நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » த டாவின்ச்சி கோட்

த டாவின்ச்சி கோட்

                                                      பொய்களின் புத்தகம்

2003ம் ஆண்டு கதாசிரியர் டன் பிரவுன் எழுதிய புத்தகம் தான் "த டா வின்சி கோட்". இதுவரைக்கும் 40 மில்லியன் பிரதிகளுக்கு மேலாக விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது.  அப்படி இந்த புத்தகத்தில் என்ன தான் உள்ளது?   டா வின்சி கோட் புத்தகம் அநேகரை கிறிஸ்தவத்தை பற்றி வித்தியாசமாக தவறாக சிந்திக்க வைக்கின்றது. அதனால் தான் இந்தளவு வரவேற்பா ?



புத்தகத்தில் அடங்கியுள்ள சில விடயங்கள்

இயேசுவும் மரியாளும் கணவன் மனைவி, அவர்களுக்கு குழந்தை இருந்தது. இயேசுவின் வம்சாவழியினர் இப்போதும் பிரான்ஸ்-இல் வாழ்கின்றனர்.
இப்படி ...பல

டன் பிரவுன் டா வின் சி கோட் புத்தகத்தை எழுதுவதற்கு  உதவிய பல புத்தகங்களில் சில:
The Holy Blood and the Holy Grail (1982),  The Messianic legacy (1983), The Templer Revalation (1997), Goddes in the Gospel ( 1988) , Mary Magdalane and the Holy Grail, Beyond god the Father (1973),The Methaethics of Radical Feminism (1978).

டா வின்சி கோட்: லியானார்டோ டா வின்சி வரைந்த இராப்போஜன படத்தில் இயேசுவிற்கு அருகே இருப்பது யோவான் இல்லை, மகதலேனா மரியாள் என்று.

பதில்:லியானார்டோ டா வின்சி வாழ்ந்த காலம்; கி.பி 1452 - 1519. லியானார்டோ டா வின்சிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தெரியாது. கிறிஸ்துவின் சீஷர்கள் எப்படி இருந்தார்கள், அவர்கள் எப்படிபட்ட உடை உடுத்திருந்தார்கள் என்றும் தெரியாது. யோவான் வயதிலே மிகவும் இளமையாக இருந்தபடியால் டாவின்சி Nயுhவானை வரையும்போது "தாடி, மீசை" இல்லாமல் வரைந்தார். லியானார்டோ டாவின்சியின் வழக்கம் அது, இளமையானவர்கள் என்று அடையாளம் காட்டுவதற்காக மீசை, தாடி இல்லாமல் நீண்ட தலைமுடியுடன,; மென்மையான முகமாக வரைவது ...

யோவானை மட்டுமல்ல, யோவன் ஸ்நானகனை கூட டாவின்சி மீசை, தாடி இல்லாமல் நீண்ட முடியுடன் தான் வரைந்திருக்கின்றார். ஆதாரம் இந்த படங்களை பாருங்கள்.


இராப்போஜனம்(படம்)   யோவான்(படம்) 
  

 யோவான் ஸ்நானகம்(படம்)
 





அந்த படத்தில் இருப்பது மகதலேனா மரியாளகவே இருக்கட்டும், அப்படி என்றால் அந்தப்படத்தில் யோவான் எங்கே? மற்ற சீஷர்கள் இருக்கும் போது யோவான் எங்கே போய்விட்டார்?


டா வின்சி கோட்:  இந்த பாறையின் மேல் என் வீட்டை கட்டுவேன் என்று இயேசு கிறிஸ்து பேதுருவை குறித்து அல்ல மகதலேனா மரியாளை குறித்தே சொன்னார்: (p. 248) இயேசு கிறிஸ்து தன்னுடைய சபையின் எதிர்காலம் மகதலேனா மரியாளின் கைகளில் தான் இருக்கின்றது என்று எண்ணினார்.(p. 248)

பதில்: இயேசு கிறிஸ்து பேதுருவுக்கு அந்த வசனத்தை சொல்லும் பொழுது " இந்த பாறை " என்று சொன்னார்.. அது பேதுருவை குறித்து அல்ல, மாறாக தம்மைக்குறித்தே அப்படி சொன்னார். (மத்தேயு 16: 18) அவரே சபைக்கு மூலைக்கல்லாக இருக்கின்றார். (எபேசியர் 2: 20) பேதுருவோ, மகதலேனா மரியாளோ அல்ல. 1பேதுரு 2: 7ல் பேதுருவே அதற்கு சாட்சி கொடுக்கின்றார்.


டா வின்சி கோட்: 80 க்கும் மேற்பட்ட சுவிசேஷங்கள் இருந்தன, இப்போது நான்கு சுவிசேஷங்கள் மட்டும் தான் இருக்கின்றது. (மத்மேயு மாற்கு, லூக்கா, யோவான்)      

பதில்: உண்மையில் இது ஒரு மடமைத்தனமான கருத்து, கனோனால் தெரிவு செய்யப்பட்ட நான்கு சுவிசேஷங்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) தவிர்த்து, இன்னும் வேறு 12 சுவிசேஷங்கள் தான் அந்த நேரத்தில் உலாவி வந்தது. ஆனால் அவைகள் சரியாக தெய்வீக வழிகாட்டுதலை அறிவிக்கவில்லை. அவைகளுடன் Gnostic சுவிசேஷமும் பிற்காலங்களில் வந்தது. ஆனால் அவைகள் எழுதப்பட்ட காலங்கள் மிகவும் பிந்தியதால் அவைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
ஆதி சபை காலத்தில் கிறிஸ்தவர்களின் மத்திய இடங்களாக எருசலேம், கொரிந்து, அலெக்ஸாந்திரியா மற்றும் ரோமாபுரி காணப்பட்டது. இங்கே அவர்கள் இந்த நான்கு சுவிNசுஷத்தையும் ஏற்றுக்கொண்டார்கள்.
கி.பி 95- 170க்கும் முன்பு வாழ்ந்த கிறிஸ்தவ தலைவர்கள் இந்த நான்கு சுவிNசுஷங்களையும் தான் பாவித்து வந்தார்கள்.

க்ளெமென்ட்(Clement):
ரோமாபுரியிலிருந்த சபையில் கி.பி 95 அளவில் மூப்பராக இருந்தவர், இவர் கொரிந்து சபைக்கு எழுதிய கடிதத்தில் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நிருபங்களிலிருந்து வார்த்தைகளை எடுத்து எழுதினார்.

பப்பியாஸ்(Papias): 
 இவர் ஒரு பிஷப். இவர் எழுதிய புத்தகம் நுஒpழளவைழைn ழக ழுசயஉடநள ழக வாந டுழசன . இவர் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஜஸ்ரின் மார்டிர் (Justin Martyr):
இவர் கி.பி 140 வேதாகமத்தில் 4 சுவிசேஷங்களைப்பற்றியும் எழுதினார்.

பொலிகார்ப் (Polycarp):
இவர் அப்போஸ்தலர் யோவானின் சீஷன். கி.பி 150ல் வாழ்ந்தவர். இவர் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா சுவிசேஷங்களை இயேசுவின் வசனங்களாக குறிப்பிட்டிருக்கின்றார்.

இரேனியுஸ் (Ireneus):
இவர் பொலிகார்ப்பின் சீடர். கி.பி 170ல் இவர் மேற்கோள் காட்டி புதியேற்பாட்டின் 23 புத்தகங்களை எழுதினார். இவர் தவறவிடப்பட்ட புத்தகங்கள் பிலேமோன், யாக்கோபு, 2 பேதுரு, 3 யோவான்.

பப்பிரஸ் 45: கி.பி 200ஐ சார்ந்தது. 4 சுவிசேஷங்களையும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
The Muratorian Fragment: கி.பி 175ஐ சார்ந்தது. இதிலும் 23 சுவிசேஷங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

டா வின்சி கோட்: சவக்கடல் சுருள்கள் 1950ல் கண்டுபிடிக்கப்பட்டது.

பதில்:சவக்கடல் சுருள்கள் 1947ம் ஆண்டுதான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிற்பாடு ஆய்வாளர்கள் தொடர்ந்து அங்கே அகழ்வாராய்ச்சி செய்தார்கள்.
டா வினசி கோட்: கி.பி 1099ல் பிரான்ஸ் அரசன் ஒருவனால் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இரகசிய சங்கமான "Priory of Sion".  அங்கே இயேசுவின் வம்சம் பற்றிய தகவல்களையும், மகதலேனாவைப்பற்றிய தகவல்களையும் பாதுகாக்கும்படி உருவாக்கப்பட்டது.

பதில்:கி.பி 1956ம் ஆண்டு தான் "Priory of Sion" பிரான்ஸ் நாட்டை சார்ந்த Pierre Plantatard என்பரவால் சவிஸில் உள்ள ஜெனிவாவுக்கு அருகே ஆரம்பிக்கப்பட்டது. சியோன் என்பது ஜெனிவாவில் உள்ள சிறு மலை. எருசலேமில் உள்ள சீயோனை குறிக்கவில்லை.

டாவின்சி கோட்: சாலமோன் தேவாலயத்தில் கட்டப்பட்டிருந்த மகா பரிசுத்த ஸ்தலத்தில் வந்து இறங்கிய ஷெக்கினா என்பது யெகோவா தேவனுக்கு இணையான ஒரு பெண் சக்தி.

பதில்: இது உண்மையில் மடமைத்தனம், ஷெக்கினா  என்பது யெகோவா தேவனுடைய மகிமை. வேதம் சொல்கின்றது, ஒரே ஒரு கடவுள் தான். வேறு கடவுள்கள் இல்லை என்று.

புத்தகத்திற்கும் வேதாகமத்திற்கும் உள்ள வேறுபாடுகள்
டன் பிரவுன் எழுதிய புத்தகத்தில் "ஆதாரம் அல்லது உண்மை" என்று அவரால் குறிப்பிடப்பட்ட அவர் எழுதிய தவறுகளினுள் ஒரு சில இங்கே.
 

டாவின்சி கோட்

வேதாகமம் 

இயேசு கிறிஸ்துவை ஒரு மனிதனாக, அல்லது மாபெரும் தீர்க்கதரிசியாகத்தான் ஆதி அப்போஸ்தலர்கள் காலத்தில் கிறிஸ்தவர்கள் நம்பினார்கள்.கி.பி 325ல் நைசீயாவில் நடந்த மாநாட்டில் தான் தான் இயேசு கடவுளின் தன்மை உடையவரென்;று பிரகடனப்படுத்தினார்கள். இயேசு கிறிஸ்து 7 தடவைகள் புதியேற்பாட்டில் தேவன் அல்லது கடவுள் (வாநழள) என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றார். கர்த்தர்(மலசழள) என்று அநேகம் தடவவைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றார். எந்தவொரு சரித்திர ஆசிரியரும் புதியேற்பாட்டின் காலத்திற்குப்பிறகுதான் நைசீயா சபை காலப்பகுதி என்பதை ஏற்றுக்கொள்வார்கள்.   வேதாகம ஆதாரங்கள்: Click Here

டாவின்சி கோட்

சரித்திரம்

இன்று நாம் வைத்திருக்கும் வேதாகமம் கொன்ஸ்டன்டைன் மன்னனால் ஒன்றாக சேர்க்கப்படுமுன் சீர்பார்க்கப்பட்டது. (p. 231)வேதாகமம் கொன்ஸ்டன்டைன் மன்னன் காலத்;தில் ஒழுங்கமைக்கப்படவில்லை. (கி.பி 337 கொன்ஸ்டன்டைன் மரணம்) பழையேற்பாடு இயேசு காலத்திலேயே இருந்தது. புதியேற்பாடு கி.பி 90- 100 களிலேயே ஒன்றாக வந்துவிட்டது.

டாவின்சி கோட்

சரித்திரம்

ஏதாவது சுவிசேஷத்தில்; இயேசு கிறிஸ்துவை உலகவாழ்க்கையில் பற்றுள்ளவராக (மனுஷீக தன்மையுடையவராக) சித்தரிக்கப்பட்டிருந்தால் அவ்விடயங்கள் வேதாகமத்திலிருந்து  நீக்கிவிடப்பட்டது (p. 244) புதியேற்பாடு இயேசுகிறிஸ்துவின் மனுஷீக தன்மையை எங்களுக்கு எடுத்துக்காட்டுகின்றது. (அவர் தாகமாக இருந்தார், பசியாய் இருந்தார், களைப்பாக இருந்தார், கண்ணீர் வடித்தார்... அவர் மரித்ததர், அன்பாக இருந்தார்)

டாவின்சி கோட்

சரித்திரம்

சவக்கடல் (கும்ரான்) சுருள்கள் மற்றும் நாக் ஹம்மடி சுருள்களும் தான் கிறிஸ்தவர்களின் ஆதி குறிப்புகள் (பதிவுகள்)சவக்கடல் சுருள்கள் கி.மு 250 - கி.பி 100 களில் எழுதப்பட்டுள்ளது என்று அதன் காலம் கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுருள்களில் கிறிஸ்துவின் போதனைகளோ, அல்லது சுவிசேஷமோ இல்லை. கும்ரான் :Click Here
நாக் ஹம்மடியில் கண்டுபிடிக்கப்பட்ட  சுவிசேஷங்கள் அனைத்தும் கி.பி 150 - 300 ஆண்டுகளை சார்ந்தவை. புதியேற்பாடு முழுவதும் இவைகளுக்கு முற்பட்ட காலத்திலேயே எழுதப்படவிட்டது.
புழெளவiஉ: என்பது கி.பி 1- 2ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு சமயப்பிரிவு. இவர்கள் இயேசு கிறிஸ்துவின் போதனைகளுடன் வேற்று மத போதனைகளையும் கைக்கொண்டார்கள், இவர்கள் எழுதிய புத்தங்கள் தான் நாக் ஹம்மடியில் கண்டுபிடிக்கப்பட்ட Gnostic Gospel 
நாக் ஹம்மடி Click Here

 

டாவின்சி கோட்

 

சரித்திரம்

கொன்ஸ்டன்டைன் மன்னனால் புதிய வேதாகமம் ஒன்றை உருவாக்கும்படி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அவர்கள் வேதாகமத்திலிருந்து இயேசுவின் மனுஷீக தன்மைகளை நீக்கி கடவுளின் தன்மையுடையவராக சித்தரித்தார்கள். ஆதியில் எழுதப்பட்ட சுவிசேஷங்கள் மக்களிடத்திலிருந்து பறிக்கப்பட்டு தீயில் எரிக்கப்பட்டது. (p. 234) முதலாவது: கொன்ஸ்டன்டைன் மன்னனால் புதிய வேதாகமம் உருவாக்க வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்படவில்லை. மாறாக ஏற்கனவே இருந்த எல்லாராலும் அங்கீகரிக்கப்பட்ட வேதாகம பகுதிகளிலிருந்து 50 பிரதிகள்  உருவாக்கும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இரண்டாவது: யாராவது வேதாகமத்தை மாற்றி அலங்கரித்து எழுதியதாக சரித்திரம் இல்லை.
மூன்றாவது: எந்தவொரு சுவிசேஷமும் கொன்ஸ்டன்டைன் மன்னனால் எரிக்கப்படவில்லை. மாறாக ஆரியுஸ் என்பவர் எழுதிய ஆக்கங்கள் தான் எரிக்கப்பட்டது, அவைகள் சுவிசேஷம் அல்ல.
நான்காவது: மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் இவைகளுக்கு முன்பு எந்தவொரு சுவிசேஷமும் எழுதப்படவில்லை.
இறுதியாக: வேதாகமம் இயேசுகிறிஸ்துவின் மனுஷீக தன்மைகளை எங்களுக்கு எடுத்துக்காட்டுகின்றது. அவர் 100%  மனிதனாகவும் 100% கடவுளாகவும் இருந்தார் என்பதை தெளிவாக விளக்குகின்றது..

 

டாவின்சி கோட்

 

சரித்திரம்

லியானார்டோ டா வின்சி வரைந்த மொன-லிசா ஓவியம் ஒரு பெண் தெய்வம். மொனலிசா என்கின்ற பெயர் இரண்டு எகிப்திய கடவுள்களுடைய பெயர்களிலிருந்து உருவாகியது. அமோன்: (ஆண் தெய்வம்) இசிஸ்: (பெண் தெய்வம்) எகிப்திய புரதான காலத்து எழுத்துக்களில் லிசா என்று இசிஸ் அழைக்கப்பட்டிருக்கிறது. மொனாலிசா எனும் பெயருடைய அர்த்தம் என்னவென்றால்: "எழுத்துக்கள் மாற்றியமைக்கப்பட்ட" தெய்வீகமான ஆண், பெண் பெயர்கள்.லியனார்டோ டா வின்சி தன்னுடைய படங்களுக்கு எந்தவொரு தலையங்கமும் கொடுக்கவில்லை. ஜோர்ஜியோ வசாரி (georgio vasari "1550") எனும் எழுத்தாளர் தான் தன்னுடைய புத்தகத்தில்  மொன லிசா என்று படத்திற்கு பெயர் சூட்டினார். ஆரம்பத்தில் Monna Lisa  என்று தான் இருந்தது. பிற்காலத்தில் ஆங்கிலேயர்களால் MonaLisa என்று அழைக்கப்பட்டது. அதனுடைய அர்த்தம்: சீமாட்டி லிசா (Madame Lisa)

 

டாவின்சி கோட்

 

சரித்திரம்

மிகவும் சங்கடமான விடயம் என்னவென்றால், இயேசு கிறிஸ்துவும் மகதலேனா மரியாளும் திருமணம் செய்ததாக டன் பிரவுன் கூறுவது. (p. 244)எந்தவொரு gnostic சுவிசேஷமும்; இயேசு கிறிஸ்து மகதலேனா மரியாளை திருமணம் செய்ததாக சொல்லவில்லை. டன் பிரவுன,; தன்னுடைய கதைப்புத்தகத்திற்கு ஆதாரமாக எடுத்துக்கொண்ட வசனம். பிலிப்பு சுவிசேஷத்தில் உள்ள companion  எனும் வார்த்தை.. பிலிப்பு சுவிசேஷம் Click Here

 

டாவின்சி கோட்

 

சரித்திரம்

YHWH எனும் பரிசுத்தமான கடவுளுடைய பெயர் JEHOVA எனும் சொல்லில் இருந்து உருவாகியது. (p. 309)YHWH எனும் பெயர் Jehovah எனும் பெயரிலிருந்து தோன்றவில்லை. அதற்கு மாறாக Jehovah எனும் சொல் தான் YHWH எனும் சொல்லில் இருந்து தோன்றியது. Jehovah எனும் பெயர் கி.பி 1278ல்; ஸ்பானிய துறவி ரேய்மொன்ட் மான்டினி என்பவர் எபிரேயு வேதாகமத்திலிருந்து லத்தீன் மொழியில் சில பகுதிகளை மொழி பெயர்த்ததர். அவர்தான் YHWH  எனும் பொயரை Iéhouah என்று மொழிபெயர்த்தார். கி.பி 1518ல் Petrus Galatinus என்பவர் தன்னுடைய புஸ்தகத்திலே Jehova என்று எழுதினார். கி.பி 1530 அளவில் வில்லியம் ரென்டேல் என்பவர் மோசேயின்; 5 ஆகமங்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்பொழுது Jehova என்று மொழிபெயர்த்ததர்.

டன் பிரவுன் எழுதியவைகள் எவ்வளவு பொய்கள் நிறைந்தது என்று நீங்கள் பார்த்தீர்கள், வேதம் சொல்லுகின்றது " பிசாசு பொய்களின் தந்தை என்று. டன் பிரவுன் எத்தனை பொய்களை இணைத்து எழுதினாலும் வேதம் உண்மை. அது சத்தியம். வேதம் சொல்லுகின்றது, சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் என்று.
                                                       இது தமிழ் கிறிஸ்து தளத்தின் கட்டுரை.
Share this article :

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

very very thank you for the information brother... surley god will bless you...

robert dinesh சொன்னது…

thank u brother

SeemonRaj S சொன்னது…

Hello Brother,

Thank you for the very useful info. But on a couple of instances , your answers are really not convincing

Thanks,
Seemon

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்