நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » » சிலுவையைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

சிலுவையைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்





அன்புக்குரிய இனையதள நண்பர்களே..! சிலுவை தெரியும் என்று சொல்லும் அநேகருக்கு சிலுவையைக் குறித்து தெரிந்திருப்பதில்லை. சிலுவையைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் வரலாற்றுச் செய்திகளையும் திருவிவிலிய வசன விளக்கங்களையும் இணைத்து  நீங்கள் பயன்பெரும் வண்ணமாக எழுதியுள்ளோம். படித்து பயன் பெறுங்கள்.
“சிலுவை” சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. (இச.21:23) திருவிவிலியத்தில் காணப்படும் “ஆமோஸ்” எனும் இறைவாக்கினர் வாழ்ந்த நாட்களில் கி.மு853-ல் “தைபோர்” எனும் ஆற்றங்கரையில் “ரோமுஸ்” என்பவனால் “ரோமாபுரி” கட்டப்பட்டதாக சரித்திரக் குறிப்பிட்டுள்ளதைக் காண்கிறோம். ரோமர்கள் “ஜூபிடர்” என்ற ஆண் கடவுளையும், “ஜூரிஸ்” என்ற பெண் தேவதையை மட்டுமல்லாமல், அநேக சிறு சிறு தேவர்களையும், தேவிகளையும் வழிபட்டு வந்தனர். அன்றும், இன்றும் ரோமர்கள் “லத்தீன்” மொழியைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ரோமர்களுக்கான கத்தோலிக்க சபைகளிலே லத்தீன் மெழியில்தான் பூசை நடத்துவார்கள்.
அவர்களுடைய சபைக்குப் போன நம்மவர்களும் லத்தீன் மொழியிலுள்ள அநேக வார்த்தைகள் தெரியும். இந்த ரோமர்கள், அவ்வப்போது போர் செய்து சிறிது சிறிதாக அநேகமான தேசங்களை தங்களது ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்தனர்.
கி.மு. 63ல் ரோமப் படை எருசலேமை நோக்கி வந்தது. ஆந்தப் படையெடுப்புக்கு பாம்பி என்பவன், ரோமப் படைக்குத் தலைமை தாங்கி வழி நடத்தி வந்தான் எருசலேம் பிடிக்கப்பட்டது, யூதேயாவை சீரிய மகான ஆட்சி அதிகாரத்திற்குட்பட்ட பகுதியாக்கினான்.  இந்தியாவை பல்வேறு அந்நிய நாட்டவர்கள். ஆளுகை செய்தது போல யூதர்களை, இயேசு பிறப்பதற்கு முன்னமே, ரோமர்கள் ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் தங்களது ஆட்சி அதிகாரத்திற்குள் இருக்கும் அந்த யூதமக்கள் புரட்சி போன்றவைகளில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.  உலகிலேயே மற்ற அனைவரையும் விட, ய+தர்கள்தான் வணக்கம் மற்றும் தொழுகைகளில் மிக தீவிரமாகவும் ஒழுக்கமாகவும், தனித்தும் இருப்பார்கள். கி.பி 570-களில் மெக்காவில் பிறந்த முகமது என்ற ஒட்டக வியாபாரி யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் பார்த்து வியந்து போனபடியால், இஸ்லாம் என்னும் மதத்தையே உருவாக்கிவிட்டார். யூர்கள் தங்கள் மார்க்க காரியங்களில் வேறு எவரும் தலையிடுவதை விரும்புவதில்லை என்பதை அறிந்திருந்த ரோமர்கள், யூத மக்களை சமாதானப்படுத்தி, உங்களுடைய இறைநம்பிக்கை மற்றும், தொழுகை காரியங்களில் நாங்கள் தலையிடமாட்டோம். என்று, ரோமர்கள் யூதருக்குள்ளே “கேர்கானஸ்” என்பவரை எருசலேம் தேவாலய தலைமை குருவாக ஏற்படுத்தி விட்டார்கள்.  கேர்கானஸ_ம் அவருக்குப்பின் வழி வழியாக வந்த தலைமை குருக்களும், தலைமைச் சங்கமும், யூத ஜனங்களை பக்தி மார்க்கத்தில் வழி நடத்தினார்கள். அவர்களுக்கு “மிஷ்;ணா” எனும் மார்க்க சட்டம் இருந்தது. மார்க்க ரீதியாக, இச்சட்டத்தை மீறுகின்ற யூதர்களுக்கான தண்டனையை தலைமை குருவும், தலைமைச் சங்கமும் தீர்மானித்தது.(யோவா.8:4, லூக்.22:66 யோவா.19:7) மரண தண்டனை போன்ற அதிகபட்ச தண்டனைக்குரியவர்களை ரோம அதிகாரிகளிடம் கொண்டு சென்று (யோவா.18:35) ரோமர்களது விசாரணைக்கு உட்படுத்துவார்கள். அரசு ரீதியாக யூதர்களை ஆளுகை செய்த ரோம அதிகாரிகள்தான், யார் ஒருவருக்கும், மரண தண்டனைக்கான தீர்ப்புச் செய்வார்கள்.(லூக்.23:14,22)
இந்தியாவில் தூக்கு தண்டனையைப் போன்று, பாரசீகர்களும், மேதியர்களும், சீரியர்களும் மரண தண்டணையை நிறைவேற்ற சிலுவையையேப் பயன்படுத்தினர். ரோம அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பல்வேறு நாடுகளும், மரணதண்டனையை நிறைவேற்றுவதற்காக சிலுவையைப் பயன்படுத்தினர்.
இன்றும் நாம் அநேக இடங்களில் சிலுவையைப் பார்க்கிறோம்.  “சிலுவை” அநேக ஊர்களிலும், கோவில்களிலும், தெருக்களிலும், வீடுகளிலும், வீட்டுச் சுவர்களிலும் பார்க்கிறோம். அநேகமாக, எல்லா விதமான கழுத்துகளில், கைகளிலும், விரல்களிலும், சிலருடைய காதுகளிலும் கூட, சிலுவை தொங்குகின்றது. சினிமாக்காரர்களும், குடிகாரர்களும், கொலை செய்கிறவர்களும், செய்யத் துணிந்த ரவுடிகள் கூட ஸ்டைலாக சிலுவையை தொங்க விட்டுள்ளனர். சிகரெட் பிடிப்பவர்களின் விரல்களிலும் கூட, சிலுவை மோதிரமாக இருப்பது பரிதாபமாக இருக்கிறது. திருட்டு அளவை (கள்ளத்தராசு) வியாபாரிகள் கூட லாபம் என்று எழுதி அதன் மேல் சந்தனக் குழம்பு சிலுவையை வரைந்து வைத்திருப்பது வேதனையானது. திருவிவிலியத்தில் எழுதப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள் முன் பின் பார்த்திராத இன்றைய கிறிஸ்தவ விவாஹங்களில், (விவாஹம் என்றால் தூக்கிக் கொண்டு ஓடுதல்) இன்று இந்துக்கள் என்று தங்களை அடையாளமிட்டுக் கொள்ளுகிறவர்களின் தாலிக் கலாச்சாரத்தைத் திருடி அதில் சிலுவையை டிசைன், டிசைனாக வடிவமைத்து, சிலுவையையே தாலியாக்கி தொங்க விடுவார்கள். சிலர் தங்களுடைய பெயர்களிலேயே சிலுவையை வைத்திருப்பார்கள். வயதில் பெரியவர்களும், பந்தா ஊழியர்களும், ஜெபித்து முடிக்கும் போதும், ஆசீர்வதிக்கும் போதும் தவறாமல், தலையில் சிலுவையைப் போடுவார்கள். பரிசுத்தவானாக இருந்தாலும், பாவியாக இருந்தாலும் கிறிஸ்தவன் என அழைப்பதற்கான உரிமையை வரி கொடுத்து, விலைக்கு வாங்கி விடுபவன்…,செத்த பின்பு எங்கும் சிலுவை மயமாகும் அத்துடன்;, அங்கி போட்ட ஒருவர் வருவார். அவர் அங்கியிலும் சிலுவை இருக்கும். அவரும் வெட்கமே இல்லாமல், பிணத்தின் மேல் உருவமாகவோ, சித்திரமாகவோ, இருக்கும் சிலுவையை பிணத்தோடு கூட பரிதாபமாய்ப் புதைத்து விட்டு, புதை குழிக்கு மேல் மரமோ, கல்லோ உலோகமோ, அழகான ஒரு சிலுவை, சுடுகாட்டின் அமைதிக்கு நடுவே அவலமாக நாட்டப்படும். வௌ;வேறு பொருட்களைக் கொண்டும், வௌ;வேறு உலோகங்களிலும், வௌ;வேறு வடிவங்களிலும் செய்யப்படுகின்ற சிலுவைகள் நம்மைச் சுற்றிலும் காணப்படுகின்றது. ஒரு சிலர் கைகளை முன்புறமாக நீட்டி காற்றில் சிலுவை போடுவதை பார்த்திருக்கிறோம்.  ஆக விரும்பியோ, விரும்பாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ எங்கும் எதிலும் சிலுவையை சந்திக்கிறோம். இந்த சிலுவைகளில் எந்த சிலுவை இயேசுவின் சிலுவை? எந்த சிலுவை கள்ளர்களின் சிலுவை? உங்களுக்குத் தெரியுமா? சரி தொடர்ந்து போவோம்.
கி.மு.27ல் ரோம ராயனாக “அகுஸ்து சீசர்” என்பவரும், யூதேயாவை உள்ளடக்கின சீரிய ஆளுநராக “குரேனியு-வும்” இருந்த நாட்களில்தான் யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற ஊரில் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிறந்தார்.(லூக்.2:1,2) இயேசு கிறிஸ்து தனது 30 வயது தொடங்கி இறைஅரசுக்கு ஜனங்களை ஆயத்தப்படுத்துவதற்கான அழைப்பு விடுத்தார். இயேசு பயணித்த வழிகளிலும் தன்னைத் தேடிவந்தவர்களுக்கும், சிலரை தேடிச் சென்றும், வியாதிகளை, வறுமைகளை, பிசாசுகளை, துரத்தினார். சிலரை மரணத்தின் பிடியில் இருந்தும் விடுவித்தார். ஜனங்கள் திரள், திரளாக இயேசுவுக்கு பின்னால் சென்றார்கள். யூத ஜனங்களுக்குப் பொறுப்பாளர்களாக ரோமர்களால் நியமிக்கப்பட்டு இருந்தவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் நடவடிக்கைகள் பயத்தை உண்டுபண்ணியது. காரணம் யூதர்களால் ரோம அரசாங்கத்திற்கு எதிராகப் புரட்சி வெடித்து விட்டால், தங்கள் சுகவாழ்க்கைக்கு பங்கம் வந்துவிடும் என பயந்தனர்.  எனவே ஆலய நிர்வாகமும், தலைமை குருவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். இயேசுவுக்குப் பின்னால் இருக்கும் பெருங்கூட்டம் ரோமர்களுக்கு எதிராக புரட்சி செய்து நமது பிழைப்பை கெடுத்து விடுவார்களோ என்று பயப்பட்டனரே தவிர இயேசு கிறிஸ்து போதித்த இறை அரசு என்பது என்ன? அது எப்படிப்பட்டது? அது யாருக்கு கிடைக்கும்? நமக்கு அது தேவையா? இல்லையா? என்பதையெல்லாம் யோசிக்காமல் இயேசு கிறிஸ்துவை அழித்துவிட துடித்தனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து உயிர்த்தெழ வேண்டும். (மத்.16:21) என்பது பரமதந்தையின் திட்டம் என்பதை அறியாமலேயே செயல்பட்டனர். தேவனால் நடத்தப்பட்டவர்கள், துக்கத்தோடு இவர்களுடைய செயல்களைப் பொறுத்துக் கொண்டனர்.
ரோம அரசாங்கம், மனிதனை வதைத்து கொலை செய்வதற்காக பல்வேறு அளவுகளில் சிலுவைகளை செய்து ஆயுதக்கிடங்குகளில் வைத்திருந்தார்கள். இந்த சிலுவைகளை லத்தீனில் குரூக்ஸ் (உசரஒ) என்றும் குரூஸ் என்றும் அழைப்பார்கள். சிலுவை என்பது இரண்டு மரணத்துண்டுகளால் ஆனது. அவை 1.நெடுமரம் என்றும் 2.குறுக்கு மரம் என்றும் சொல்லப்படும். இதன் உயரம் சுமார் 7 அல்லது 7.5 அடிக்குள் மட்டுமே இருக்கும். ஏனெனில் யோவா.19:29-ன்படி சிலுவையில் தொங்கின இயேசுவுக்கு தாகம் உண்டானபோது 1 அல்லது 2 அடி நீளம் மட்டுமே உள்ள ஈசோப்புத்தண்டில் புளித்த திராட்சரசத்தில் ஊறின கடற்பஞ்சை பொருத்தின ஒருவன் அதை இயேசுவின் வாய்க்கு நேரே நீட்டினான் என்ற வேத வசனத்தின்படி இது தரையில் நடப்பட்ட பின்பு ஒரு ஆள் உயரத்திற்கும் சற்றே கூடுதலாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். சிலுவை மரம் எப்போதுமே பாலீஸ் செய்யப்படுவது இல்லை. கரடு முரடாகவே இருந்தது. அடிக்கடி அநேகர் அவைகளில் கொல்லப்பட்டனர். அதை யாரும் சுத்தம் செய்யாததால், அவை எப்போதும் அசுத்தமாகவும், நாற்றமெடுக்க கூடியதாகவும் இருந்தது. அதில் கை கால்களில், அடிக்கப்படும் ஆணிகள் ஊடுருவுவதற்கான ஓட்டைகள் போடப்பட்டிருக்கும். தண்டனைத் தீர்ப்பு பெற்ற நபரை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு போகப்படும் முன்பு, தண்டனை நிறைவேற்றப்படும் இடத்தில் நெடுமரம் மட்டும் நடப்படும்.  பின்பு, ஆக்கினைத் தீர்ப்பு அடைந்தவர் குறுக்கு மரத்தை தோல்களில் வைத்து, சுமந்து வர வேண்டும். ஆனால் இயேசு கிறிஸ்துவையோ, இரண்டு மரத்தையுமே சுமந்து வரச்செய்தனர். அவ்வப்போது இப்படி நடப்பதுண்டு. இயேசுவின் நிலைமையோ முற்றிலும் மோசமானது. எழும்புத்துண்டுகளையும், இரும்புக் குண்டுகளையும், இரும்பினாலான கொக்கிளையும், இடை, இடையே இணைத்து பிண்ணப்பட்டிருந்த, சவுக்கினால் இயேசுவை, அடித்திருந்தனர். அந்த அடிகளினால். இயேசுவின் சரீரத்தின் சதைகளெல்லாம் பிய்ந்து, ஆங்காங்கே தொங்கியது. அந்த இடங்களிலெல்லாம் இரத்தம் சிந்தப்பட்டதால், ஏராளமான இரத்தம் வெளியேறி இருந்தது, அந்த நிலையிலும் சிலுவையை சுமந்து மிகக் கஷ்டப்பட்ட வேலையிலும், துரிதமாக நடக்க வேண்டுமென கட்டாயப்படுத்தி, அப்போதும் சவுக்குகளினாலும், தடிகளினாலும் தாக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் சோர்வடைந்து மேற்கொண்டு சிலுவை மரத்தை சுமந்து கொண்டு நடக்க இயலாதவரானார். எனவேதான் போர்ச்சேவகரும், ய+தர்களும் சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவரை, இயேசுவின் சிலுவையை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தினார்கள்.(மத்.27:32) தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு வந்தவுடன் இரண்டு மரத்தையும் இணைப்பார்கள். இது சுமார் 4;க்கும் மேல் வகைகளில் இணைக்கப் 1,நெடுமரத்தின் நுனியில், குறுக்கு மரத்தை இணைத்தல், 2,சற்று கீழே இணைத்தல், 3,சரியாக நடுவில் இணைத்தல், 4,நடுப்பாகத்தில் பொருத்தி பெருக்கல் குறி போன்று வைப்பார்கள்.
இப்படியாக, 4-க்கும் மேற்பட்ட முறைகளில் சிலுவை இருந்தது.
பெரும்பாலும் மரணத் தண்டணைக் குற்றவாளிகளின் கழுத்தில் ஒரு பலகையை தொங்கவிடுவார்கள். அதில், இவர் என்ன குற்றத்திற்காக மரண தண்டணை அடைகிறார் என்றக் காரணத்தை எழுதி இருப்பார்கள். ஆனால் நமது இரட்சகர் இயேசுவை அறைந்த பின்னர்தான் பிலாத்துவினிடத்தில் இயேசுவுக்கு தண்டனை கொடுத்ததற்கான விபரத்தை எழுதிப் போடும்படி யூதர்கள் சொன்னார்கள். அப்படியே, இயேசுவின் தலைக்கு மேலே “இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு” என்று இயேசுவின் தலைக்கு மேல் இருந்தப் பகுதியில் எழுதி வைத்தனர்.(மத்.27:37) என்ற வசனத்தின்படி, இயேசு கிறிஸ்துவை அறைந்த சிலுவை என்பது,
இப்படியாக இருந்தது என்று, நம்புகிறோம்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் பாடுபட்டார். நாம் அந்த இயேசுவைப் பார்;த்து பரிதாபப்பட வேண்டும் என்பதற்காக பாடுபடவில்லை. நாம் பாவத்தினால் நரகத்தில் பாடுபடாமல் தப்பிக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தினார். அந்த இயேசுவை ஏற்றுக்கொள்வோர் தப்பிக்கக் கூடும். சற்று விளக்கமாக பார்ப்போம் : மனிதர்கள் பாவத்தில் வாழ்ந்த போதும் அதைப் பாவம் என அறியாதவர்களாய், வாழ்ந்து வந்தனர். பாவத்துடன் வாழ்கிற எவரும் பரமதேவனிடம் நெருங்க முடியாது. காரணம் பரிசுத்தமில்லாமல் ஒருவனும் என்னிடம் வாரன். ஏன்பது கர்த்தரின் வாக்கு. பாவ மானிடரை மீட்கும்படியாகவும், பரமனோடு மனிதனை ஒப்புரவாக்க, யூதர் வழியாக இரட்சிப்பை ஏற்படுத்துவதற்காக தனது எல்லாவிதமான மேன்மையையும் நமக்காக துறந்து, இந்த பூமியிலே மனிதாகப் பிறந்து, எல்லாவிதங்களிலும் நம்மைப்போல வாழ்ந்த வந்தபோதும்  “என்னிடம் பாவம் உண்டு என்று உங்களுள் யாராவது என்மேல் குற்றம் சுமத்த முடியுமா?” (யோவா.8:48) என்று சொன்னவரும், அனைத்து மனிதர்களின் சுகவாழ்வை விரும்பினபடியால், ஏராளமான மனிதர்களின் பசியைப்போக்கி, கட்டுகளை நீக்கி, வியாதிகளை சுகமாக்கி, பிசாசுகளைத் துரத்தி, இயேசு கிறிஸ்து நம்மை மீட்கும் பொருளாக தம்மையே முழுமையாக கொடுத்ததுதான் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்.
இயேசுகிறிஸ்துக் காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலே அவருடைய கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தலைமை குருவின் மாமனான அன்னாவின் வீட்டிற்கும், (யோவா.18:13) தலைமை குருவான காய்பாவின் வீட்டிற்கும்,(யோவா.18:24) மாறி மாறி போர்ச்சேவர்களால் இழுத்துப் போகப்பட்டார். ஆசாரியன் இயேசுவை விசாரிக்கும்போது, இயேசுவின் பதில் நியாயமாக இருந்த போதும், ஆசாரியனுக்கு விசுவாசமான வேலைக்காரர்களில் ஒருவன் இயேசுவின் கன்னத்தில் காரணமே இல்லாமல் அடித்தான்.(யோவா.18:22) அந்த இரவில் ஆண்கள் பெண்கள் எல்லாரும் கூட்டம் கூடி, இரவு முழுவதும் இரக்கமுள்ள இயேசுவை கேலியும், கிண்டலும் செய்தனர். முகத்தில் காறித்துப்பினார்கள். தாடியைப்பிடித்து இழுத்தனர். கண்களை பொத்தி அடித்தார்கள். பரியாசமும், அடிகளும், அவமானங்களையும் அடைந்தார். காற்றையும் கடலையும் ஒரே சொல்லால் அடக்கியவர் (மத்.8:26) நமக்கு விடுதலை உண்டுபண்ணுவதற்காக, பாவமறியாத நம்முடையப் பரிசுத்தர், பாவிகளுடைய கைகளில் பாடுபட்டதுடன், பரிகாசப்படுத்தப்பட்டார்.
காலையிலேயே பிலாத்துவினிடமும், பின்னர் ஏரோதுவிடமும் நடுப்பகலில் மீண்டும் பிலாத்துவிடமும் மைதானத்தில் கால்பந்து மாறி, மாறி உதைக்கப்படுவது போல, இங்குமங்குமாக இயேசு இழுத்துச் செல்லப்பட்டார். குடைசியாக யூதர்களுடைய பிடிவாதத்தினால், வேறு வழியில்லாமல், இயேசுகிறிஸ்துவின் இரத்தப் பழியை யூதர்கள் தங்கள் மேல் ஏற்றுக் கொண்டு விட்டதால், பிலாத்து இயேசுவை சவுக்கினால் (கசை) அடிக்க ஒப்புக்கொடுத்தான்.(மத்.27:26) ரோமர்களுடைய சவுக்கின் நுனி ஒன்பது பிரிவுகளாக இருக்கும்.  ஒவ்வொரு நுனியிலும் ஒவ்வொரு எலும்புத் துண்டாக ஒன்பது எலும்புத் துண்டுகளும், அனைத்து எலும்புத் துண்டிலும் ஒரு இரும்பு கொக்கியும் இருக்கும்.  அந்த சவுக்கால் ஒருமுறை அடிக்கப்படும் போது ஒன்பது இடங்களில் காயம் ஏற்படும், சில இடங்களில் தோலும், மாமிசமும் பிய்க்கப்படும். அதனால் மிக அதிகமான வேதனை உண்டாவதுடன், அதிக அளவு இரத்தமும் வெளியேறும்.
யூதர்களுடைய தண்டனைக் கணக்குப்படி 40 அடிகளும் ரோமருடைய கணக்குப்படி 80 அடிகளும் அடிப்பார்கள்.  பிலாத்து உத்தரவின் காரணமாக ரோமக் கணக்குப்படி அந்தக் கொடூரமான சவுக்கினால் 80அடிகள் அடிக்கப்பட்டிருக்க வேண்டும்.  யூதர்கள் சில சமயங்களில் 40 அடிகள் அடிக்கும் தண்டனை உத்தரவு பெற்று, 39 அடிகள் அடித்து விட்டு, நிறுத்தி சற்று ஒய்வெடுப்பார்கள் திரும்ப அடிக்கும் போது ஒன்று இரண்டு என்று எண்ணத் துவங்குவார்கள். (2கொரி.11:34)
போர்ச்சேவகர் கூட்டம் முழுவதும் கூடிவந்து வாரினால் அடித்த போது இயேசுவின் முதுகு உழுது போடப்பட்ட வயல் நிலத்தைப் போல இருந்தது.  அவருடைய உடல் முழுவதும் இரத்தமே ஆறாக ஓடியது.  ஆடைகளை கழற்றினபோது வேதனையை வர்ணிக்க முடியுமா? ஒருவித முட்கள் நிறைந்த கொடியை வளையமாகப் பின்னி கிரீடம் போல செய்து இயேசுவின் தலையில் வைத்து ஒரு கோலால் அடித்து அதை தலையிலே இறுக்கமாக்கி வைத்தார்கள்.(யோவா.19:1-3)இஸ்ரவேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் காணப்படும் அந்த முட்கள் ஒன்று அல்லது ஒன்றரை அங்குல நீளம் இருக்கும். இயேசுவின் முகத்திலே துப்பினார்கள.(மத்.27:27-31) அவரது தலையில் இருந்து பீறிட்டு வந்த இரத்தம் கண்கள் வழியாக கன்னத்தில் ஓடி தோளிலும் மார்பிலும் இறங்கியிருக்கும். அதோடு போhச்சேவகர்களுடைய எச்சிலும் கலந்து எத்துணை கொடூரமானது ? நண்பரே இவை அனைத்தும் நமக்காக…, அவருடைய தலை முடி உறைந்து போன இரத்தத்தோடு முட்களுக்குள் சிக்கி இறுக்கியிருக்கும்.  கன்னத்தில் அறைந்து பிடுங்கப்பட்ட தாடிமயிர் போக மீதி முடிகள் முகத்திலும், தலையிலும் இருந்து வழிந்த இரத்தத்துடன பசைபோல ஒட்டி…, இதை எழுதும்போதே எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியினிமித்தம் எனது கைகள் மிகவும் நடுங்குகின்றன. இயேசுவே…! எங்களை பரிசுத்தமாக்கி, உமது ஜனங்களாக மாற்றுவதற்காகத்தானே இத்தனை பாடுகள்.
தேவாலய காவலர்களும், ரோம அரசின் போர்சேவகர்களும், பாரமான சிலுவை மரங்களை இயேசுவின் மீது ஏற்றும்படி செய்து, அதை சுமந்தபடி நடக்க முடியாமல் தட்டு,தடுமாறி நடந்த இயேசுவை  கொல்கதா மலைக்கு இழுத்துச் சென்றனர். சவுக்கடிகளினால், கிழிக்கப்பட்ட இயேசுவின் முதுகு கரடுமுரடான சிலுவையினால் மேலும் அழுந்தி, கிழிந்து எரிச்சலுடன் கூடிய வலி உண்டாக்கி இருக்கும். அத்துடன், பல தடவைகள் இயேசு கீழே விழுந்திருந்தால், உடல் முழுவதும் ஒட்டியிருந்த மண் அந்தக் காயங்களில் உரசி வேதனையை ஏற்ப்படுத்தியிருக்கும். கொல்கதா மலையில் சிலுவையின் இரண்டு துண்டுகளையும் இணைத்து இயேசுவை கிடத்தி, கைகால்களை, கயிறு கொண்டு கட்டின பின்பு முதலில் ஒரு கையில் ஆணி அடித்த போது சிலுவையில் உள்ள ஓட்டை வழியே மறுபக்கம் வந்திருக்கும்.  அடுத்த கையில் ஆணி அடிக்க ஓட்டைக்கு பொருத்தமாயிராமல் இருக்குமானால், இயேசுவின் கையில் கயிறு கட்டி உடலில் ஒரு காலை வைத்து மிதித்துக் கொண்டு கயிறை பிடித்து இழுத்து ஓட்டைக்கு நேராக கைகளில் ஆணி அறைந்திருப்பர்கள். இப்படி செய்வதுதான் வழக்கம் என ரோம தண்டனை நிறைவேற்றுகிற விபரம் கூறுகிறது. அப்படி கயிறை கட்டி இழுப்பதால், தோள் பட்டையின் உட்பகுதிகள் கிழிந்துபோகும். அதனால் இன்னும் வேதனை கடுமையாகியிருக்கும். கைகளின் நடுப்பகுதியில் தடித்த ஆணிகளை அறைவதால், ஒவ்வொரு அடியினாலும் வேதனை…, ஆணிகள் அறைந்த பின்பு, சிலுவையை புரட்டிப் போட்டு, ஊடுருவிய ஆணிகளை வளைத்து விடுவார்கள். அந்நேரத்தில் இயேசுவின் முகமும், மார்பும் தரையில் பதிந்திருக்க, இயேசுவின் முதுகின் மீது பாரமான மரச் சிலுவை அழுத்திக் கொண்டிருக்கும். நிலையில் அந்த தடித்த ஆணியை வளைப்பதற்காக சுத்தியலைக் கொண்டு ஓங்கி அடித்த ஒவ்வொரு அடிகளினாலும் முகமும், மார்பும் மண்ணுக்குள் புதைந்து மூச்சுத் திரணியிருக்கும் மீன்டும், பழைய நிலைக்கு புரட்டியபோது இரத்தமும், மண்ணும் கலந்து இயேசு கிறிஸ்துவின் தோற்றம் படுபயங்கரமாக காட்சியளித்தார்.(ஏசா.53:2) ஆனால்.., சிலுவையில் அறையப்பட்ட இயேசு என்றுச் சொல்லி படத்தை வரைகிறவர்கள், அதையும் அழகாகவே வரைந்து வைத்திருக்கிறார்களே ஏன்? என்று சிந்தித்துக் கேள்வியெழும்பினபோது, இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள அன்பினால் என்று காரணம் காட்டினால் அது பொய் என்பதை புரிந்து கொண்டேன். ஏனெனில், இயேசுவின் சிலுவை மரணம் சகித்துக் கொள்ளவும் முடியாத கொடூரமாக இருக்கையில், அதை ஒரு சித்திரம் வரைந்து முற்றிலும் மறைத்து விட்டார்களே..! இதைத்தான் பிசாசின் தந்திரங்களில் ஒன்று என அறிந்து கொள்கிறோம். ஏனெனில், இயேசுவை சிலுவையில் அறைந்தவர்கள் மிகுந்த மரியாதையுடன் அறையவில்லை. எனவே எல்லாரையும் சிலுவையில் அறைந்தால் எப்படி அறைவார்களோ அப்படித்தான் அறைந்தார்கள். இயேசுவை நிர்வாணமாகவே சிலுவையில் அறைந்தனர். என சரித்திரக் குறிப்புகள் சொல்கின்றது. ஆணி அறையப்பட்ட பின்னர் நெடுமரத்தின் அடிப்பகுதியை குழிக்குள் இறக்கினபோது, தரைக்குள் மரத்தின் அடிப்பகுதி தட்டும்போது, மிகுந்த அதிர்வு ஏற்பட்டது. மூன்று ஆணிகளுக்குள் அவரது உடல் அங்கும் இங்கும் அசைந்து, கடுமையான வேதனையை ஏற்படுத்தி, நாக்கு வறண்டு மேல் பகுதியில் ஒட்டி.., அப்பப்பா? பாடுகளின் உச்சகட்டம். நமக்காக இயேசு அனைத்தையும் தாங்கினார்.
வெண்மையும், சிவந்த நிறமுமுடையவர், பாலினால் கழுவப்பட்ட கண்களைப் போன்ற கண்களை உடையவர்.  சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலிமலர், என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டவர்.  இப்போதோ அழகுமில்லை.  நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கு இல்லை.  அவரைக் கண்டவர்கள் பிரம்மித்து முகத்தை மூடிக்கொண்டார்கள். (ஏசா.53:2,3,5,7,9,12) அந்த அளவுக்கு அவரது முகம் கொடூரமாக இருந்தது. அந்தத் தோற்றத்தை சித்திரத்தில் தீட்ட முடியாது.
இத்தனை அடிகளும், வேதனைகளும், அவமானங்களும், சிந்தப்பட்ட இரத்தம் முழுவதும் யாருக்காக? “நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு பாவம் அறியாத அவரை (இயேசுவை) பாவ நிலை ஏற்கச் செய்தார். (2கொரி.5:21) இந்த இயேசுவைக் கண்டு நாம் பரிதாபப்பட்டு அழ வேண்டும் என்பதற்காக, அவர் பாடுபடவில்லை.  மனிதனை படைத்த நமது ஆண்டவர் பரிசுத்தமானவர், மனிதகுலம் அனைத்தும், பரிசுத்தமாக அவரை சேர வேண்டும் என்பதற்காகத்தான் சிலுவைப் பாடுகள். (1பேது.1:16 எபி.10:10) எனவே பாவத்தை விட்டு பரிசுத்தரிடம் வருவதற்காகவே அழைக்கிறார்.
தேவ சாயலில் படைக்கப்பட்ட நாம் நரகத்தில் நிலையான வேதனை அனுபவிக்கக் கூடாது என்பதற்காகவே அனைத்து ஆற்றலுமுள்ள இயேசு தன்னால் படைக்கப்பட்ட படைப்பினங்களில் ஒருவராகிய மரியாளிடமே மகனாக பிறந்து, வாழ்ந்து காட்டியதெல்லாம்.., இதை வாசிக்கிற நமக்காகவே, இயேசுவின் பாடுகள் எனக்காக எனச் சொல்லுங்கள்.
அனைத்துப் பாடுகளையும் ஏற்றுக் கொண்டு தமது ஜீவனை தானே கொடுத்து மூன்றாம் நாளில் தாமே உயிர்த்தெழுந்தார். (மாற்.10:45 1பேது.3:18) இவ்வுலகில் இருக்கும் நாம் ஒவ்வொருவரும் மீட்படைந்து பரலோகம் போக வேண்டும்.   அங்கே இயேசு கிறிஸ்துவோடு நிலை வாழ்வு வாழு வேண்டும் என்பதற்காகவே இயேசு கிறிஸ்து சிலுவையில் நமக்காக அறையப்பட்டார். வெற்றி சிறந்தார். (கொலோ.2:14,15)

மீட்படைந்தால் தான் பரலோக நிலை வாழ்வு.

 மீட்படைதல் என்றால் என்ன? இயேசு சொன்னார்” நம்பிக்கை கொள்ள வேண்டும்.  அதன் பின்னே திருமுழுக்கு பெற வேண்டும்.  அவர்தன் மீட்பு பெற்றவர்.  நம்பிக்கை என்றால் என்ன என்றே தெரியாத போது எடுக்கப்பட்ட திருமுழுக்கு மீட்பை தருவதில்லை. மாறாக தண்டனை தீர்ப்பை பெறுவர் (மாற்.16:16) மீட்பு பெறுவதற்கு இயேசு எனும் பெயரைத் தவிர வேறு எந்த பெயரும் இல்லை. வேறு எவரும் இல்லை (தி.தூ.பணி. 4:11,12) இறைவார்த்தைகள் என்றும் அழியாதவை. (மாற்.13:31) என்பது மட்டுமல்ல “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றுமே மாறாதவர். (எபி.13:8) என்பதை திருவிவிலியம் நமக்கு தெரியப்படுத்துகிறது.
சிலுவைப் பாடுகளை தியானிக்கும்  ஒவ்iவாருவரும், நாம் பரலோகம் போவதற்கான தகுதியைப் பெறுவதற்காகவே இயேசு கிறிஸ்து கொடூரமான இந்த சிலுவையை ஏற்றுக் கொண்டு சிலுவையில் வெற்றி அடைந்தார். (கொலோ.2:15) என்பதை புரிந்து கொண்டு, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்று, இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நாம் ஆயத்தமாக வேண்டும். இயேசு கிறிஸ்து சொன்னார். “வழியும் உண்மையும், வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.” (யோவா.14:6) பிரியத்துக்குரியவர்களே…! இயேசுவை நம்புங்கள். அவரையும், அவரது வார்த்தைகளையும் மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். அதை உங்கள் வாழ்வில் செயல்படுத்துங்கள். இதோ இயேசு சீக்கிரம் வரப்போகிறார் எனவே அதற்குள் ஆயத்தமாகுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
     (revivo தளத்தில் வெளியான கட்டுரை)  
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்