பழைய ஏற்பாட்டில் பல தீர்க்கர்கள் எருசலேம் பட்ணம் அழிக்கப்படும் என்று தீர்க்கதரிசனம் உரைத்திருக்கின்றனர். ஆனால் அத்தீர்க்கதரிசனங்களெல்லாம் கி.மு. 586ல் நேபுகாத் நேச்சார் எருசலேமை அழித்ததைக் குறிக்கும் என்று விவாதிக்க முயும். ஏனென்றால் அத் தீர்க்கதரிசனங்களெல்லாம் கி.மு. 586 க்கு முன் உரைக்கப்பட்டவை.
நோவாவின் இரண்டாவது குமாரன் காமுடைய மக்களில் ஒருவன் கானான். (ஆதியாகமம் 10:6). கானானுடைய சந்ததியார் சீதோன் முதல் காசா பட்டணம் மட்டும் பரவி வாழ்ந்தார்கள் (ஆதியாகமம் 10:19). அவர்கள் வாழ்ந்த நாட்டிற்குக் கானான் நாடு என்று பெயர் வந்தது.