இன்று உலகில் காட்சிக் கிறிஸ்தவர்கள் அதிகரித்து விட்டனர்.
உள்ளத்திலே நாற்றம் வெளியே வாசனைச் சாயத்தை பூசிக் கொள்கின்றனர்.
உள்ளத்திலே வெறுமை வெளியே ஆவியில் நிறைந்துள்ளதாக ஒரு வேஷம்.
ஆலயம் வந்தால் அந்நிய பாஷை வீட்டுக்கு போனால் தூஷண வார்த்தை
சினிமா படமே பார்ப்பதில்லை ஆனால் அவர்களே மகா நடிகர்கள்.
இது ஒரு வகையான காட்சிக் கிறிஸ்தவர்கள்
மனுஷர் முன்பாக பரிசுத்தவானாக தன்னை காட்டிக் கொள்ளும் காட்சிக் கிறிஸ்தவர்கள்.
இன்னொரு வகையினர் உண்டு.
இவர்கள் கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி தங்களை காட்சிப்படுத்துகின்றார்கள்.
இவர்கள் ஆலயம் வருவது உடைகளையும் நடையையும் காட்சிப்படுத்த
மேடையில் ஏறி பாடல்கள் படிப்பது குரல்வளத்தை காட்சிப்படுத்த.
இசைக்கருவிகள் இசைப்பது இசைத் திறமையை காட்சிப்படுத்த
“பிரசங்கங்கள் பல செய்வது தங்கள் அறிவாற்றலையும், பேச்சுத் திறமையும் காட்சிப்படுத்த
வைப்பது எடுப்பது, போவது வருவது, ஜெபிப்பது படிப்பது எல்லாமே தங்களை காட்சிப்படுத்த
ஆண்டவர் பெயரை அடிக்கடி சொல்லிக் கொண்டாலும், எல்லாம் தங்களை காட்சிப்படுத்தவும், புகழடையவும் பிரபல்யமடையவுமே…
எல்லாருமல்ல ஒருசிலர்…
கிறிஸ்துவின் பிள்ளைகளே நீங்கள் எப்படி?
இதை வாசித்து விட்டு போவதல்ல முக்கியம், உன் செந்த வாழ்க்கையை இதனுடன் ஒப்பிட்டு தீர்மானி்…………..
GOD bless u
---------------------------------------By Robertdinesh.------------------------------
GOD bless u
---------------------------------------By Robertdinesh.------------------------------
1 கருத்துகள்:
சரியான கருத்து..
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..