நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » நீ திரும்பி வா உன்னால் முடியும்

நீ திரும்பி வா உன்னால் முடியும்



நீங்கள் எண்ணுகிறீர்களா தேவன் என்னை மறுபடியும் அழைக்கமாட்டார்...ஏனேன்றால் இப்போது நான் என்ன நிலமையில் இருக்கிறன் என்று எனக்கு தான் தெரியும் என்று நீங்கள் சொல்லிக் கொள்ளலாம்,

அல்லது எனக்கு வயது சென்று விட்டது நான் காலத்தை வீணடித்து விட்டேன் என்னால் இனி ஒன்றும் செய்ய முடியாது என்று நீங்கள் என்னிக் கொண்டு இருக்கிறீர்களா…..

இந்த எண்ணம் தவறானது இதை கூறி தான் சத்துரு இன்று அநேகரை வஞ்சித்து வைத்து கொண்ட
ிருக்கிறான் ஆனால் சத்தியம் என்ன சொல்கிறது…..


ஏசாயா 1:18-19

உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.

19. நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். சொல்லப்படுகிறது.

தேவன் வெளிபடுத்தலில் முதல் 3 அதிகாரத்தில் 7 சபைகளுக்கும் பேசும் போது நீ என்ன நிலையில் இருந்தாய் உன்கைிரியைகள் இப்படி இருந்தது என்று பழையதை கூறி பின் குறைகளை சுட்டி காட்டினார்

அது மட்டுமல்ல அவர்கள் அந்த தவறுகளை திருத்தும் பட்சத்தில் அதின் ஆசீர்வாதத்தையும் கூறினார். இன்றும் தேவன் அதை நினைவுபடுத்த சித்தமாய் இருக்கிறார்.

இவ்வாறு சத்தியம் சொல்கிற போது சத்துருவின் கதைகளுக்கு இன்னும் செவி கொடுப்பது நியாயமோ ஆகவே தான் கிறிஸ்து இயேசு கூறுகிறார்

யோவான் 8: 32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

இன்றே உன் ஆவி ஆத்மா சரீரத்தை பிதாவாகிய தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து பிதாவே உமக்கு பிரியமான பாத்திரமாய் என்னை வணையும் குயவன் கையில் உள்ள களி மண் நான் என அவரிடமே ஒப்புகொடுத்து விட்டு இனி எதை குறித்தும் கவலைப்படாதே

2கொரி 5:17 யின் படி

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால்புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின..

ஆமென்

கிறிஸ்து இயேசு சீக்கிரம் வருகிறார் புத்தியுள்ள அந்த 5 கன்னிகள் போல் எவ்வேளையும் நாம் ஆயத்தமாய் இருப்போம்.


-----------------------------------------------------------posted by Teny




 
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்