வானத்தின் நட்சத்திரங்களை எண்ணமுடியுமென்று எண்ணிய அக்கால விஞ்ஞானிகள் அவற்றை ஆளுக்கொரு எண்ணிக்கையாக கூறிவந்தார்கள்.
கி.பி. 1608 ஆம் ஆண்டுக்கு பின் சில ஆயிரம் நட்சத் திரங்களை தொலைநோக்கிகளின் வழியே விஞ்ஞானிகள் அறிந்துகொள்ள ஆரம்பித்தனா்
சுமார் 100 மில்லியன் நட்சத்திரங்கள் தான் வானத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் 1930 வரை நம்பினர். பிறகு 40 Sextillion நட்சத்திரங்கள் இருப்பதாக கணக்கிட்டனர் (40க்கு பக்கத்தில் 22 பூஜ்ஜியங்கள் போட வேண்டும்.)
ஆனால் அதற்கு முன்னால் எழுதப்பட்ட வேத வார்த்தையானது நட்சத்திரங்களை எண்ண முடியாது என்றது.
எது உண்மை? இன்றைய அறிவியல் என்ன கூறுகிறது?
நட்சத்திரங்களை கணக்கிடவே முடியாது என்று விஞ்ஞானிகள் முடிவாக அறிவித்து விட்டனர்.
வேத வார்த்தைகள் நிரூபிக்கப்பட்டாகி விட்டது.
தொலை நோக்கி இல்லாமலேயே, நட்சத்திரங்களைப் பற்றி வேத எழுத்தாளர்கள் எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? சிந்தியுங்கள்
ஆனால்“அவா் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி அவை களுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். . (சங் 147.4) என வாசிக்கிறோம்
கடவுள் நட்சத்திரங்களின் எண்ணிக்கை யை அறிந்திருக்கிறதுமன்றி, அவைகளை பேரிட்டு அழைக்கிறார். மனித அறிவை பொறுத்த மட்டிலும், நம்மால் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது.
மிகப் பெரிய தூரதிருஷ்டி கண்ணாடிகளின் மூலமாகப் பார்த்தாலும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை முற்றிலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..