முன்னோட்டமாக:
[1] யோவான் 14:6 இயேசு சொன்னார்: "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னையன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்". என்னாலேயல்லாமல் ஒருவனும் வேறு வழியாகபரலோகம் செல்லமுடியாது. நான் தான் வழி. மரியாள் அல்ல.
[2] கானாவூர் கலியாணத்தில் ( யோவான் 2:4 ) இயேசு சொன்னார், "ஸ்திரீயே (Woman), உனக்கும் எனக்கும் என்ன? என் வேளை இன்னும் வரவில்லையே". அம்மா அல்லது தாயே (Mummy/Mom/Mother) என்னும் வார்த்தைகளை அவர் சொல்லவில்லை. ஸ்திரீயே - Woman என்றார். இங்கே "ஸ்திரீயே" என்னும் வார்த்தை மிகவும் மரியாதைக்குரிய கனம்பொருந்திய வார்த்தை யாகும். (Madam என்னும் மரியாதைச் சொல் போல)ஆனால் அதில் உறவு இல்லை. தேவனுக்குத்தான் அம்மா, அப்பா, ஆதி, அந்தம் (துவக்கம் மற்றும் முடிவு) இல்லையே. தாய் என்னும் உறவை இங்கு இயேசு மறுக்கின்றார் . அவர்தான் மரியாளை அவளுடைய தாயின் கர்ப்பத்தில் உண்டாக்கினார். எனவே "மரியாள் ஆண்டவருக்கு தாய், அவளிடத்தில் தான் கேட்கவேண்டும்" என்பது தவறு.
[3] மாற்கு 3:33 இயேசுவைக் காணவில்லையென்று மரியாளும், யோசேப்பும் தேடிவரும் நேரத்தில், அங்கே ஜனங்கள் "உம்முடைய தாயாரும் சகோதரரும் உம்மைத் தேடுகிறார்கள்" என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சு ற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என்
சகோதரரும் இவர்களே! என் பிதாவின் சித்தம் செய்பவர்களே எனக்கு தாயாரும்
சகோதரரும் என்றார். தாய் மற்றும் சகோதரர்கள் என்னும் உறவையும் இங்கே
மறுக்கின்றார். அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என்
பிதாவுக்கடுத்தவைகளில் (God the father) நான் இருக்கவேண்டியதென்று நீங்கள்
அறியீர்களா என்றார்.
[4] யோவான் 19:26 ல் இயேசு சிலுவையில் தொங்கும்போதும், "அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்." தெளிவாக ஸ்திரீயே என்றுதான் அழைக்கிறார். இங்கேயும் அந்த உறவு இல்லை.
[5] 1 தீமோ 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் (mediator) ஒருவரே . அவரே இயேசு என்று வாசிக்கிறோம். இயேசுதான் மத்தியஸ்தர், குறுக்கே மரியாளை மத்தியஸ்தராக கொண்டுவருவது தவறு.
-------------------------------------------http://sridharan.mywapblog.com/--------------------------
கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவு படத்தொடங்கினது. அப்போது,
இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.
அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும்
வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன
சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். இதை உதாரணமாகக் காட்டி:
பாருங்கள் அங்கே அவர்களுக்கு தேவையான திராட்சரசத்தை மரியாள்தான்
இயேசுவிடமிருந்து வாங்கிக் கொடுத்தாள். எனவே நம்முடைய தேவைக்கு தாயிடம்
கேட்டாள், மறுக்காமல் கிடைக்கும் என்று ரோமன் கத்தோலிக்கர்கள்
சொல்கின்றார்கள். இதுதவறானபுரிந்துகொள்ளுதல்.
நான் கொடுக்கும் 10 காரணங்களை படியுங்கள்:
[1] யோவான் 14:6 இயேசு சொன்னார்: "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னையன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்". என்னாலேயல்லாமல் ஒருவனும் வேறு வழியாகபரலோகம் செல்லமுடியாது. நான் தான் வழி. மரியாள் அல்ல.
[2] கானாவூர் கலியாணத்தில் ( யோவான் 2:4 ) இயேசு சொன்னார், "ஸ்திரீயே (Woman), உனக்கும் எனக்கும் என்ன? என் வேளை இன்னும் வரவில்லையே". அம்மா அல்லது தாயே (Mummy/Mom/Mother) என்னும் வார்த்தைகளை அவர் சொல்லவில்லை. ஸ்திரீயே - Woman என்றார். இங்கே "ஸ்திரீயே" என்னும் வார்த்தை மிகவும் மரியாதைக்குரிய கனம்பொருந்திய வார்த்தை யாகும். (Madam என்னும் மரியாதைச் சொல் போல)ஆனால் அதில் உறவு இல்லை. தேவனுக்குத்தான் அம்மா, அப்பா, ஆதி, அந்தம் (துவக்கம் மற்றும் முடிவு) இல்லையே. தாய் என்னும் உறவை இங்கு இயேசு மறுக்கின்றார் . அவர்தான் மரியாளை அவளுடைய தாயின் கர்ப்பத்தில் உண்டாக்கினார். எனவே "மரியாள் ஆண்டவருக்கு தாய், அவளிடத்தில் தான் கேட்கவேண்டும்" என்பது தவறு.
[3] மாற்கு 3:33 இயேசுவைக் காணவில்லையென்று மரியாளும், யோசேப்பும் தேடிவரும் நேரத்தில், அங்கே ஜனங்கள் "உம்முடைய தாயாரும் சகோதரரும் உம்மைத் தேடுகிறார்கள்" என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சு
[4] யோவான் 19:26 ல் இயேசு சிலுவையில் தொங்கும்போதும், "அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்." தெளிவாக ஸ்திரீயே என்றுதான் அழைக்கிறார். இங்கேயும் அந்த உறவு இல்லை.
[5] 1 தீமோ 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் (mediator) ஒருவரே . அவரே இயேசு என்று வாசிக்கிறோம். இயேசுதான் மத்தியஸ்தர், குறுக்கே மரியாளை மத்தியஸ்தராக கொண்டுவருவது தவறு.
[6] அப்
2-ம் அதிகாரத்தில் மரியாள் பெந்தெகொஸ்தே என்னும் நாளில் 120 பேரில்
ஒருவராக இருந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றாள். அந்நிய பாஷைகளில்
பேசினாள். அந்த கூட்டத்தாரை அவள் சேர்ந்திருந்தாள். கத்தோலிக்க கூட்டத்தாரை
அல்ல.
[7] யோவான் 14:13,14
"நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா
மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள்
எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்." என் நாமத்தில் என்று இயேசு சொன்னார்.
மரியாளின் நாமத்தில் கேட்பது தவறு.
[8] இயேசு
பூமிக்கு வர மரியாள் ஒரு பாத்திரமாக இருந்தாள். அவள் ஒரு பாக்கியமான
பெண்தான்! அதில் சந்தேகமில்லை. சோறு சமைக்கவேண்டும் என்றால் ஒரு பாத்திரம்
(cooker) தேவைப்படுகின்றது. சமைத்தப்பின்பு சோறுதான் சாப்பிடவேண்டும்.
பாத்திரத்தை (cooker) அல்ல. மரியாள் பாத்திரம், இயேசு அந்த உணவு. மரியாளை
வழிபடுவது பாத்திரத்தைக் கடித்து சாப்பிடுவதுபோல் இருக்கின்றது.
[09] யாத்
20:3, 4 "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே
வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும்
உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு
விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்".
[10]இதற்குப் பின்னும் சிலைகளை வைத்து வணங்கினால் (மரியாள் சிலையானாலும்,
இயேசுவின் சிலையானாலும்) பரலோகம் செல்ல வாய்ப்பில்லை என்று வெளி 21:8 ல்
சொல்லப் பட்டுள்ளது.
மரியாளை வணங்குவது பாவம்,
அந்தோனியாரின் சிலையை வணங்குவதும் பாவம்.
இயேசுவின் சிலையை வணங்குவதும் பாவம்.
மரியாளை வணங்குங்கள் என்று பைபிளில் எங்கேயும் இல்லை.
30 கருத்துகள்:
வேதம் கூறும் அன்னைமரி மரியாளை வணங்கச்சொல்லி வேதம் சொல்கிறதா ?
மாற்கு10:17 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ' நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று அவரைக் கேட்டார்.18 அதற்கு இயேசு அவரிடம், ' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.19 உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ″ கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட ″ ' என்றார்.20
மாற்கு12:28 அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, ' அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? ' என்று கேட்டார்.29 அதற்கு இயேசு, ' இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.30 உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக ' என்பது முதன்மையான கட்டளை.31 ' உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக ' என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை ' என்றார்.32 அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், ' நன்று போதகரே, ' கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை ' என்று நீர் கூறியது உண்மையே.33 அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது ' என்று கூறினார்.34 அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ' நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை ' என்றார்.
இயேசு தன்னை கடவுள் என சொல்லவில்லை. நல்லவர் என்றால் பாவமற்றவர்- என்னை ஏன் பாவம் அற்றவன் என்காதே- என்றார்.
தன் வாழ்நாளில் உலகம் அழியும் எனப் பார்த்து கடைசியில் நம்பிக்கை இழந்து தூக்கு மரத்தில் கடைசியாக புலம்பியது
மாற்கு15:4 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ' என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ' என்பது அதற்குப் பொருள்.
//தன் வாழ்நாளில் உலகம் அழியும் எனப் பார்த்து கடைசியில் நம்பிக்கை இழந்து தூக்கு மரத்தில் கடைசியாக புலம்பியது
மாற்கு15:4 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ' என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ' என்பது அதற்குப் பொருள்.//
Avg.Krishnan அவர்களே தாங்களின் இந்த குற்றசாட்டுகள் எவ்வளவு போய் என்பதையும் இந்த கிழே உள்ள வசணங்களை வாசித்தாலே புரியும் உங்களுக்கு. இயேசுவின் சிலுவைமரணம் அவருக்கு ஏர்கனவே தேரிந்த ஓன்றுதான். இது உங்களுக்கு புதியதகவலாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். நிங்கள் பைபிளை குற்றசாட்ட வேன்டும் என்ற ஓரே நோக்கத்துடன் சேயல்படுவது இப்போழது நன்றாக தேரிகின்றது.
மாற்க்கு 10 அதிகார்ம் 33 வசணம் முதல் 34 வரை
33 இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். [Matt 16:21]; [Matt 17:22]; [Mark 8:31]; [Luke 9:22]; [Luke 17:25]; [Luke 24:6]; [Luke 24:44];
34 அவர்கள் அவரைப் பரியாசம் பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர் மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். [Matt 27:63]; [Matt 28:6];
இப்படிக்கு
ஷாபு
please i have a doubt here.. am new to Christianity .. St.Anthonys will be adoring infant jesus// then why your post say's ..dnt follow St.Anthonys.. plz can u explain ..
One more thing y we shuld nt pray in front of jesus idol ..
மிக்க நன்றி ககோதரன் ஷாபு.
சகோதரி priscess அந்தேனியாரை பின்பற்ற வேண்டாம் என்று கூறவில்லை. அவரை வணங்க வேண்டாம் என்றே கூறுகிறோம்.
அந்தோனியார் இயேசுவின் நாமத்தில் அற்புதங்களை செய்த ஒரு சிறந்த ஊழியர் மற்றும் மதகுரு. அவர் கடவுளல்ல. அவரைப் பின்பற்றி இயேசுவை வணங்குங்கள்.
இயேசுவின் சிலையை வணங்குவது மிகத்தவறு சகோதரி.
உயிரோடு இருக்கும் உங்கள் தந்தையின் சிலையை செய்து தந்தை உங்கள் அருகில் இருக்கும் போது அந்த சிலைக்கு முன்னால் நின்று பேசினால் அவருக்கு எப்படி இருக்கும்?
இறைவனை காண முடியாது என்பதற்காக அவரது சிலையை செய்து வணங்குமளவிற்கு பிசாசு மனிதர்களின் மனதை வஞ்சித்து வைத்திருக்கிறான். உங்கள் தந்தை வெளிநாட்டுக்கு போனால் உங்கள் தந்தையை கூட உங்களால் காண முடியாது.
சிலை செய்வது செத்தவர்களுக்கு தான். இயேசுவின் சிலையை செய்வது தவறல்ல என்று போதித்து மனிதர்களை சிலை வணக்கத்தில் நடத்தி சாத்தான் இறைவனை கேவலப்படுத்துகிறான். நாம் அதை அறியாத முட்டாள்களாக இருக்கிறோம்.
மேலும் இங்கே கத்தோலிக்க தேவாலயங்களில் இருப்பது இயேசுவின் சிலை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? இயேசுவை யாராவது கண்டிருந்தார்களா?
எந்தவொரு சிலையையும் வணங்கக் கூடாது என்று வேதாகமத்தில் எக்கச்சக்க வசனங்கள் உண்டு. மேலுள்ள கடடுரையில் நீங்கள் அதில் சிலதை காணலாம்
thanks a lot brother for explaining me in such a detail.
The example u took is much more related to my life, my dad is not here, he is another place. i can correlate what god is actually trying to speak with me.
Please dnt get angry on me , since am new to Christianity please dnt get angry on me.. we should not pray in front of Jesus photo also ah..
I dnt know how to type in tamil..thats y every line is in english.
please if you wish you can publish this comment.. i dnt know whther i can ask this help or not.
can you please help me how to pray to God without any distraction. can you please teach me how to pray (to do jebam)
Brother please dnt take it in a wrong sense. For newborn kids parents use to teach..please can you teach us (many number of new followers will be there like me, this would help them) how to do jebam. if possible plz do a post..
I dnt know how to type in tamil..
நல்ல கேள்விதான் சகோதரா. ஆனால் நீர் தவறாக புரிந்து கொண்டுள்ளீர். இயேசு “என்னை நல்லவன் என்று சொல்லாதே” என்று கூறவில்லை. தேவனை மட்டுமே இஸ்ரவேலர்கள் நல்லவர் என்று சொல்லுவார்கள். எந்த மனிதனும் நல்லவன் அல்ல என்பது அவர்களின் கருத்து. அது உண்மையே.
ஆனால் இங்கே இயேசு கூற வருவது என்னவென்றால் “தேவனை மட்டும் தானே நல்லவர் என்று கூறுவீர்கள் அப்படியிருக்க என்னை நல்லவன் என்று கூறுகின்றாயே. அப்படியானால் என்னை தேவனிடமிருந்து வந்தவரென்று ஏற்றுக் கொள்கிறாயா?” என்ற அர்த்தத்திலேயே அப்படிக் கேட்டார்.
மேலும் இதே இயேசு கூறிய இந்த வார்த்தையை நீர் படித்ததுண்டா? படித்துப்பாரும்.
யோவான் 8:46 என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க,நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை (இயேசு)
இங்கே இயேசு தான் பாவி அல்ல என்று கூறுவதை கவனித்தீரா?
இயேசு தன்னை பாவியென்று ஒத்து கொள்ளுகிறார் என்று நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். இப்படிப்பட்ட அவதூறை உந்களுக்கு சொல்லித் தந்தவர் இந்த வசனத்தை சொல்லித் தராமல் மறைத்து விட்டார் பார்த்தீர்களா?
//we should not pray in front of Jesus photo also ah..//
நிச்சயமாக சகோதரி. நாம் எந்த படத்தின் முன்பும் நின்று தொழுது கொள்ளக் கூடாது.
மட்டுமல்ல இயேசுவின் படம் என்று எதை சொல்லுகிறீர்கள்? இயேசுவை யார் கண்டார், யார் கண்டு வரைந்தார்? அப்படி கண்டு வரைந்திருந்தாலும் அதை எப்படி தொழ முடியும்? அதன் முன்பு எப்படி ஜெபிக்க முடியும்?
அது மட்டுமல்ல சித்திர வேலையானவற்றை வணங்க கூடாது எனவும் இறைவன் கூறியுள்ளார்.
யாத்திராகமம் 20:4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
பொது மொழி பெயர்ப்பு...
யாத்திராகமம்-20;1-5
கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:2 நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.3 என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.4 மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்:
இந்த லிங்கையும் பார்க்கவும்
http://www.hichristians.com/2012/10/blog-post_7410.html
முழுவதும் வாசிக்கவும் சகோதரி
சகோதரி princess எப்படி ஜெபிப்பது என்னும் தலைப்பில் கட்டாயம் ஒரு போஸ்ட் போடுகிறேன். அதில் உங்கள் கேள்விகளுக்கு நிச்சயம் பதில் இருக்கும். சொற்ப நாட்கள் காத்திருந்கள் விரைவில் பதிவிடுகிறேன்.
மேலும் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்வது தெரியாது என்று கூறியிருந்தீர்கள். உங்களைப் போன்றவர்களுக்கு பயனளிக்கும் ஒரு தளம் இருக்கிறது. அதன் link தருகிறேன். அங்கே நல்ல விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது வாசித்து டைப் செய்ய தொடங்குங்கள்.
அங்கே டைப் செய்து கொப்பி பேஸ்ட் செய்யுங்கள்
http://www.bibleuncle.com/p/tamileditor.html
//லூக்கா 2:35 ல் மரியாள் ஒரு பட்டயத்தால் கொல்லப்படுவாள் என்று பார்க்கிறோம். அவளும் சீஷர்களைப்போல இரத்த சாட்சியாக மரித்தாள்.//
லூக்கா 2: 25 முதல் 35 வசணங்கள் வரை
25 அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
26 கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
27 அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
28 அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
29 ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
30 புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
31 தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
32 உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
33 அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
34 ((பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.))
35 ((உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.))
இந்த லூக்கா 34 மற்றும் 35பைபிள் வசனத்தை நாம் கூர்ந்தூ திரும்ப திரும்ப வாசித்தூ பார்த்தால் தேள்ள தேளிவாகபுரியும் உன் ஆத்துமாவை பட்டயம் உருவும் என்றால் இயேசுவின் சிலூவைமரனத்தையே அப்படி மறைமுகமாக கூறியுள்ளார் எனலாம். மாம்சத்தை பட்டயம் உடுருவும் என்றால்லாவது மரியாளை கூரியதாக ஏடுத்துக்கோள்ளலாம். அப்படியேன்றால் ஏன் இவ்வாரு சிமியோன் கூறவேன்டும் என்றால் ஓரு அம்மாவின் கன்முன்னனே மகன் சித்தரவதைபட்டு இரந்தால் அது அந்ததாயின் இருதயத்தில் பட்டயத்தை உடுருவது போல்தானே. ஏன் இவ்வாறு கூறுகின்றேன் என்றால் மரியாள் பட்டயத்தால் இரத்த சாட்ச்சியாக இரந்தார் என்று பைபிளில் நிருபிக்கபடவில்லை, அவரின் தந்தை பற்றியும் சகோதர்கள் பற்றியும் கூடத்தான் அவர்களின் கடைசிகாலத்தை பற்றி இல்லை. அணால் இயேசுவின் மரணத்தை பற்றி தேள்ளதேளிவாக கூறப்பட்டுள்ளது. நான் சோன்ன இந்த இரன்டு கருத்துக்களையும் பைபிள் வசனத்தையும் திரும்ப திரும்ப வாசித்து தியானித்து பாருங்கள்.
நான் சோன்னவற்றில் எதாவதூதவரு இருந்தால் விளக்கவும்
இப்படிக்கு உங்கள் சகோதரன்
ஷாபு
mariyaal vaazththappadak kuudiyaval . poorrappadakkuudiyaval. araathikkappadak kuudiyaval alla. kaththoolikkathil mariyaalai vaayththukiraaikal. poorrukiraarkal. araathippathillai. aaraathanai pathaa sothan thuuya aaviyaanavukkuththaan.
நீங்கள் சொல்வது சரிதான் jlpeter மரியாளை கத்தோலிக்கர்கள் ஆராதிப்பதில்லை என்கிறீர்கள். ஆனால் மரியாளிடம் நாம் ஜெபிக்க முடியாது என்பதையும் ஏற்றுக் கொள்ளுங்கள். மரியாள் மூலமாக ஜெபிக்க முடியாது இயேசு மூலமாகத்தான் ஜெபஜக்க முடியும்
இறை இயேசுவில் அன்புமிக்க சகோதரர் அவர்களே,
இணையதள வழி இறைபணிபுரியும் தங்களை வாழ்த்துகிறேன்.
தாங்கள் பயிற்றுவிக்கப்படும் ஆவிக்குரிய சபையின் கருத்துக்களை பின்பற்றி உங்கள் பதிவுகள் இருப்பது வரவேற்கதக்கதாயினும், பிறிதொரு சபையின் கருத்துக்களை மேலோட்டமாக தெரிந்து கொண்டு விமர்சிப்பது சரியல்ல என்பது என் கருத்து.
கத்தோலிக்க திருச்சபையின் போதனை, அன்னை மரியாவை ஆராதிக்கவேண்டும், அவர் மூலமாகவே பிதாவிடத்தில் செல்ல வேண்டும் என்பதாக எப்போதும் இல்லை. (பார்க்க: உங்கள் இரண்டாம் காரணம் 1`)(1)தங்களிடம் அப்படிப்பட்ட போதனை ஆதாரங்கள் இருப்பின் தாருங்கள்.
இத்தொகுப்பில் மரியாள் குறித்து உரையாடுவோமா சகோதரரே!
(2)மரியாளின் புகழ் பாடலை வேதத்தில்(லுக்கா எழுதிய சுவிஷேசம் / நல்ல செய்தி) பார்ப்போமானால் "இந்நாள் முதல் எல்லா தலை முறையும் என்னை பேறு பெற்றவள் என போற்றுமே" என்கிறாரே அன்னை? அவரை பேறு பெற்றவராக போற்றுவதில் என்ன குறை கண்டீர்கள்?
(3) உங்கள் முன்னோட்டத்தில் குறிப்பிடும் கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவு படத்தொடங்கினது. அப்போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். இதை உதாரணமாகக் காட்டி: பாருங்கள் அங்கே அவர்களுக்கு தேவையான திராட்சரசத்தை மரியாள்தான் இயேசுவிடமிருந்து வாங்கிக் கொடுத்தாள். எனவே நம்முடைய தேவைக்கு தாயிடம் கேட்டால், மறுக்காமல் கிடைக்கும் என்று ரோமன் கத்தோலிக்கர்கள் சொல்கின்றார்கள். "இதுதவறானபுரிந்துகொள்ளுதல்." என்கிறீர்கள்.
என்னுடைய வேளை ( நேரம்) இன்னும் வரவில்லை என்று சொன்ன யேசு, வேளை வராவிட்டாலும் தன் தாயின் நம்பிக்கையான பரிந்துரையின் படி தண்ணீரை முதல் தர திராட்சை ரசமாக மாற்றி தந்தாரா/ இல்லையா?
"அன்னையி பரி ந்துரை இயேசுவினால் (தன் வேளை வரவிட்டாலும்)மறுக்கப்படுவதில்லை' என்பதற்கான வேதத்தின் அக சான்று இது.
(4)"தாய் என்னும் உறவை இயேசு மறுக்கின்றார்' என்று போதிக்கிறீர்கள்.(உங்கள் இரண்டாம் காரணம்) "கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவு படத்தொடங்கினது. அப்போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்" இது வேதத்தின் வசனம். இது தெளிவாகச் சொல்கிறது 'இயேசுவின் தாய்' என்று. இங்கு மட்டுமல்ல பல் இடங்களிலும் 'இயேசுவின் தாய்' என்பது பதிவு செய்யபட்டிருகிறது. தூய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வசனங்கள் இவை. இதை ('இயேசுவின் தாய்'என்பதை) இயேசு மறுப்பதாக எப்படி புரிந்து கொள்கிறீர்கள் சகோதரரே?
தொடர்வோம்
with love in Christ
Devaraj
கிறிஸ்துவுக்குள் என் அருமை நண்பர் தேவராஜ் அவர்களே. கனிவான முறையில் விவாதத்தை தொடங்கியமைக்கு நன்றிகள். ///கத்தோலிக்க திருச்சபையின் போதனை, அன்னை மரியாவை ஆராதிக்கவேண்டும், அவர் மூலமாகவே பிதாவிடத்தில் செல்ல வேண்டும் என்பதாக எப்போதும் இல்லை/// நண்பரே மரியாளை ஆராதிக்க வேண்டியதில்லை என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் மரியாளின் சிலையை சுமந்து கொண்டு வீதி வீதியாக பவனிகள் நடத்தி பூக்கள் தூவி பாடல்கள் பாடி பஜனைகள் செய்வது ஆராதிப்பதாகாதா? மேலும் மாதாவுக்கென்றே கோவில்கள் ஏன் கட்டப்பட வேண்டும்? மாதா சிலைக்கு முன் நின்று ஏன் வணங்க வேண்டும்?
இறை இயேசுவில் அன்புமிக்க சகோதரர் அவர்களே,
எனது பதிவிற்கு மதிப்பளித்து உரையாட முன் வந்தமைக்கு நன்றி. தனி நபர்களுக்கு இடையில் சபைகளுக்கும் இடையில் ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் தொடர்வது நல்லது.
இரை இயேசு ஜெபித்தாரல்லவா... "தந்தையே, நாம் ஒன்றாயிருப்பது போல, இவர்களும் ஒன்றாயிருப்பார்களாக". அவர் விருப்பம் நிறைவேற பல்வேறு தளங்களில் நடைபெறும் உரையாடல்கள் உதவும்.
எனது பதிவின் எண் ஒன்றிலிருந்து உங்கள் உரையாடல் தொடங்குகின்றது அல்லவா?.
//நண்பரே மரியாளை ஆராதிக்க வேண்டியதில்லை என நீங்கள் சொல்கிறீர்கள்... ஆனால் மாதா சிலைக்கு முன் நின்று ஏன் வணங்க வேண்டும்?//
ஆராதனை வேறு. வணக்கம் வேறு. இது முதலில் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
"திவ்ய இயேசுவே உம்மை (அ)ஆராதித்து (ஆ)வணங்கி (இ) நன்றியுடன் (ஈ) ஸ்தோத்திரம் செய்கின்றோம்' என ஜெபிக்கின்ற கத்தோலிக்க கிறிஸ்தவம், அன்னை மரியிடம் இப்படி சொல்வதில்லை.
கபிரியேல் வானதூதருடன் சேர்ந்து 'அருள் நிறைந்தவரே வாழ்க" என அன்னை மரியை வாழ்த்துகின்றார்கள்.எலிஸபெத்தோடு சேர்ந்து 'பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவரே" என சிறப்பு செய்கிறார்கள். "எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும்" என வணங்கி கேட்கிறார்கள்.
//நண்பரே மரியாளை ஆராதிக்க வேண்டியதில்லை என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் மரியாளின் சிலையை சுமந்து கொண்டு வீதி வீதியாக பவனிகள் நடத்தி பூக்கள் தூவி பாடல்கள் பாடி பஜனைகள் செய்வது ஆராதிப்பதாகாதா? மேலும் மாதாவுக்கென்றே கோவில்கள் ஏன் கட்டப்பட வேண்டும்? மாதா சிலைக்கு முன் நின்று ஏன் வணங்க வேண்டும்?//
கத்தோலிக்க திருச்சபை அன்னை மரியாவை ஆராதிப்பது இல்லை. வணங்குவது உண்டு.
"இந்நாள் முதல் என்னை எல்லா தலைமுறையும் பேறுடையாள் என் போற்றுமே" என மகிழ்வுடன் பாடும் அன்னையின் கூற்றை தலைமுறை தலைமுறையாய் வீதி வீதியாய் பறை சாற்றும் பவனிகள் அவை. வேதத்தின் அவ்வசனம் இங்கே நிறைவேறுகிறது.
//நண்பரே மரியாளை ஆராதிக்க வேண்டியதில்லை என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் மரியாளின் சிலையை சுமந்து கொண்டு வீதி வீதியாக பவனிகள் நடத்தி பூக்கள் தூவி பாடல்கள் பாடி பஜனைகள் செய்வது ஆராதிப்பதாகாதா? மேலும் மாதாவுக்கென்றே கோவில்கள் ஏன் கட்டப்பட வேண்டும்? மாதா சிலைக்கு முன் நின்று ஏன் வணங்க வேண்டும்?//
சகோ.ராபர்ட் , இதற்கான என் கருத்தினை அனுப்பியிருந்தேனே. பதிவு செய்யவில்லையா?
நம் உரையாடலை தொடர்வதற்கு அது உதவுமே!
நண்பரே நீங்கள் சொல்வது போலல்ல சகோதரரே. எல்லா கத்தோலிக்க சபைகளிலும் மரியாளை தெய்வத்துக்கு நிகராக பார்க்கிறார்கள்.
காணிக்கை மாதா, மடு மாதா, வேளாங்கன்னி இப்படி இன்னும் பல பெயர்களில் மரியாளை ஆராதித்து வருவதை அப்படியே மறைக்கப் பார்க்கிறீர்கள்.
மரியம்மை மீது தெய்வ பக்தியுள்ள கத்தோலிக்கர்கள் இல்லை என்று சொல்ல முடியாது,
மேலும் “சந்ததிகள் தன்னை பாக்கியவதிகள் என்று போற்றுவார்கள்” என்று மரியாள் சொன்ன ஒரே வசனத்தை வைத்து கொண்டு “மரியாளை வணங்கலாம்” என்ற ஒரு வேத தத்துவத்தை உருவாக்க முடியாது.
வேதாகமத்தில் தானியேலின் நண்பர்களைக் குறித்து படித்து பாருங்கள். அவர்கள் ராஜா உண்டாக்கிய சிலையை பணிந்து கொள்ள மாட்டோம் என பிடிவாதமாக இருந்தார்கள் அதை கடவுள் கனப்படுத்தினார். மாதா சிலை முன்பு பணிந்து கொள்வதை வேதத்தின் படி எவ்வகையிலும் நீங்கள் நியாயப்படுத்த முடியாது.
//////(4)"தாய் என்னும் உறவை இயேசு மறுக்கின்றார்' என்று போதிக்கிறீர்கள்.(உங்கள் இரண்டாம் காரணம்) "கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவு படத்தொடங்கினது. அப்போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்" இது வேதத்தின் வசனம். இது தெளிவாகச் சொல்கிறது 'இயேசுவின் தாய்' என்று. இங்கு மட்டுமல்ல பல் இடங்களிலும் 'இயேசுவின் தாய்' என்பது பதிவு செய்யபட்டிருகிறது. தூய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வசனங்கள் இவை. இதை ('இயேசுவின் தாய்'என்பதை) இயேசு மறுப்பதாக எப்படி புரிந்து கொள்கிறீர்கள் சகோதரரே?//////
மனுஷீகமாக மரியாளை இயேசுவின் தாய் என்றே மத்தேயு , மாற்கு, லூக்கா, யோவான் புரிந்து வைத்திருந்தார்கள். அவர்கள் தான் இயேசுவின் தாய் என்றார்கள். இயேசு அந்த உறவை மறுத்தார்.
//நண்பரே நீங்கள் சொல்வது போலல்ல சகோதரரே. எல்லா கத்தோலிக்க சபைகளிலும் மரியாளை தெய்வத்துக்கு நிகராக பார்க்கிறார்கள்.//
1. கத்தோலிக்க சபை ஒன்றுதான்; கத்தோலிக்க சபைகள் என பல இல்லை.
2. அன்னை மரியாவை ஒரு புனிதராக கற்பிக்கிறார்களே தவிர. அவர் தெய்வத்துக்கு நிகரானவர் என எந்த கத்தோலிக்க குருவும் போதிப்பதில்லை. பிறிதொரு சபையைப் பற்றி உண்மைக்கு புறம்பாக மீண்டும் மீண்டும் பேசுகிறீர்கள் சகோ.ராபர்ட்.
//காணிக்கை மாதா, மடு மாதா, வேளாங்கன்னி இப்படி இன்னும் பல பெயர்களில் மரியாளை ஆராதித்து வருவதை அப்படியே மறைக்கப் பார்க்கிறீர்கள்.//
மடு மாதா, வேளாங்கண்ணி மாதா, லூர்து மாதா, பாத்திமா அன்னை.... என பலவாறாக அடைமொழியிட்டாலும்.. அவர் ஒருவர்தான். அது இறை இயேசுவை பெற்றெடுத்து, பாலூட்டி சீராட்டி வளர்த்து, னானத்திலும் அறிவிலும் பயிற்றுவித்த அவர்தம் தாய் மரியாவைத்தான்.
இவரை மரியாதையுடன் அன்புடன் வணங்கி வருவதை மறுக்கவுமில்லை;மறைக்கவுமில்லை.
இவரை கத்தோலிக்க திருச்சபை ஆராதித்து வருவதுபோல் மீண்டும் மீண்டும் தாங்கள் திரித்து சொல்ல காரணம்?
//மரியம்மை மீது தெய்வ பக்தியுள்ள கத்தோலிக்கர்கள் இல்லை என்று சொல்ல முடியாது,//
அம்மாவை அன்பு செய்யும் பிள்ளைகள் யாம். "இதோ உன் தாய்" என்று எம்பெருமான் இயேசு தந்த தாயல்லவா அவர்?
மேலும் “சந்ததிகள் தன்னை பாக்கியவதிகள் என்று போற்றுவார்கள்” என்று மரியாள் சொன்ன ஒரே வசனத்தை வைத்து கொண்டு “மரியாளை வணங்கலாம்” என்ற ஒரு வேத தத்துவத்தை உருவாக்க முடியாது.
வேதத்தின் ஒரு புள்ளியும் வீணாய் போவதில்லை சகோ.ராபர்ட்.
இந்த வசனம் மட்டும் வீணாய் சொல்லப்பட்டதென்று ஏன் முடிவு செய்ய எங்களை வற்புறுத்துகிறீர்கள் சகோ.ராபர்ட்?
வேதாகமத்தில் தானியேலின் நண்பர்களைக் குறித்து படித்து பாருங்கள். அவர்கள் ராஜா உண்டாக்கிய சிலையை பணிந்து கொள்ள மாட்டோம் என பிடிவாதமாக இருந்தார்கள் அதை கடவுள் கனப்படுத்தினார். மாதா சிலை முன்பு பணிந்து கொள்வதை வேதத்தின் படி எவ்வகையிலும் நீங்கள் நியாயப்படுத்த முடியாது.
// வேற்று தெய்வ வழிபாட்டையும், இயேசுவின் தாய் மரியாவுக்கு தரப்
// மனுஷீகமாக மரியாளை இயேசுவின் தாய் என்றே மத்தேயு , மாற்கு, லூக்கா, யோவான் புரிந்து வைத்திருந்தார்கள். அவர்கள் தான் இயேசுவின் தாய் என்றார்கள்.//
இயேசுவின் தாய் மரியாவை குறித்து தூய ஆவியானால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் எலிசபெத் சொல்லும் வார்த்தை " என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் பேறு பெற்றது எப்படி?"
ஆண்டவரின் தாயை வெறும் சமையல் பாத்திரம், காலி முட்டை ஓடு என வர்ணித்து இழிவு படுத்தும் ஆவிக்குரியவர்கள் எத்தகு ஆவியினால் போதிக்கிறார்கள்? தூய ஆவியினாலா அல்லது தீய ஆவியினாலா என பல முறை நான் யோசித்ததுண்டு.
கத்தோலிக்க திருச்சபையினர் தூய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டு பேசிய எலிசபெத்தோடு இணைந்து "என் ஆண்டவரின் தாயை எமக்கும் தாயாக அடைய யாம் பேறு பெற்றது எப்படி? என இன்றும் வியந்து அகமகிழ்கிறார்கள்.
சகோதரா் Antony Devaraj அவர்களே எனது இத்தளத்தில் சில சிக்கல்கள் இருப்பதால் அதிகப்படியான comments களை வெளியிட முடியவில்லை. மன்னித்து கொள்ளுங்கள். ஆனாலும் உங்கள் கருத்துகளை நான் பதிவிட விரும்புகிறேன். இப்படிப்பட்ட சிக்கலான விடயங்களை சமாளிப்பதற்காக ஒரு கலந்துரையாடல் களமொன்றை உருவாக்கியுள்ளோம். அக் கலந்துரையாடல் களம் இதே தளத்துக்குரியதே. அங்கே தயவுசெய்து வருகை தந்து உங்கள் மேலான கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
ஆரோக்கியமான கலந்துரையாடல் ஒன்றை விரும்புகிறேன். பார்க்கும் அனைவருக்கும் மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.
தாமதத்திற்கு மன்னிக்கவும்...
மரியாளை வணங்கக்கூடாது என்று பைபிளில் எங்கேயும் சொல்லப்பட்டிருக்கா?
இயேசுவின் பெயரை சொல்லிக்கொண்டே நரகத்தில் விழும் அப்பாவிகள் நீங்கள்.
சகோதரரே மரியாளை ஆராதிக்க கூடாது என்று சொல்கிறோம். நீங்கள் சொல்கிறீர்கள் நாங்கள் ஆராதிக்கவில்லை வணங்குகிறோம் என்று.
ஆராதித்தல் வணங்குதல் என்று பிரித்துக் கூறி கொண்டிருக்கிறீர்கள். ஆராதிக்கக் கூடாது என்பது மட்டுமல்ல வணங்கவும் கூடாது.
கீழே உள்ள பொது மொழி பெயர்ப்பு வேதாகமத்தின் வசனங்களை வாசியுங்கள்
யாத்திராகமம்-20;1-5 கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:2 நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.3 என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.4 மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்:
இங்கே “நானே உன் கடவுளாகிய ஆண்டவர்” என்று கூறியது யார்? திரித்துவ தேவன் என்பதை ஏற்று கொள்கிறீர்களா? அதாவது தந்தை, மகன், பரிசுத்த ஆவி.
இந்த தெய்வத்தை தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. மரியாளும் வேறொருவர்தான்.
மற்றும் யாருக்கும் சிலைகளை உருவாக்கி அவைகளை வழிபடவும் அவைகளுக்கு பணிவிடை புரியவும் வேண்டாம் என்று கூறப்படுவதை ஏற்றுக் கொள்கிறீர்களா?.
////வேதத்தின் ஒரு புள்ளியும் வீணாய் போவதில்லை சகோ.ராபர்ட்.
இந்த வசனம் மட்டும் வீணாய் சொல்லப்பட்டதென்று ஏன் முடிவு செய்ய எங்களை வற்புறுத்துகிறீர்கள் சகோ.ராபர்ட்?////
நான் எங்கோ சொல்லியுள்ளேன் இப்படி?
சகோதரரே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் மனிதப்பிரகாரமாக மரியாள் இயேசுவின் தாய் என்பதில் சந்தேகம் இல்லை. அதைத்தான் எலிசபெத்தும் கூறினார். அதை நாங்கள் மறுப்பதில்லை.
இறைவனாக இருந்த இயேசு மனிதனாக பிறப்பதற்கே அவர் (மரியாள்) தாயானார். ஆனால் இயேசுவை இறைவனாக பார்க்குமிடத்து அவருக்கு தாய் இல்லை.
மரியாள் இறைவன் இயேசுவின் தாயானால் மரியாளின் கணவர் யார்? என்ற அசிங்கமான கேள்வி எழும்பும்.
இறைவனை ஒரு மனிதப் பெண் பெற்றெடுக்க முடியாது. மரியாள் ஒரு மனிதப் பெண். இவர் இப்போது இறந்து போனார். நீங்கள் அவரை வணங்குவது ஒரு இறந்தவரை வணங்குவதற்கே சமம்.
மரியாளை நாமும் மதிக்கிறோம். அவரைப் பின்பற்றி தூய்மையாக வாழ முயற்சி செய்கிறோம். ஆனால் இறந்து போன ஒருவரை வணங்க வேண்டாம் என்றே கூறுகிறோம்.
Dear Friends
Just now I came to know about this site. First of all, we proclaim that Jesus is our God-our saviour. The only problem you are mentioning is the method of worshipping. Rightly speaking the Bible (especially the Old testament) is being wirtten for Israels... It speaks about the culture and dress about Israel people. God has come here to Earth for everyone's salvation. We have to follow Jesus in life according to his teachings of love and passion on poor and neighbours. I can glorify God in any way as I like. The 'non sculptural' type of worship was propagated only because of caution and to oppose the way of Egyptians style of idol worship. This is insisted in all the scriptures from the Palestine land (Jews holy book, Koran, Bible). But for me, as an Indian, I feel fully satisfied in glorifying God through offering flowers, lighting lamps etc in front of Jesus statues. What is wrong in it?? .. It is all depends on how we follow Jesus teachings in our life and make our life useful to others. None other than this.
You people are wasting your full time in opposing these statues. Go and work in slums.. Educate poor and oppressed people to get their rights. That is what Jesus want from you.. I am worshipping my God Jesus in my cultural way. I feel the nearness to God when I stand before the statues of Jesus. I am not going to other temples. Only and only Jesus is my way.... I need your comments regarding this...
நண்பரே நீங்கள் மிகவும் நன்று திருவிவிலியத்தை படிக்கவும் தந்தை மகன் தூயாவி மட்டுமே நம் பிரதானம்.தேவையில்ல இந்த விமர்சனங்கள். மேலும் பரிசுத்தர் தேர்ந்துஎடுத்த முதல் பெண் மரியா. நம் தமிழ் பெண்கள் அல்ல!!! வெளிப்பாடு 12 இல் மிக தெளிவாக எழுதி இருக்கிறான் யோவான் இயேசுவின் தாய் எங்கு தற்போது என. நம் எல்லோரைவிடவும் மரியா மிகவும் மேன்மையானவள், அவளை விமர்சிக்க நாம் யாருக்கும் தகுதி கிடையாது. Anbudan Rathnaswamy Allwin, E-mail: rsallwin@yahoo.com
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..