5
ஆஸ்திரேலியா
$2.00
6
இங்கிலாந்து
$1.97
7
இத்தாலி
$1.40
8
கனடா
$1.00
9
பிலிப்பைன்ஸ்
$1.00
10
தைவான்
$1.00
முதல் 10 இடங்களில்,  5 இடங்களை ஆசிய நாடுகளே  பெற்றுள்ளன இந்த அட்டவணையில் இந்தியாவின் பெயர் இடம் பெறாதது நமக்கு சந்தோஷம்தான்.


 
ஆபாச இணையதள புள்ளிவிவரங்கள்
ஆபாச இணையதளங்கள்
4.2 மில்லியன் (மொத்த எண்ணிக்கையில் 12%)
ஆபாச இணைய பக்கங்கள்
420 மில்லியன்
தேடுபொறிகளில் தினசரி ஆபாச தேடல்களின் எண்ணிக்கைகள் 
68 மில்லியன்  (மொத்த தேடல்களில் 25% )
தினசரி ஆபாச இ-மெயில்கள்
2.5 பில்லியன் (மொத்த மெயில்களில் 8% )
இணையத்தை பயன்படுத்துவோரில் ஆபாச தளங்களை பார்வையிடுவோர்
42.7%
விருப்பம்  இல்லாமலேயே ஆபாச தகவல்களை வலுக்கட்டாயமாக பெறுவோர்
34%
ஒரு மாதத்தில் ஆபாச டவுன்லோட் எண்ணிக்கைகள் (Peer-to-peer)
1.5 பில்லியன்  
(மொத்த டவுன் லோடில் 35%)
சிறுவர் ஆபாச தளங்கள் (Child pornography) பற்றிய தினசரி தேடல்கள் (search)
116,000
சட்டவிரோத சிறுவர் ஆபாச தளங்கள் (Child pornography) எண்ணிக்கை
100,000
ஆபாச தளங்களை பார்வையிடுவோர்
72 மில்லியன்/மாதம்
ஆபாச இணையதளங்கள் மூலம் செக்ஸ் சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம்
$4.9 பில்லியன்
ஆபாச தளங்களை முதன் முதலாக பயன்படுத்த ஆரம்பிக்கும் சராசரி வயது
11 வயது
ஆபாச இணையதளங்களை அதிகமாக பயன்படுத்துவோர்
35 - 49 வயது பிரிவை சார்ந்தவர்கள்
அலுவலக நேரங்களில் ஆபாச    தளங்களை பார்வையிடுவதை
ஏற்றுக்கொண்டவர்கள்
20%
ஆபாச தளங்களுக்கு அடிமையாகி விட்டதை  ஏற்றுக்கொண்டவர்கள்
10%
ஆபாச தளங்களை பார்வையிடுவதில் ஆண், பெண் சதவிகிதம்
ஆண் -72% 
பெண் - 28%
பெண்களும், ஆபாச இணைய தளங்களும்
இணையதள நடவடிக்கைகளை ரகசியமாக வைத்திருக்கும் பெண்கள்
70%
அலுவலக நேரங்களில் ஆபாச    தளங்களை பார்வையிடுவதை
ஏற்றுக்கொண்டவர்கள்
13%
ஆபாச தளங்களுக்கு அடிமையாகி விட்டதை  ஏற்றுக்கொண்டவர்கள்
17%
ஆபாச தளங்களை பார்வையிடுவோர்
9.4 மில்லியன்/மாதம்
ஆபாச இணையதளங்களை தடை செய்த முக்கிய நாடுகள்
சவூதி அரேபியா, ஈரான், சிரியா, பஹ்ரைன், எகிப்து, UAE,  குவைத், மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், கென்யா, இந்தியா, கியுபா, சீனா

நாடுகள் வாரியாக ஆபாச இணைய பக்கங்களின் எண்ணிக்கை  
 நாடு
ஆபாச இணைய பக்கங்கள்
அமெரிக்கா
244,661,900
ஜெர்மனி
10,030,200
இங்கிலாந்து
8,506,800
ஆஸ்திரேலியா
5,655,800
ஜப்பான்
2,700,800
நெதர்லாந்து
1,883,800
ரஷ்யா
1,080,600
போலந்து
1,049,600
ஸ்பெயின
852,800
இணையத்தை மிகப் பெரிய அளவில் ஆக்கிரமித்துள்ள ஆபாச இணைய தளங்களை சிறுவர்கள் கூட இன்று செல்போனில் பார்வையிடுகிறார்கள் பல்வேறு மென்பொருட்கள் மூலம் பாதுகாப்பான இணையத்தை நாம் வீட்டில் பயன்படுத்த முடியும் என்றாலும், பள்ளி செல்லும் சிறுவர்கள், இளைஞர்கள் புதிய விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆசையில் ஆபாச தளங்களை பார்வையிடுவதை சட்டப்படி தடுப்பது என்பது இயலாத காரியம் ஆகும். ஆனால் ஆபாச படங்களை பார்ப்பதின் மூலம் மாணவர்களின் மனமும், படிப்பும், எதிர்காலமும் கெடுகிறது என்பது மட்டும் நிச்சயம். 

இப்போது என்ன சொல்கிறீர்கள்?  உங்கள் பிள்ளைகளுக்கு செல் போன் உம் கணணியும் வாங்கிகொடுத்து இன்டர்நெட் கனெக்ஷனும் செய்து கொடுக்க போகிறீர்களா?   நீங்களே தீர்மானியுங்கள். 
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்