நாகூம் தீா்க்கதரிசி
கிமு 713ம் வருட வாக்கில் நினிவே பட்டணத்தின் அழிவைப் பற்றிய ஒரு முன்னறிவிப்பைக் கூறுகிறார்.
ஆனால் அவருக்கு கிடைத்த காட்சி (தரிசனம்) 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைமுறையில்
வந்த போக்குவரத்தைப் பற்றியதாகும். அவைகளை அவரால் விளங்கிக் கொள்ள முடியாதிருந்திருக்கும்.
எனவே 2700 ஆண்டுகளுக்கு முன்னிருந்த தன்னுடைய காலத்து மொழிநடையில் தன்னுடைய சிற்றறிவின்படி,
அக்கால மக்கள் விளங்கிக் கொள்ளும் படி வா்ணித்திருக்கிறார். அதுவே இவ்வசனமாகும்.
தீமேத்தேயு பற்றிய விபரங்கள். (வேதாகமத்திலிருந்து) about timothy
தீமோத்தேயு (தேவனால் கனம் பண்ணப்பட்டவர்)
வேதாகமத்திலிருந்து தீமேத்தேயு பற்றி நாம் தெரிந்து கொள்ளக் கூடிய விபரங்கள்.
• தீமோத்தேயுவின் தந்தை - ஒரு கிரேக்கர் (பெயர் குறிப்பிடப்படவில்லை).
• தீமோத்தேயுவின் பாட்டி - லோவிசாள்.
• சம்பந்தப்பட்ட இடங்கள் - லீஸ்திரா, எபேசு, மற்றும் பவுலடிகள் சென்ற இடங்கள்.
பாஸ்டர் புளோரெஸ்கோ - (இயேசுவின் இரத்த சாட்சிகள்--பதிவு- 01)
இயேசுவை அறிவித்த ஒரே காரணத்துக்காக சிறை சென்றவர்
“கிறிஸ்தவர்களைக் காட்டிக் கொடுத்த துரோகியின் மகன் என்ற அநியாயமான பெயர் எனக்கு வேண்டாம் அப்பா”
1960 ஆம் ஆண்டு பாஸ்டர் புளோரெஸ்கோ ரோமானியாவில் “இயேசுவே மெய்யான தேவன்” என்று அறிவித்த ஒரே காரணத்துக்காக கம்யூனிஸ்ட் தீவிரவாதிகள் அவரைக் கொரடூரமாகத் தாக்கி பயங்கர இரத்தக் காயங்களுடன் சிறையில் அடைத்தனர்.
தேவன் அருவருக்கும் ஜெபம்... ஆபத்து..
ஜெபிப்பவன் மேல் ஆண்டவருக்கு பிரியம் தான் , ஆனால் சிலருடைய ஜெபத்தை அவர் அருவருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? என் நாமத்தில் எதைக் கேட்டாலும் செய்வேன் என்று யோவான் -14:14 இல் நம் தேவன்தான் கூறினார் .
ஒருபோதும் பாவிகளின் ஜெபத்தை அவர் அருவருப்பதில்லை. லூக்கா -18:10 இல் கூறப்படும் சம்பவத்தில் ஆயக்காரனும் பாவியுமாகிய ஒருவனின் ஜெபத்தை தேவன் அங்கீகரித்தது பற்றி கூறப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் எப்படிப்பட்ட கொடியவனாயிருந்தாலும், அவன்தேவனை நோக்கி விசுவாசத்தோடு ஜெபிக்கும் போது அவர் அவனுடைய ஜெபத்தை அங்கீகரிக்கிறார். ஆனால் ''நான் இரட்சிக்கப்பட்டவன்'' என்று சொல்லும் சிலருடைய ஜெபத்தை தேவன் அருவருக்கிறார் என்றால் ஆச்சரியமாயிருக்கிறதா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













