கிபி 70 -ல் யூதர்கள் உலகெங்கும் சிதறடிக்கப்பட்டு போனார்கள். அப்புறமாய்
2000 ஆண்டுகள் தாய்நாடென்று ஒன்றின்றி சிதறி கிடந்தார்கள். ஆனால்
எங்குபோயினும் அநேக உபத்திரவங்கள் மத்தியிலும் தங்கள் தனித்துவத்தை
பாதுகாத்து வந்திருக்கின்றனர். அவர்களுக்கு 1940 முதல் 1944 வரை மிக மோசமான
காலம். 6 மில்லியன் யூதர்கள் ஹிட்லரால்
கூண்டோடு கொல்லப்பட்டனர். யூதர்கள் தங்களை யூதர்கள் என சொல்ல பயந்த காலம்
அது. "கடைசி தீர்வு" என ஹிட்லர் யூதர்களை கொன்றுகுவித்தான். அந்நேரம்
யாராவது 1967 ல் இஸ்ரேல் என ஒரு நாடு யூதர்களால் உருவாகி அது ஒரு மிகச்
சிறந்த போர்படையுடன் விளங்கும் என யாராவது கூறியிருந்தால் அது மிகப்பெரிய
நகைச்சுவையாகவே இருந்திருக்கும்.
எசேக்கியேல்
37:12 "ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது
என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ,என் ஜனங்களே, நான்
உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து
வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குவரவும்பண்ணுவேன் ."
பரிசுத்த வேதாகமத்தில் சொன்னது அப்படியே நடந்தது. பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்கு வரவும் பண்ணுவேன் என்ற கடவுள் வார்த்தைபடி இன்று அவர்கள் இஸ்ரவேல் தேசத்துக்கு வந்துள்ளனர். இது கடவுளின் திட்டமே.
-------------------------------------------http://sridharan.mywapblog.com/--------------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..