எல்லா உயிரினங்களும் தாமாகவே உருவாயினவென்றும் அவற்றைப் படைத்தவர் எவருமில்லையெனவும் சிலர் நம்புகின்றனர். இவர்களைப் பரிணாமவாதிகள் என்பார்கள். பலகோடி ஆண்டுகளுக்கு முன் உயிரற்றப் பொருட்களிலிருந்து ஓரங்க உயிர்கள் தோன்றியதாகவும். அவை பரிணமித்து இப்போதுள்ள உயிர்கள் உண்டாகியதாகவும் இவர்கள் நம்புகிறார்கள்.
அனால் உயிரற்ற பொருட்களிலிருந்து எந்த உயிரையும் இதுவரை எந்த பரிணாவாதியும் உருவாக்கவில்லை. எந்த உயிரும் அதே வகை உயிரிலிருந்துதான் உருவாகிறது. இது அறிவியல் நிருபித்த உண்மையாகும். சோதனைச்சாலையில் நிருபிக்கக்கூடிய உண்மையல்ல பரிணாவாதம்; இது ஒரு அறிவியல் யூகமே, யூகித்துச் சொல்வதெல்லாம் உண்மையாயிருக்க நியாயமில்லை.
"கடவுள் எங்கிருந்து வந்தார்?" என்று கேட்கிற பரிணாமவாதிகள் சற்று யோசிக்க வேண்டும். உயிரற்ற பொருள் எங்கிருந்து வந்தது? சூரியனிலிருந்து பூமி பிரிந்தது என்பார்கள். அப்படியானால், சூரியன் எங்கிருந்து வந்தது? பதில் சொல்ல முடியாதே. நித்தியமான பொருள் உண்டென்று சொல்லு கிறார்களே! அறிவற்ற பொருள் நித்தியமாக இருந்தது என்பதைக் காட்டிலும் தேவன் நித்தியமானவர் என்பது எவ்வளவு ஞானமுள்ளது. நித்திய தேவனே உலகை உருவாக்கினார்.
"எது முதலில் வந்தது, அல்லது எது முதலில் உருவானது" "தானியமா? தேனியா?" என்று பரிணாமவாதிகள் கேட்கின்றனர். தானியம் இல்லாமலே தேனீ கோடிக்கணக்கான வருஷங்கள் உயிர் வாழ்ந்ததா? தானியங்கள் புஷ்ப்பங்கள் மற்றும் பூந்தாது ஆகிய யாவும் தேனியின் ஜீவியத்துக்கு முக்கியமானவைகள் தானே.

"எது முதலில்
உருவானது? முட்டையா கோழியா என்றும் கேட் கிறார்கள்? இந்தக் கேள்விக்கு
பரிணாமவாதி கூட பதிலழிக்க முடி யாது. காரணம் அவர்களுக்கு பதில் தெரியாது.
இப்படியிருக்க பரிணாம வாதத்தை நம்புவது எப்படி?
மனிதனால் செய்ய முடியாத அழகு மலர்கள், மரங்கள், செடி கொடிகள், கற்பாறைக்குள்ளும் தேரைகள், முட்டைக்குள் உயிருள்ள குஞ்சுகள் போன்றவைகளையெல்லாம் நாம் பார்த்து நிதானமாய் சிந்திக்கும் போது நம்மை அறியாமலேயே 'கடவுள் ஒருவர் இருக்கிறார்' என்ற முடிவுக்கு வந்து விடக்கூடும்.
அனுமானித்து பதில் காணும் பரிணாமக்கொள்கைக்காரர்களின் கூற்று, வெறும் அனுமானம்தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அனுமானங்கள் பொய்யாவதற்கு அதிக சாத்தியங்கள் உண்டல்லவா?
அனுமானித்து பதில் காணும் பரிணாமக்கொள்கைக்காரர்களின் கூற்று, வெறும் அனுமானம்தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அனுமானங்கள் பொய்யாவதற்கு அதிக சாத்தியங்கள் உண்டல்லவா?
எதையும் அனுமானித்து எழுதப்படாத வேதம் 'தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்' என்று கூறுகிறது (சங்- 53:11)
கடவுள்,
படைப்பு இவைகளைப் பற்றிய உண்மைகள் ஒருநாளும் உறங்கப்போவதில்லை. அந்த
வெளிச்சத்திலே எந்தக் கற்பனையும், பொய்யும் நிலைக்கப் போவதில்லை.
'சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக' (சங்-15:16)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..