அழுகையின் சுவர்
கிமு-1012ம் ஆண்டளவில் சாலமோன் அரசன் மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஓர்னானின் களம் என்னுமிடத்தில் கர்த்தருக்கென்று தேவாலயத்தை கட்டினான்.
இத்தேவாலயம் கிமு-586 இல் நேபுகாத்நேச்சர் என்னும் பாபிலோனிய மன்னனால் இடித்துப் போடப்பட்டது.மீண்டும் இத்தேவாலயம் கிமு-536 இல் செருபாபேலின் தலைமையில் கட்டத்துவங்கப்பட்டு கிமு-519 இல் கட்டி முடிக்கப்பட்டது.
அவ் இரண்டாம் தேவாலயம் ஏரோது மன்னனால் கி.பி-19 அல்லது கி.பி-20ல் அழகு படுத்தப்பட துவக்கப்பட்டு 45 வருடங்களில் முற்றங்கள், சுற்றுக்கூடங்கள், அறைகள் முதலியன கட்டப்பட்டன. இயேசுக் கிறிஸ்துவின் காலத்திலிருந்த தேவாலயம் அதுதான்.
என்றாலும் இயேசுக் கிறிஸ்துவின் முன்னறிவிப்பின்படி (மத். 24.2) அந்த இரண்டாம் தேவாலயம் கி.பி-135ல் ரோமரால் இடிக்கப்பட்டது. ஆகிலும் சுற்றுச் சுவரில் (Retaining Wall) ஒரு சிறு பகுதி இடிக்கப்படாமல் தப்பியது.
இச்சுவர் யூதரால் ஒரு புனித சின்னமாக கருதப்பட்டு, யூதர்கள் அச்சுவர் அருகே போய் அழுது ஜெபம் செய்வர். தங்கள் ஜெபவிண்ணப்பங்களையும் தாள்களில் எழுதி அச்சுவரிலுள்ள சந்துகளில் சொருகி வைத்துவிடுவர்.
தங்களுடைய தேவாலயம் இடிக்கப்பட்டு இப்பொழுது ஆராதனை செய்யவும், பலி செலுத்த முடியாமலிருப்பதையும் நினைத்து ஜனங்கள் இந்த மதிலில் தங்கள் தலைகளை முட்டி அழுது ஜெபம் செய்கிற படியால் இம் மதிலுக்கு அழுகையின் மதில் (Wailing Wall) என்று பெயர் வந்தது.
1948 வருடம் இஸ்ரேல் சுதந்திரம் அடைந்தபொழுது இப்பகுதி யோர்தான் நாட்டிற்கு போய்விட்டது. ஆகையால் யூதர் இப்பகுதிக்கு போகாதபடி தடுக்கப்பட்டனர்.
மீண்டும் 1967 ஜீன் மாதம் 6 நாள் யுத்தத்தில் முழு எருசலேமும் யூதர் கைக்கு வந்தது. அது முதல் யூதர் அங்கு போய் சுதந்திரமாக ஜெபம் செய்கின்றனர்.
![]() |
| அழுகையின சுவரும், பிற்காலத்தில் கட்கப்பட்ட மதில்களும்,வாசல்களும் |
மேலே இருக்கும் படத்தில் மனிதர்கள் நின்று ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கும் சுவர்தான் ஏரோது ராஜா கட்டிய ஆலயத்தில் இடிக்கப்படாமல் மீந்திருக்கும் வெளிப்புற சுவர் பகுதி.
முன்னால் தெரியும் மதிலும் அரைவட்டமாய் காணப்படும் வாசலும் பிற்காலத்தில் கட்டப்பட்டவை
ஜெபம் பண்ணுகிற ஆட்களின் தலைக்கு மேல் வளர்ந்து காணப்படுவது சுவரில் முளைத்து சுத்திகரிப்புக்கு உபயோகப்படுத்தும் ஈசோப்புச் செடி (1இராஜாக்கள் 4.33) (சங்கீதம் 51.7) (Source: Prophetic Roundup- july-sept. 88)
இந்த அழுகையின் மதில் ஏரோது மன்னன் புதுப்பித்து கட்டிய தேவாலயத்தின் மதில்கள் பலமாயிருப்பதற்கு கட்டப்பட்ட ஒட்டுச் சுவரின் (Retaining Wall) ஒரு பாகமாகும். இதில் சில கற்கள் 14மீட்டர் நீளம்(453/4அடி), 3மீட்டர் உயரம்(93/4அடி), 2மீட்டர் அகலமுள்ளவைகளும்(61/2அடி), 300டன் நிறையுள்ளவைகளாயும் இருக்கின்றன.
அக்காலத்தில் இவ்வளவு பெரிய கனமான பாறைகளை எப்படி கொண்டு வந்து கட்டினார்கள் என்பதை கணிக்க முடியவில்லை என்று தற்கால கட்டக்கலை நிபுணர்கள் கருதுகின்றனர்.
கீழே இக்கட்டுரை சம்பந்தமான படங்கள் சிலவற்றை தருகிறேன்.
தொகுப்பு Robert Dinesh
(source இஸ்ரவேல் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்) (Source: News from lsrael, June 1988)
வில்லியம் டின்டேல் William tyndale
இங்கிலாந்தில் சபை சீர்திருத்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது வேதத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பே. ஆங்கிலத்தில் வேதம் மொழி பெயர்க்கப்பட்டு அதிவேகமாக மக்களுடைய கரங்களை எட்டியதும் அவர்களுடைய இருண்டிருந்த ஆத்மீகக் கண்கள் திறக்கத் தொடங்கின. ஆங்கிலத்தில் வேதத்தை மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பித்து வைத்தவர் வில்லியம் டின்டேல். ஏழு மொழிகளைப் பேசும் வல்லமை கொண்டிருந்த டின்டேல் எபிரேய, கிரேக்க மொழிகளில் அதிக பாண்டித்தியம் உள்ளவராக இப்பணிக்குத் தகுந்தவராக இருந்தார்.
அன்பே என்னை மன்னிப்பாயா?
ஒய்யார வானம்,
வட்ட நிலா,
ஓடும் நதி,
ஓரமாய் ஒரு மொட்டைப்பனை,
உச்சியில் ஒரு ஒற்றைக் குருவி
மனதில் எழுகின்றன கற்பனைக் குவியல்
நதியின்
சலசல இரைச்சல் அதற்கு பிள்ளைகளின் அழுகுரலாய் கேட்கிறது.
நிலாவின் வெண்மை முகத்தில் மனைவியின் பாசத்தைக்
காண்கிறது அந்தக் குருவி.
எங்கிருந்தோ வரும் தாமரை வாசனை மனைவியின்
அணைப்பில் உண்டாகும் சுகந்தம் போல இருந்தது அந்தக் குருவிக்கு.
தனிமையை உணர உணர “ஜில்” என்ற குளிருடன் கண்ணீர்
கன்னத்தை நனைக்கிறது. நிலாவின் ஒளியும் நெருப்பாய் கொதிக்கிறது.
குஞ்சுகளையும் மனைவியையும் பிரிந்த மூன்று
நாட்கள் மூன்று யுகங்கள் போல இருந்தது அந்தக் குருவிக்கு.
இத்தனைக்கும் மனைவியின் அந்த ஒரேயொரு வார்த்தையே
காரணம்.
இத்தனை வருடம் அவளை அன்பாக கவனித்தவன் நான்.
அவள் கண்களில் கண்ணீர் கசியாமல் காத்தவன் நான்.
என்னை சந்தேகப்பட்டு அவள் அந்த வார்த்தையை
சொல்லியிருக்கவே கூடாது. என் அன்பை புரிந்து கொள்ளாத அவளோடு இனிமேல் வாழ்ந்தென்ன பிரயோஜனம்.
என்றெல்லாம் நினைத்து வீட்டை விட்டு வந்து
விட்டது அக்குருவி
தனிமையின் கொடுமை ஒரு புறம் “மனைவி என்னை
எங்கெல்லாம் தேடுகிறாளோ” “குஞ்சுகள் என்ன பாடுபடுகின்றனவோ” என்ற எண்ணங்களின் கொலைவெறி
மறுபுறம்.
இரண்டையும் முறித்துக் கொண்டு வருகின்றது
“இல்லை இல்லை என்னில் தவறில்லை அவள்தான் குற்றம் செய்தாள்” என்ற சுயகௌரவம்.
எண்ணங்களின் புயல் ஓய மீண்டும் அமைதி நிலைக்கு
வருகிறது குருவியின் மனம்.
எங்கோ ஒரு மூங்கில் காட்டில். மூங்கில்களில்
வண்டுகள் போட்ட துளைகளினூடே செல்லும் தென்றல் காற்றால் உண்டாகும் இதமான ஓசையினூடாக
காதில் பேசிய இறைவனின் குரலைக் கேட்டது அக்குருவி.
திடீரென ஏதோ ஒரு முடிவை எடுத்ததாய் பறவை
சிறகுகளை விரித்து பறக்கத் தொடங்கியது. நேராக கூடு சென்றது.
கண்ணீர் மல்க பிள்ளைகளை அணைத்தபடி அழுது
கொண்டிருந்த மனைவியை கட்டி அணைத்துக் கொண்டது.
ஏதோ பேச வாய் திறக்கும் முன்னே மனைவியின்
வாய் முந்திக் கொண்டது. அன்பே என்னை மன்னித்துக்கொள்
தொடர்ந்தது குருவி.
நான் உன்னை மன்னிக்கிறேன். என்னையும் நீ
மன்னித்துக் கொள்
அணைப்பு வரவர இறுக்கமாகிக் கொண்டே போனது.
இப்போது இரண்டு குருவிகளின் கண்களிலும் உண்டான
கண்ணீருக்கு மகிழ்ச்சிதான் காரணமாக இருந்தது.
இதை வாசிக்கும் அன்பு உள்ளங்களே மூங்கில்களில்
வண்டுகளிட்ட துளைகளினூடே செல்லும் காற்றால் உண்டாகும் இதமான ஓசையூடாக இறைவன் அக்குருவியின்
காதில் என்ன பேசியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்.
உன் மனைவியை நீ ஏன் மன்னிக்ககூடது?
அன்பானவர்களே இயேசு உங்களைப் பார்த்து கேடகிறார். எனக்கு அநியாயம் செய்தவர்களை நான் மன்னித்தேனே. உனக்கு அநியாயம் செய்தவர்களை
நீ ஏன் மன்னிக்க கூடது?
சிந்திப்பாயாக.
-----------------------------------------------------by - robert dinesh-----------------------------------------------------
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















