அதிசய படைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிசய படைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஞ்ஞான ஆய்வின் மூலமாய் நிரூபிக்கப்பட்ட வேத வசனம் - எறும்பு பற்றி வேதம் கூறும் உண்மை - (வேதாகம அறிவியல்-12)
எறும்பினிடத்தில் போய் கற்றுக்கொள் : ஆய்வின் மூலமாய் நிருபிக்கப்பட்ட வேத வசனம் (இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கான பதில்)
உலகில் ஒவ்வொரு மார்கத்திற்கும் ஒவ்வொரு வேதங்கள் உள்ளன, ஆனா இதில் எந்த வேதம் குறைவில்லாதது என்றால், எது எல்லாவிதமான ஆய்வுகளுக்கும்,சோதனைகளுக்கும் உட்படுத்தி தன் உண்மை தன்மையை நிலைநாட்டுகிதோ அதுவே,
வேதாகமம் கூறும் நட்சத்திரக் கூட்டம் - ( வேதாகம அறிவியல்-10 )
“அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பத்தை நீ இணைக்கக் கூடுமோ?” (யோபு 38.31)
என்று வேதாகமம் கேட்கிறது. ஈர்ப்பு சக்தியின் சட்டத்தினால்தான் எல்லா கிரகங்களும் ஒன்றுக் கொன்று இழுத்து தாங்கிய நிலையில் உள்ளது. அவைகளை இணைக்கவும் பிரிக்கவும் முடியாது. என்பதை வான சாஸ்திரிகள் நமக்கு கற்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பதாகவே வேதாகமம் நமக்கு கூறி விட்டது.
மிருகசீரிஷத்தின் கட்டுக்களை அவிழ்ப்பாயோ? (ஆமோஸ் 5.8, யோபு 38.31)
மிருகசீரிஷம் எனும் நட்சத்திர கூட்டத்தின் ஒழுங்கு முறையையும், அவைகள் ஒன்றாக இணைக்கப் பட்டடிருப்பதைப் போல இருப்பதையும் வான சாஸ்திரம் கண்டு கொண்டுள்ளது. அநேக நட்சத்திர கூட்டங்களிலுள்ள நட்சத்திரங்கள் தனித் தனியே பிரயாணம் செய்து கொண்டிருக்கிறன. ஆனாலும் கார்த்திகை நட்சத்திர கூட்டமான, ஆறுமீன் நட்டசத்திர கூட்டமும் மிருகசீரிஷம் என்ற நட்சத்திர கூட்டமும் இணைந்து செல்லும் நட்சத்திர கூட்டங்களாகும்.
துருவ சக்கர நட்சத்திரத்தையும் அதை சேர்ந்த நட்சத் திரங்களையும் வழி
நடத்துவாயோ? (யோபு 38.32)
சுவாதி நட்சத்திரமான துருவ சக்கர நட்சத்திரம் ஓடும் நட்சத்திரமென்றும், அது வினாடிக்கு 84 மைல் வேகத்தில் பிரயாணம் செய்கிறதென்றும் விஞ்ஞானம் கண்டு பிடித்திருக்கிறது. இடி பாடுகள் இல்லாமல் இவைகள் செய்யும் பிரயாணத்தின் மகத்துவத்தை செய்தது யார்?
உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப் பண்ணி, அவைகளை யெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே.. ஏசா 40.26)
நட்சத்திரங்களை எண்ண முடியுமா? - ( வேதாகம அறிவியல்-09 )
வானத்தின் நட்சத்திரங்களை எண்ணமுடியுமென்று எண்ணிய அக்கால விஞ்ஞானிகள் அவற்றை ஆளுக்கொரு எண்ணிக்கையாக கூறிவந்தார்கள்.
கி.பி. 1608 ஆம் ஆண்டுக்கு பின் சில ஆயிரம் நட்சத் திரங்களை தொலைநோக்கிகளின் வழியே விஞ்ஞானிகள் அறிந்துகொள்ள ஆரம்பித்தனா்
சுமார் 100 மில்லியன் நட்சத்திரங்கள் தான் வானத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் 1930 வரை நம்பினர். பிறகு 40 Sextillion நட்சத்திரங்கள் இருப்பதாக கணக்கிட்டனர் (40க்கு பக்கத்தில் 22 பூஜ்ஜியங்கள் போட வேண்டும்.)
ஆனால் அதற்கு முன்னால் எழுதப்பட்ட வேத வார்த்தையானது நட்சத்திரங்களை எண்ண முடியாது என்றது.
எது உண்மை? இன்றைய அறிவியல் என்ன கூறுகிறது?
நட்சத்திரங்களை கணக்கிடவே முடியாது என்று விஞ்ஞானிகள் முடிவாக அறிவித்து விட்டனர்.
வேத வார்த்தைகள் நிரூபிக்கப்பட்டாகி விட்டது.
தொலை நோக்கி இல்லாமலேயே, நட்சத்திரங்களைப் பற்றி வேத எழுத்தாளர்கள் எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? சிந்தியுங்கள்
ஆனால்“அவா் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி அவை களுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். . (சங் 147.4) என வாசிக்கிறோம்
கடவுள் நட்சத்திரங்களின் எண்ணிக்கை யை அறிந்திருக்கிறதுமன்றி, அவைகளை பேரிட்டு அழைக்கிறார். மனித அறிவை பொறுத்த மட்டிலும், நம்மால் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது.
மிகப் பெரிய தூரதிருஷ்டி கண்ணாடிகளின் மூலமாகப் பார்த்தாலும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை முற்றிலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
காற்றுக்கு நிறை உண்டா? -( வேதாகம அறிவியல்-08 )
“காற்றுக்கு அதின் நிறையை நியமித்து ” யோபு 28.25
இந்த வசனம் “காற்றுக்கு எடையுண்டு” என்று கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் வேதாகமத்தில் எழுதப்பட்டதாகும்.
ஒரு சதுர அங்குலத்திற்கு கடல் மட்டத்தில் 15 பவுண்டு எடை காற்றுக்கு உண்டு என்பது நமக்கு தெரியும்.
இதை டோர்ரிசில்லி என்பவா் கி.பி 1643-ல் செய்து காட்டினார்.
இது கண்டுபிடிப்பதற்கு எத்தைனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே வேதாகமத்தில் கூறப்பட்டு விட்டதல்லவா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














