எனது விசுவாச அறிக்கை
வானமும், பூமியும், அதிலுள்ள காணப்படுகிறவைகள், காணப்படாதவைகள் யாவும் தேவனால் உண்டானது என்று விசுவாசிக்கிறேன். பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன், இந்த உலகத்தில் மாம்சமாக வந்த இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவ குமாரன், அவர் உலக மக்களின் பாவங்களுக்காக பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு பாதாளத்தில் இறங்கினார், மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார், பின்பு பரமண்டலத்துக்கு ஏறி பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார், மீண்டும் இப்பூமிக்கு உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயம் தீர்க்க வருவார், என்று நான் விசுவாசிக்கிறேன். பரிசுத்த ஆவியையும், பொதுவாய் இருக்கிற பரிசுத்த சபையையும், கிறிஸ்துவின் மூலம் பாவ மன்னிப்பும், சரீர உயிர்த் தெழுதலும், நித்திய ஜீவனும் உண்டென விசுவாசிக்கிறேன்.
-------------------------------------------------------
மேலும் ..
சிலுவையடி என்னும் இந்த தளமானது ''கிறிஸ்தவம்,கிறிஸ்தவன்'' என்னும் பெயரில் 2012 sep 26 இல் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் siluvai dot com (சிலுவை டொட் கொம்) என்று பெயர் மாற்றப்பட்டு தற்போது சிலுவையடி என்னும் பெயரில் இயங்கி வருகிறது. இத்தளத்தில் ஆரம்பத்தில் ஒருசில இடுகைகள் சகோதரன் Teny என்பவரினால் இடப்பட்டுள்ளன.
இந்த இணைய தளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களை நான் பதிவிடுவதுடன் பிற தளங்களிலும் புத்தகங்களிலும் இருந்து நான் பெற்ற பயனுள்ள கட்டுரைகள், ஆக்கங்கள் சிலவற்றையும் நான் தெரிவு செய்து இஙகே பதிவு செய்துள்ளேன். அப்படி நான் பெற்ற ஆக்கங்களின் முடிவில் “அவ்வாக்கத்தை எங்கிருந்து பெற்றேன்” என்று கட்டாயம் பதிவிடுவேன். அவ்வாக்கத்தை படைத்தவர் பெயர், அல்லது ஆக்கத்தை பெற்ற தளத்தின், புத்தகத்தின் பெயர் போன்ற ஏதாவதொரு தகவலை நான் பதிவிடுவதால் அந்த ஆக்கங்களிலுள்ள குறை நிறைகளுக்கு நான் பொறுப்பாளியல்ல.
அது தவிர தமிழில் கிறிஸ்தவத்தையும் இயேசுவையும் குறித்த காரியங்களை வேதாகமத்துக்கு முரண்படாமல் எழுதுகிறவர்களின் இணையத்தள முகவரிகளையும் இந்த தளத்தில் நான் தொடுத்துள்ளேன். இந்த தளத்தை பார்ப்பவர்கள் . அவர்களுடைய தளங்களையும் பார்வையிட முடியும்.
ஆண்டவர் இயேசுவுடைய நாமம் மாத்திரமே மகிமைப்படுவதாக. சபை பாகுபாடு இல்லாமல் நாம் யாவரும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும்.
நான் இந்த தளத்தில் என்னுடைய பதிவுகளை மட்டுமன்றி , இணையத்தில் நான் படித்து தெரிந்து கொண்ட விடயங்களையும் பதிவிடுவேன் . நான் ஏதாவது சத்தியத்திற்கு முரணான காரியங்களை பதிவிட்டிருந்தால் தயவுசெய்து எனக்கு அறியத்தாருங்கள். அதை நீங்கள் ஒவொரு பதிவின் முடிவிடத்திலும் காணப்படும் ''comments'' என்னும் இடத்தில் எழுதுவதன் மூலம் எனக்கு தெரியப்படுத்தலாம். இந்த தளத்தை பார்ப்பவர்கள் இந்த தளத்தை உங்களுக்கு தெரிந்த யாவரிடமும் அறிமுகம் செய்யுங்கள்.
facebook மூலமாகவோ அல்லது உங்கள் சொந்த தளங்கள் மூலமாகவோ இத்தளத்தை நீங்கள் அறிமுகம் செய்யலாம். facebook இல் இத் தளத்துக்காக “siluvai dot com” ''கிறிஸ்தவம்,கிறிஸ்தவன்'' ஆகிய பக்கங்கள் உருவாக்க பட்டுள்ளன. அவற்றை like செய்வதன் மூலம் இத்தளத்தின் பதிவுகளை நீங்கள் face book இல் பார்வையிடலாம்
இத்தளத்தின் நோக்கம்
கர்த்தருடைய வேதமே சத்தியம். வேதாகமம் குறித்தும் கிறிஸ்தவம் குறித்தும் இயேசுவைக் குறித்தும் இந்நாட்களில் பல வகையான துர் உபதேசங்கள் பெருகியுள்ளன. இயேசு உலகை மீட்க வந்த தெய்வம் என்னும் இச்செய்தியையே வேதாகமம் சொல்கிறது. மக்கள் மீட்படைவதை தடுக்க முயற்சிக்கும் தீய சக்திகளினால் தூண்டப்பட்டு பலர் இயேசுவைக்குறித்து அவதூறான கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர். இணையத்தில் இயேசுவைக்குறித்த பொய்யான அவதூறுகளே அதிகமாக காணப்படுகின்றன. இதனால் கிறிஸ்துவைப்பற்றிய அறிவும் அவருடனான தனிப்பட்ட அனுபவமும் இல்லாத பெயர்க் கிறிஸ்தவர்கள் பலர் விசுவாசத்தில் ஆட்டம் கண்டுள்ளனர்.
கிறிஸ்தவர்கள் பைபிளை படிப்பதை விட இணையத்திலேயே அதிக நேரம் செலவிடுகிறார்கள். அதனால் இணையத்தில் பரப்பப்படும் அவதூறுகளை உண்மையென நம்பி ஏமாந்து போகின்றனர். கிறிஸ்துவை புத்தகத்தில் அறிந்தவனின் விசுவாசம் தடுமாறக் கூடும் ஆனால் கிறிஸ்துவை வாழ்வின் அனுபவத்தில் அறிந்தவனின் விசுவாசம் ஆடாது. வேதத்தையும் இயேசுவையும் பற்றிய விசுவாசத்தில் தடுமாறுபவர்களை தாங்குவதும் இத்தளத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.
அத்துடன் இன்றைய கால கட்டத்தில் இன்டர்நெட் ஆல் மக்கள் அநேகமாக கவர படுகின்றமையால் இன்டர்நெட் இல் இயேசுவின் நாமத்தை சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கின்றது. எப்படியாவது மக்களுக்கு இயேசுவை அறிவிப்பதும் நமது நோக்கம்.
அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம். என அங்கலாய்க்கும் ஆண்டவரின் குரல் உனக்கு கேட்கலையோ?
இளைய சமுதாயமே சாத்தான் உனக்கு முன்பாக விரித்திருக்கும் இந்த சிற்றின்பத்திலிருந்து எழும்பிடு!எழுப்பிடு!!
.....THANK...U...........
20 கருத்துகள்:
very nice brothers...
thank you verymuch brother.
Hai dear... it was so nice to Study about Missionary life history "do what you can... FASTLY JESUS COMMING SOON
JESUS IS OUR HERO
hai dear
There is so many bad things in internet
but there is only few good things in internet
(sea water is salty to drink but fish is so taste to eat)
thank u brother
yes u r correct jesus is our hero
podang
ஆம் சகோதரா நீங்கள் சொல்வது சரியே.
இந்த அசுத்தங்கள் நிறைந்த இடத்தில் நல்ல தகவல்கள் மிக மிக சொற்பமே. அதனால் தான் நாம் இணையதளத்தை இறைவனுடைய வார்த்தைகளால் நிரப்ப வேண்டியது அவசியமாகின்றது.
நன்றி
good thinks for our hichristins web
Thanks
My dear brothers in JESUS CHRIST, greetings to you in JESUS ' name. I thank GOD for you from the depth of my heart. I really appreciate you for the wonderful job you have been doing for the glory of our LORD and SAVIOUR JESUS CHRIST. Very useful materials to meet the spiritual need of people are here. I will remember you in my prayers. May the dear LORD JESUS CHRIST bless you.
With much love and prayers,
Pastor.David paul sundar rajan.
Dear brothers greetings to you in JESUS ' name. I thank GOD for you from the depth of my heart. I really appreciate you for the wonderful job you have been doing for the glory of our LORD and SAVIOUR JESUS CHRIST. Very useful materials to meet the spiritual need of people are here. I will remember you in my prayers. May the dear LORD JESUS CHRIST bless you.
With much love and prayers,
Pastor.David paul sundar rajan.
மிக்க நன்றி பாஸ்டர். (David paul sundar rajan) உங்களைப் போன்றவர்களுடைய ஜெபங்களும் வாழ்த்துக்களும் கட்டாயம் எங்களுக்குத் தேவை.
உங்கள் google+ profile இல் உங்கள் பிரசங்க குறிப்புகளை வாசித்தேன். மிகவும் பிரயோஜனமான கருத்துகள். கர்த்தர் நல்லவர் பாஸ்டர். அவர் உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பார்.
May the dear LORD JESUS CHRIST bless you Robert. If you feel like using my materials please feel free to do so for the glory of our LORD JESUS CHRIST. I have more than 35 articles and most of them are in English. I have also shared your website in my Facebook time line. May GOD continue to use you all.
May the dear LORD JESUS CHRIST bless you Robert. Today I have shared about your website in my Facebook time line. If you feel like using my materials please feel free to do so. I have more than 35 articles and most of them are in English. I have posted them in Facebook. If you need them l can provide you for the glory of our LORD JESUS CHRIST. May GOD continue to use you all.
இந்த hi Christians உள்ள வரலாறுகளை படிக்க படிக்க மிகவும் ஆா்வமாக உள்ளது. எல்லாமே மிகவும் அற்புதமாக உள்ளது.கா்த்தருக்கு நன்றி இந்த இணையதளத்தை தொடங்கின உங்களுக்கும் காத்தாின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
nice bro god sue for you i like it
God bless you brother very used full page
www.galeedfm.com
God bless you brother very used full page
www.Galeedfm.com
Super i like ....
Your efforts have to be appreciated. Superb website! Let the Lord bless you in your mission.
எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றிகள் சகோதரர்களே. உங்கள் ஊக்குவிப்புகள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றது. கர்த்தருக்கே மகிமை. உங்கள் பாராட்டுகளுக்கு நான் எவ்விதத்திலும் தகுதியானவன் அல்ல.
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..