நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » பரிசுத்த ஆவியானவர் என்பவர் யார்?

பரிசுத்த ஆவியானவர் என்பவர் யார்?



பரிசுத்த ஆவியானவர் யார் என்பதைக் குறித்து பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. பரிசுத்த ஆவியானவர் ஏதோ ஒரு மாயமான சக்தி என்று சிலர் நினைக்கின்றனர். வேறு சிலரோ பரிசுத்த ஆவி கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்காக தேவனால் அளிக் கப்படும் ஆள்தத்துவம் இல்லாத சக்தி என்று நினைக்கின்றனர்.

பரிசுத்த ஆவி யானவரைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது? சுருக்கமாகக் கூறினால், பரிசுத்த ஆவியானவர் தெய்வீகத் தன்மை உடையவர்; அவருடைய சிந்தனை, உணர்வுகள் மற்றும் சித்தம் அனைத்தும் பிதாவையும், குமாரனையும் போன்றதே என்றும் வேதாகமம் கூறுகிறது.


பரிசுத்த ஆவிக்கு விரோதமானது தேவனுக்கு விரோதமானது என்பது வேதாகமத்தின் பல இடங்களில் தெளிவாகக் காணப் படுகிறது உதாரணமாக,


அப்போஸ்தலர் 5: 3-4. 
இந்த வசனங்களில் பேதுரு அனனியாவிடம் அவன் ஏன் பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய் கூறினான் என்று, அவன் மனிதனிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய் சொன்னான் என்றும் கண்டிக்கிறான். இது பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்கூறுவது என்பது தேவனிடத்தில் பொய் கூறுவதாகும் என்பதைக் காட்டுகின்றது.

மேலும், தேவனுக்குரிய குணாதியங்களை உடையவராயிருப்பதாலும் பரிசுத்த ஆவியானவரின் சிந்தையும் தேவனின் சிந்தையே என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

உதாரணமாக, அவர் சர்வவியாபி என்பதை சங்கீதம் 139: 7-8 ல் அறியலாம்.உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.”

மேலும்1 கொரிந்தியர் 2: 10-11இல் பரிசுத்த ஆவியானவர் சர்வத்தையும் அறிந்தவர் என்பதையும் நாம் அறியலாம்,

நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்துருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷருக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.” 


மேலும், பரிசுத்த ஆவியானவர் சிந்தை, உணர்வுகள் மற்றும் சித்தம் உடையவராயிருப்பதால் அவர் தெய்வீகத்தன்மை உடையவர் என்று நாம் அறியலாம்.


பரிசுத்த ஆவியானவர் சிந்திக்கிறவர் மற்றும் அறிகிறவர் (1 கொரிந்தியர் 2: 10).

பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தமுடியும் (எபேசியர் 4:30).

ஆவியானவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார் (ரோமர் 8:26-27).

அவர் தமது சித்தத்தின் படி தீர்மானிக்கிறார் (1 கொரிந்தியர் 12:7-11)

 பரிசுத்த ஆவியானவர் தேவன், திரித்துவத்தில் மூன்றாம் நபர். இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்ததுபோல் தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் உண்மையாகவே தேற்றரவாளனாகவும், போதிக்கிறவராகவும் செயல்படமுடியும். (யோவான் 14: 16,26; 15:26)

மனிதன், சரீரமா, ஆவியா, ஆத்மாவா. மனிதனை சரீரம் என்று சொல்லலாமா ? ஆவிதான் என்று சொல்லலாமா? அல்லது ஆத்துமா என்று சொல்லலாமா? இப்படி மனிதனை தனத்தனியாக பிரித்து காண்பித்து விட முடியுமா? முடியும் என்றால், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, இதில் யார் கடவுள் என்று பிரித்து கூறுவது எளிது. கேள்வி கேட்பவர்களே தயாரா?

ஆவி, ஆத்மா, சரீரம் என்னும் முக்கூட்டு கலவைதான் மனிதன். சரீரம் இல்லாவிட்டால் ஆவியோ, ஆத்மாவோ பூமியில் இயங்க முடியாது. அதே போல் ஆவியோ, ஆத்மாவோ இல்லாவிட்டால் சரீரம் பூமியில் இருந்து பயனில்லை.


மனிதன் தேவ சாயலாக படைக்கப்பட்டிருக்கிறான். என்று வேதாகமம் கூறுகிறது. மனிதன் என்ற மைய புள்ளி ஆத்மாவாக இருந்தாலும், பூமியில் வாழ மண்ணான (மண்ணிலிருந்து) சரீரம் (தேவனால்) உண்டாக்கப்பட்டு, சரீரம் இயங்க தேவன் தன் ஜீவ சுவாசத்தை (ஆவியை) கொடுத்தார். மனிதன் ஜீவ ஆத்துமாவானான் அதாவது பூமியில் ஆவி, ஆத்மா, சரீரம் என்னும் முக்கூட்டு கலவையுள்ள மனிதனானன்
தேவ சாயலாக படைக்கப்பட்ட மனிதன் முக்கூட்டு கலவை என்றால், தேவனும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, என்னும் முக்கூட்டு கலவையாக செயல்படுகிறார்.


தேற்றரவாளன் என்ன செய்வார்?



Joh 16:7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.


Joh 16:8-11 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.


அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,



நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,

இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

உலகம் உண்டாவதற்கு முன்னரே தேவ ஆவியானவர் இருந்தார்

Gen 1:1-2 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்.

------------------posted by Teny


Share this article :

1 கருத்துகள்:

Unknown சொன்னது…

REALLY GOOD THOUGHTS BRO.. GOD BLESS YOU

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்