நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » » சிலுவையின் கருப்பொருள்

சிலுவையின் கருப்பொருள்

சிலுவை இயேசு கிறிஸ்துவின் மரணத்தால் உலக வரலாற்றில் தலையாய் இடம் பெற்றிருக்கின்றது. முன்னே குற்றவாளிகளின் அவமானச் சின்னமாக இருந்த சிலுவை இப்போது மானிடரின் ஈடேற்றத்திற்குச் காரணமாக அமைந்துள்ளது. கிறிஸ்துவின் மரணத்திற்கு முன் சிலுவை என்பது தாங்க முடியாத கொடுமையான தண்டனையை நிறைவேற்றும் கருவி. ஒரு கள்வனுக்கோ, ஒரு கொலைப்பாதகனுக்கோ அல்லது ஒரு கலகக்காரனுக்கோ கொடுக்கப்பட்டு வந்து அதிகபட்சமான தண்டனை சிலுவையில் மரிக்கச் செய்வது. உபாகமத்தில் மரத்தில் தூக்கப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறது. அது ஒரு பயங்கரமான சாவு. சிலுவை மரணம் மகா ஈனமானது. அது மகா பாவிக்கு விதிக்கப்பட்ட தண்டனை. அது தேவ கோபத்தினால் உண்டாகும் என்பது அக்காலத்துக் கொள்கை. ஏற்கனவே செய்து வைக்கப்பட்டிருக்கும் சிலுவை குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும் அந்த சிலுவையை அவனே சுமந்துகொண்டு செல்லவேண்டும். அந்த காட்சியைப் பார்க்கும் ஜனங்களின் கேவலமான விமரிசனங்கள், போலிப் பேச்சுகள், தண்டனையை நிறைவேற்றக் காத்திருக்கும் போர்ச் சேவகரின் சித்திரவதைகள் சவுக்கடிகள் இவையெல்லாம் அவன் அனுபவித்துத் தீரவேண்டும். குற்றவாளிகளின் தண்டனையை உடனே சிலுவையிலறைந்து நிறைவேற்றுவதை விட இவைகளை அனுபவிக்கும் காட்சி மிகமிகக் கொடுமையானது ஆகும்.


ஆனால் இயேசுவின் மரணத்திற்கும் பின் அதுவரை நிலவிவந்த சிலுவையின் இழிநிலை மாற்றப்பட்டு அது ஒரு அன்பின் சின்னமாக பாவிகளை இரட்சிக்கம் கிறிஸ்து இயேசுவை நினைவு கூறும் சின்னமாக உலக வரலாற்றில் முக்கியமானதொரு அழியா இடத்தைப் பெற்றுள்ளது. இயேசு கிறிஸ்து தாம் சிலுவையில் ஒப்புக்கொடுக்கப்படும் முன்பு அவர் தாமே தமது சீஷர்களுக்கம் மக்களுக்கும் அறிவித்த ஞானார்த்தத்தை நாம் அறிந்து கொள்வது மிக அவசியமானதொன்றாகும். சிலுவை என்பது பரம பிதாவின் சித்தத்தை நிறைவேற்றத் தனக்குக் கொடுக்கப்பட்டக் கருவி என்று இயேசு கிறிஸ்து எண்ணினார். ஆகவே தமது அன்றாடப் பணியை பரம தந்தையின் சித்தத்திற்கேற்ப செய்து வந்த போது சிலுவை வந்தது சிலுவையைக்கண்டு அவர் பின்வாங்கவில்லை. தன் சீஷர்களை பார்த்து ஓருவன் என் பின்னே வர விரும்பினால் தன்னைத்தான் வெறுத்துத் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். என்றார் (மத் 16:24). மாற்கு 8:34ல் இயேசு தன் சீஷர்களுக்கு மட்டுமல்ல, எதிரே இருந்த ஜனங்களையும் பார்த்து இதே கருத்தை வலியுறுத்தியும் பேசுகிறார். மேலும் ஒருவன் இயேசுவிடம் வந்து 'நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ள நான் என்னச் செய்யவேண்டு;?" என்று கேட்டான். இயேசு அவனைப் பார்த்து அவனிடத்தில் அன்புகூர்ந்து ஒரு குறை அவனிடத்தில் கண்டார். 'உனக்குண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா" என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனானபடியால் அவர் சொன்னதை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை (மாற்கு 10:21).

சிலர் சிலுவைக்குப் பயப்படுவார்கள் ஆனால், 'சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. ஆனால் இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது" (1கொரி 1:18) பரிசுத்த அப்போஸ்தலனாகிய பவுலுக்குக் கிடைத்த சிலுவை, 'நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மைப் பாராட்டாதிருப்பேனாக" (கலா 6:14). பவுல் இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து ஏன் மேன்மை பாராட்டினார்?

1. சிலுவையில் இயேசு கிறிஸ்துவின் அன்பைக் காண்கிறோம். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப் பண்ணுகிறார் (ரோம 5:8). இறைவனின் அன்பை உலகிற்குக் கொண்டுவந்தவரும் அதை செயலில் காட்டியவரும் இயேசுதான். 'தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16). கிறிஸ்து தாமே உலகத்துக்கு வராவிட்டால் நாம் பாவத்தில் மரித்திருப்போம்.

2. சிலுவையில் பாவத்தின் பயங்கரத்தைக் காண்கிறோம். தீமையோடும் தீய சக்தியோடும் போராட வேண்டியிருந்தது. இருதயம் கடினம் குருட்டாட்டம் பொறாமை, பெருமை ஆகிய இவைகள் சமயத்தலைவர்களின் கண்களைக் குருடாக்கி விட்டன. பொது மக்கள் ஏனோதானோ வென்றிருந்தார்கள். யூதாஸ் காட்டிக் கொடுத்தான். பேதுரு மறுதலித்தான். சீஷர்கள் ஓடிப்போய்விட்டார்கள். பிலாத்து நீதி செலுத்தி அவரை விடுதலைச் செய்யத்தவறிவிட்டான். போர்ச்சேவர்கள் கேலி செய்து வாரினால் அடித்தார்கள். பாவமில்லாத அவர் நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத் தாமே சிலுவையில் ஒப்புக்கொடுக்க நேர்ந்தது. நாம் பாவங்களுக்குச் செத்து நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு அவர்தாமே தமது சரீரத்தில் நம்முடைய பாவங்களைச் சிலுவையில் சுமந்தார் (1பேதுரு 2:24). பாவமானது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே பிரிவினை உண்டுபண்ணுகிறது. சிலுவையில் கடவுளுக்கும் மனிதனுக்கும் நட்புறவு ஏற்படுத்தப்பட்டது.

3. சிலுவையில் மன்னிப்பின் செய்தி அறிவிக்கப்படுகிறது. இறைவன் இயேசு மன்னிக்கிறதற்குத் தயை பொருந்தினவர். மன்னிப்பின் உபதேசத்தைப் பலமுறை தமது சீஷர்களுக்குப் போதித்தார். மற்றவர்களுக்கு விரோதமாகச் செய்தக் குற்றங்களை மன்னித்தால், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள் என்றார். தமது வாழ்க்கையில் தாமே அதை முன் மாதிரியாகச் செயல்முறையில் காட்டினார். கிறிஸ்து இரட்சகர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே நமக்கு மன்னிப்பை அருளுகிறார் (எபே 1:17, 1யோவா 1:7-9). இரட்சகரின் மன்னிப்பின் மாட்சிமையை உணர்ந்து மனந்திருப்பி மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் (லூக் 24:47) மனந்திரும்புதலும் மன்னிப்பும் ஒன்றுபோல் வருகிறது. மன்னிப்பை பெற நாம் மன்னிக்கும் சிந்தையுள்ளவர்களாக இருக்கவேண்டும் (மத் 18:33-35).
------------------------------------------------------------------------------------------------------------------------------ lurthudiary தளத்திலிருந்து
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

Popular Posts

கேள்வியும் பதிலும்