நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » » பரிணாமவாதிகளின் இரண்டு பொய்கள்:

பரிணாமவாதிகளின் இரண்டு பொய்கள்:

டிக்டாலிக் ரோசியா மற்றும் குகுனாசஸ்  சில மாதங்களுக்கு முன் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டு டிக்டாலிக் ரோசியா என்று பெயரிடப்பட்ட இந்த படிமம் பரிணாம வளர்ச்சிக்கு பெரும் சான்றாக பிரச்சாரம் செய்யப்பட்டது. உண்மையில் இந்த உயிரினம் பல உயிரினங்களின் பண்புகளை கொண்ட மொசாயிக் உயிரினமாகும். இருப்பினும் பரிணாமவாதிகள் பிழையான படங்களை காட்டி இது நீரிலிருந்து நிலத்திற்கு மாற்றமடைந்தது என்பதை நிரூபிப்பதற்காக இந்த உயிரினத்தை இடை நிலை உயிரினம் என்று காட்ட முயற்சிக்கின்றனர். 


இன்று அவுஸ்திரேலியாவில் காணப்படும் பிளாடிபஸ் என்ற உயிரினம் இதை போன்ற மொசாயிக் இன உயிரினமாகும்.  மோசாயிக் உயிரினம் என்பது மிருகங்கள், ஊர்வன மற்றும் பறவைகளின் பண்புகள் ஒரே நேரத்தில் ஒரு உயிரினத்தில் இணைந்து காணப்படுவதாகும். இதை பரிணாமத்திற்கான சான்றாக கொள்ள முடியாது. 

சில நாட்களுக்கு முன்னர் பல வருடங்களாக விடுபட்ட இடை நிலை என்ற அவர்களின் கற்பனை கதைக்கு உயிரூட்ட பரிணாமவாதிகள் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு படிமத்துடன் வந்துள்ளனர். குகுனாசஸ் என்ற இந்த புதிய படிமம் உண்மையில் அழிந்து போன ஒரு வகை மீன் இனமே தவிர பரிணாமத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதன் வால் பக்கத்தில் முள் இருப்பதால் அதை பரிணா மவாதிகளின் நீரிலிருந்து நிலத்திற்கு மாற்றமடைந்த கட்டுக்கதைக்கான சான்றாக உபயோகிக்க முயற்சிக்கின்றனர். 

ஆனால் படிமத்திலுள்ள உயிரினம் நில உயிரினங்களுடன் முற்று முழுதாக தொடர் பில்லாமல் இருக்கிறது. இன்றும் உயிருடன் இருக்கும் கொலகொன்ந்த் இன மீன்களுக்கு வால் பக்கத்தில் முள் இருக்கிறது. இருப்பினும் இது மீனின் உடலிலுள்ள சாதாரண அமைப்பு என்றும் நீந்துவதற்கு மட்டுமே இதை உபயோகிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 
 
பரிணாமவாதிகள் அவர்களின் கற்பனைகளை நிரூபிப்பதற்கு பாதி விருத்தியடைந்த ஆனால் முற்று முழுதாக இயங்க முடியாத இடைநிலை அமைப்புகளை (nter mediate for ms) கண்டுபிடிக்க வேண்டும். இருப்பினும் இந்த படிமங்களிலுள்ள உயிரினங்களின் உறுப்புகள் ஒவ்வொன்றும் குறைபாடுகளற்ற முற்று முழுதாக விருத்தியடைந்து காணப்படுகிறது. அங்கு பாதி விருத்தியடைந்த உறுப்புகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. படிம வரிசையில் ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் பரிணாமம் அடைந்ததற்கான எந்த சான்றும் இல்லை. பரிணாமவாதிகள் தங்களது பிழைகளை ஏற்று கொண்டு பொது மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட வேண்டும்.

இணையத்தில் கண்டெடுத்த கட்டுரை

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

Popular Posts

கேள்வியும் பதிலும்