நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » » மெளலவி பிஜே அவர்களுக்காக ஜெபம்

மெளலவி பிஜே அவர்களுக்காக ஜெபம்



 மனிதனுக்கும் வியாதி வருவது என்பது தடுக்க முடியாத ஒன்றாகும்.சில நேரங்களில் ஏதோ ஒரு காரணங்களுக்காக வரும்.எல்லா வியாதிகளும் தண்டணையாக வந்தது என்றோ,அல்லது சோதனையாக வந்தது என்றோ காரணம் சொல்லிகொண்டிருக்க முடியாது. மதிப்பிற்குரிய மெளலவி பிஜே அவர்களுக்கும் நமக்கும் பல கருத்து வேறுபாடு இருந்தாலும், வேதாகமத்தையும்,இயேசு கிறிஸ்துவையும் மிக கீழ்தரமாக விமர்சித்தாலும் நாம் அவரை நேசிக்கிறோம்.அவரை போன்ற தாவா பிரசங்கிகளினால் தான் நாம் வேதாகமத்தை இன்னும் அதிகமாக படித்து ஆராய்ச்சி செய்ய தூண்டப்பட்டுள்ளோம்.இல்லை என்றால் நாமும் சாதாரண கிறிஸ்தவர்களை போல் ஆசீர்வாதங்களை மட்டுமே முன்னிலை படுத்தி ஏனோ தானோ என்று வாழ்திருப்போம்.மறைமுகமாகவே நமக்கு மவ்லவி பிஜே அவர்கள் நமக்கு
ஒரு தூண்டுகோலாக இருந்தார் என்றால் அதை மறுப்பதற்கில்லை. மவ்லவி பிஜே அவர்களுக்காகவும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினார் என்பது நமது விசுவாசம்.இப்பொழுது அவர் புற்றுநோயின் பிடியில் உள்ளார் என்று கேள்வி படுகிறோம்.கர்த்தர் அவரை சுகப்படுத்துவது மட்டுமல்லாமல் மெய்யான உலக இரட்சகரை அவர் அறிந்துகொள்ளவும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுவோம்.அது கிறிஸ்தவர்களாகிய நம்மேல் விழுந்த கடமையாகும்.... நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். மத்தேயு 5:44 உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.லூக்கா 6:28
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்