நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » » சாலமோனின் ஆலயம்..

சாலமோனின் ஆலயம்..

  



சாலமோன் என்னும் ராஜா கட்டின தேவாலயத்தின் மகிமையை அறியாத கிறிஸ்தவர்கள் இருக்க முடியாது..

அந்த ஆலயம் தேவனுடைய ஜனங்களின் கீழ்படியாமையின் நிமித்தம் தேவனுடைய கோபாக்கினையின் பிரதிபலனாய் இடிக்கப்பட்டது..


எஸ்றா 5:12
எங்கள் பிதாக்கள் பரலோகத்தின் தேவனுக்குக் கோபமூட்டினபடியினால், அவர் இவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் கல்தேயன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் இந்த ஆலயத்தை நிர்மூலமாக்கி,
ஜனத்தைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.

இப்படித்தான் தேவன்..
கோபப்படும் போதோ பயங்கரமாக கோபப்படுவார் ஆனால்..

சங்கீதம் 116:5
கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மன உருக்க மானவர்.

ஏசாயா 54:7
இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன்

என்று சொல்வார்-
பின்பு நாங்கள் படிப்படியாய் எழும்பும் போது அதை கூர்ந்து கவனிப்பார் அதை பார்கும் போது அவர் கண்களில் எத்தனை மகிழ்ச்சி..
செருபாபேல் அந்த இடிக்கப்பட்ட ஆலயத்தை திரும்ப கட்டினான்..
அப்போது சர்வலோகாதிபதியும், சர்வசேனைக்கும் தேவனுமானவருடைய கண்களை பாருங்கள்..

சகரியா 4:10
அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண் களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோ ஷமாய்ப் பார்க்கிறது என்றார்.

ஆம் அடிக்கும் போது கோபத்தில் அடித்து விடுவார் பின்பு நாள்தோறும் அதற்காய் துக்கபடுவார்.."ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்து க்கொள்வேன்"என்பார்,
நாம் எழும்பும் போதோ அவருடய கண்கள் எங்கள் மேல் இரவும் பகலும் நோக்கமாய் இருக்கிறது.

எத்தனை அன்பான தேவன். இல்லாவிட்டால் சர்வசிருஷ்ட்டிக்கும் எஜமானன் சிலுவையில் எங்களுக்காய் தன்னுடைய ஜீவனை விட்டிருப்பாரோ..?







    THE TRUTH..................................................




Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்