“இதுதான் பைபிள்” என்ற புத்தகம்
1997 - ம் வருடம் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
இதை பி. ஜைனுல் ஆபிதீன் என்பவர் எழுதியிருப்பதாக கூறுகின்றனர். இந்த புத்தகத்தை
நான் வாசித்தபோது அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தேன்.
அதிர்ச்சி
:- அறிஞர் என்று தன்னை மற்றவர்கள் அழைப்பதை எப்படி பி.ஜே ஏற்றுக் கொள்ளுகிறார்?
ஆச்சர்யம்
:- தொப்பி போட்டு தாடி வச்சுக்கிட்டு தீவிர இஸ்லாமியராக தங்களை காட்டிக்
கொள்பவர்கள்
எந்த
ஒன்றையும் (அதாவது கிறிஸ்தவ மார்க்கத்தையோ இஸ்லாமிய மார்க்கத்தையோ) பற்றி
ஒன்றுமறியாதவர்களாக இருப்பதற்கு….
இவர்களால் தலைவர்களாக
வர்ணிக்கப்படுகிற புகழப்படுபவர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள் என்பது
உண்மையாகத்தானே இருக்கிறது….?!!!
அதிர்ச்சியும்
ஆச்சர்யமும் எங்கோ இருந்து பெறப்பட்ட தகவலால் அடையவில்லை. “இதுதான் பைபிள்”
என்ற இவர்களுடைய புத்தகமே
அவர்களைப் பற்றி நாம் புரிந்து கொள்ள காரணமாயிற்று.
எப்படியெனில்..
அந்த புத்தகத்தின் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளுகிற ஜைனுல் ஆபிதீன் என்பவர்
ஏராளமான பொய்களையும் முரண்பாடுகளையும் தவறான குற்றச்சாட்டுகளையும் ஒன்றாக்கி
வடிவமைத்து இருக்கிறார். இவருடைய இந்த பொய் மூட்டைகளை உண்மை என தலையில் தூக்கி
வைத்துக் கொண்டு ஆடுபவர்கள் ஏமாளிகளிலும் பரிதாபமானவர்கள் என்பதில் சந்தேகமே
இல்லை.
அந்தப்
புத்தகத்தில் உள்ள அவதூறுகளில் ஒன்று. (பக்கம் 35 முதல் 40 வரை)
கத்தோலிக்கர்கள்
தங்கள் மதத்தை மற்றவர்கள் மத்தியில் பரப்பிட தீவிரமான குயுக்தியான முயற்சிகள்
எதையும் மேற்கொள்ளாதவர்கள் இவர்கள் வேற்று மதத்தவர்களிடம் வாதத்தின் அடிப்படையில்
எதையும் பிரச்சாரம் செய்யாத காரணத்தினால் மாற்றாரின் கேள்விகளை சந்திப்பது இல்லை.
சந்தித்தாலும் அவற்றுக்கு பதில் அளித்துக் கொண்டிருப்பதும் இல்லை.
ஆனால், புராட்டஸ்டண்டுகளின் நிலை இதற்கு நேர் முரணானது. ஆவர்கள் தங்களின்
மதத்தையும் கோட்பாடுகளையும் பிறர்மீது திணிக்கவும் தங்கள் மதத்திற்கு ஆள்
பிடிக்கவும் பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள்…….
தங்கள்
மதத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பெயரளவுக்காவது பதில்
சொல்லக்கூடியவர்கள்.
எனவே, புராட்டஸ்டாண்டுகள் திருவிவிலிய வசனங்களில் தங்களுடைய நம்பிக்கைக்கு
ஒத்துவராததும் பாதகமுமாக இருப்பவைகளை எல்லாம் நீக்கிவிட்டார்கள். என்று பி. ஜைனுல்
ஆபிதீன் என்பவர் எழுதியிருக்கிறார்.
அதற்கு
ஆதாரமாக அவர் காட்டும் வசனம் :-
நம்
வாழ்நாள் நிழல்போலக் கடந்து செல்கின்றது. நமது முடிவுக்குப்பின் நாம் மீண்டு
வருவதில்லை: ஏனெனில் முடிவு குறிக்கப்பட்டபின் எவரும் அதிலிருந்து மீள்வதில்லை.
சாலமோனின் ஞானம் (ஞானாகமம்)
2 ம் அதிகாரம் வசனம் 5
இந்த
வசனத்தை வேதம் என்று கிறிஸ்தவர்கள் ஒப்புக் கொண்டால் தங்கள் விரல்களினாலே தங்களது
கண்களை குத்திக் கொண்டது போலாகும். எப்படியெனில்… இயேசு சிலுவையில்
அறையப்பட்டு மரணித்து மீண்டும் உயிர் பெற்று எழுந்தார் என்பது கிறிஸ்தவர்களுடைய
அடிப்படைக் கொள்கை.
எனவே
புராட்டஸ்டண்டுகள் தங்களுடைய நம்பிக்கைக்கு ஒத்துவராதவைகளை நீக்கி விட்டார்கள். என்று இந்த முட்டாள் (பி. ஜைனுல் ஆபிதீன் ) எழுதினதை படித்து நம்பினவர்களை நாம் என்னவென்று சொல்ல..? அடிமுட்டாள்கள் என்று சொல்வதில் ஏதும் தவறு இருப்பதாக நான்
கருதவில்லை.
இந்த
தந்திரக்காரனுடைய எழுத்தை படித்தவர்களில் எத்தனை பேர் கத்தோலிக்க
திருவிவிலியத்தில் அப்படித்தான் எழுதி இருக்கிறதா ? என்று பார்த்திருப்பார்கள்.
என்று கேள்வி எழுப்பினபோது.. இல்லை என்ற பதிலையே அதிகமாகப்
பெற்றேன்.
சரி… திருவிவிலியத்தில் இந்த வார்த்தை எந்த இடத்தில் ? யார் சொல்வது போன்று இடம் பெற்றிருக்கிறது…? என்று பார்ப்போமானால்தான்… இந்த பொய்களின் தலைவன் பி.
ஜைனுல் ஆபிதீனுடைய வேஷம் நமக்குப் புரியும்.
சாலமோனின்
ஞானம் (ஞானாகமம்) 2 ம் அதிகாரம் வசனம் 1 முதல்….
இறைப்பற்றில்லாதவர்கள்
வாழ்வை நோக்கும் முறை
என்ற
முன்னுரையுடன் ஆரம்பிக்கும் வசனமானது....,
1 இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில்
பின்வருமாறு சொல்லிக் கொண்டார்கள்: நம் வாழ்வு குறுகியது: துன்பம் நிறைந்தது.
மனிதரின் முடிவுக்கு மாற்று மருந்து எதுவுமில்லை. கீழுலகிலிருந்து யாரும்
மீண்டதாகக் கேள்விப்பட்டதில்லை.2
தற்செயலாய் நாம் பிறந்தோம்:
இருந்திராதவர்போல் இனி ஆகிவிடுவோம். நமது உயிர்மூச்சு வெறும் புகையே: அறிவு நம்
இதயத் துடிப்பின் தீப்பொறியே.3
அது அணையும்பொழுது, உடல் சாம்பலாகிவிடும். ஆவியோ காற்றோடு காற்றாய்க் கலந்துவிடும்.4 காலப்போக்கில் நம் பெயர் மறக்கப்படும். நம் செயல்களை
நினைவுகூரமாட்டார்கள். நம் வாழ்வு முகில் போலக் கலைந்து போகும்: கதிரவனின்
ஒளிக்கதிர்களால் துரத்தப்பட்டு,
அதன் வெப்பத்தால் தாக்குண்ட
மூடு பனிபோலச் சிதறடிக்கப்படும். 5 நம் வாழ்நாள் நிழல்போலக் கடந்து செல்கின்றது. நமது முடிவுக்குப்பின்
நாம் மீண்டு வருவதில்லை: ஏனெனில் முடிவு குறிக்கப்பட்டபின் எவரும் அதிலிருந்து
மீள்வதில்லை.6 எனவே, வாருங்கள்: இப்போதுள்ள
நல்லவற்றைத் துய்ப்போம்: இளமை உணர்வோடு படைப்புப்பொருள்களை முழுவதும்
பயன்படுத்துவோம்.7 விலையுயர்ந்த திராட்சை மதுவிலும் நறுமண வகைகளிலும்
திளைத்திருப்போம்: இளவேனிற்கால மலர்களில் எதையும் விட்டுவைக்கமாட்டோம். 8 ரோசா மலர்களை அவை வாடுமுன் நமக்கு முடியாகச் சூடிக்கொள்வோம். 9 நம் களியாட்டங்களில் ஒவ்வொருவரும் பங்குகொள்ளட்டும்: இன்பத்தின்
சுவடுகளை எங்கும் விட்டுச்செல்வோம். இதுவே நம் பங்கு: இதுவே நம் உடைமை. 10, நீதிமான்களாகிய ஏழைகளை ஒடுக்குவோம்: கைம்பெண்களையும் ஒடுக்காமல்
விடமாட்டோம்: நரைதிரை விழுந்த முதியோரையும் மதிக்கமாட்டோம். 11 நமது வலிமையே நமக்கு நீதி - நமக்குச் சட்டம். வலிமையற்றது எதுவும்
பயனற்றதே. 12 'நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்: ஏனெனில்
அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்: நம் செயல்களை எதிர்க்கிறார்கள்:
திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள்: நற்பயிற்சியை
மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள்.
இந்த
வசனங்கள் பைபிளில் இடம்பெறுவதால்..., இயேசுவின் உயிர்த்தெழுந்த
செய்திக்கு ஆபத்தாகிவிடும் என்று நாங்கள் எப்படி நினைப்போம்...? நாங்கள் என்ன உங்களைப் போன்ற முட்டாள்களா..? மேற்கண்ட வசனத்தை சரியான முறைமையின்படி அர்த்தப்படுத்த வேண்டுமென்பதை
வாசகர்களாகிய உங்களது கவனத்திற்கே விட்டு விடுகிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
http://krmchuch.blogspot.com இல் வெளியான கட்டுரை.
4 கருத்துகள்:
please look into those tamil letter corrections in your articles. it is advisable that you cross check before you publish. God will go with your extreme job for gospel.
பிஜே அவர்களின் பைபிள் ஆராய்ச்சியின் அழகு
http://iemtindia.com/?p=246
பிஜே அவர்களின் பைபிள் ஆராய்ச்சியின் அழகு
http://iemtindia.com/?p=246
நன்றி தமிழ் சமயம்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..