ஒரு முறை காசி நகரில் கல்வியில் சிற்நத ஒரு சந்நியாசியுடன் சாது சுந்தர் சிங் உரையாடி கொண்டிருந்தார். அப்போது சந்நியாசி கூறினார், 'சாதுக்களின் ஒழுக்க முறைகளை குறித்துள்ள எங்களுடைய சட்டதிட்டங்க்ள போற்றத்தக்கவை. ஏனென்றால் முதலாவது, மாணாக்க நிலை, பின்னால் குடும்பஸ்தன், வாழ்க்கையின் பின் பாகத்தில குடும்ப கவலையிலிருந்து நீங்கி காட்டுக்கு செல்லுதல், பின் வயதான காலத்தில் சந்நியாசித்தல், அதாவது வெறுத்து விடுதல் என்பவை.
ஆனால் நீங்கள் எடுத்து கொண்ட முறையோ விபரீதமானது. உங்கள் வாலிப பிராயத்திலே சந்நியாசியாகி விட்டீர்களே' என்றார்.












