நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT

தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்



கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என் வேண்டுகோள் :

அன்பு சகோதரர்சகோதரிகளே. நீங்கள் உங்கள் மார்க்கம் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை ஒரு வேளை இஸ்லாமிய தளங்களில் படிக்க நேரிட்டால், (கிறிஸ்தவ தளங்களில் படிக்க நேரிட்டாலும் சரி ) உடனே அதில் சொல்லப்பட்டது "உண்மை" என்று நம்பிவிடாதீர்கள். அந்த தளம் எவ்வளவு பெரிய இஸ்லாமிய அறிஞருடையதாக இருந்தாலும் சரிமுதலில் அதை படித்துஆதாரங்கள் உண்டா என்று சரி பார்த்துஉங்கள் மார்க்க அறிஞர்கள் அதற்கு என்ன பொருள் கூறுகிறார்கள் என்று தெரிந்த பிறகே எந்த முடிவிற்கும் வாருங்கள். 

முன்னுரை: 
தமிழ் மூஸ்லீம் தளத்தின் இஸ்லாமிய அறிஞர்கள் மாற்று மதங்களோடு இஸ்லாமை சம்மந்தப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகிறார்கள். மாற்று மதங்களில் உள்ள சில வார்த்தைகளை எடுத்துக்கொண்டு அதற்கு "இஸ்லாமிய முறையில்" பொருள் கூறுகி றார்கள். அந்த வார்த்தைகளுக்கு உண்மை பொருள் என்ன என்று பார்க்காமல்இஸ்லாமிய வார்த்தைகளுக்கு ஏற்றார் போல் பொருள் கூறிவருகிறார்கள்.

Continue Reading | கருத்துகள்

"நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்லியுள்ளாரா?


Answering islam தளத்திலிருந்து.......
கேள்வி:

கிறிஸ்தவர்கள் நினைப்பது போல பைபிளில் எங்கேயாவது "இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா?  தயவு செய்து காட்டமுடியுமா

பதில்:

என்னிடம் இந்த கேள்வி அனேக முறை கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியைப் பற்றிய ஒரு சுருக்கமான மற்றும் முக்கியமான பதிலாக இக்கட்டுரை அமையும் என்று நான் நினைக்கிறேன்.
நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்” என்று இயேசு ஒரு இடத்திலும் சொல்லவில்லை.

ஒரு எடுத்துக்காட்டிற்காகஉண்மையாகவே ஒரு மனிதன் உங்களிடம் வந்து, "நான் தான் இறைவன்என்னை வணங்குங்கள்" என்று சொன்னால்நீங்கள் என்ன செய்வீர்கள்?
Continue Reading | கருத்துகள் (2)

கா்த்தரின் கால அட்டவணை




எல்லாவற்றையும் படைத்து ஆளுகை செய்யும் நம் தேவன் ஒழுங்கின் தேவன்அவா் கண்ட கண்ட நேரத்திலெல்லாம் நினைத்த காரியங்களை யெல்லாம் செய்து கொண்டிருப்பதில்லைஎன்பது உங்களுக்கு தெரியுமாநம்முடைய தேவன் ஒவ்வொரு செயல்களையும் செய்ய ஒவ்வொரு கால நேரத்தை ஒழுங்கு முறைப்படி குறித்து வைத்துள்ளார்நம்மைப்போல பல்லு விளக்கும் நேரத்தில் தூங்கவும்தூங்கும் நேரத்தில் சினிமா பார்த்துக்கொண் டிருக்கவும் அவர் மனிதனல்லஅவர் தேவன்அவர் தன்னுடைய ஒவ்வொரு செயல்களுக்கும் என்ன காலத்தைநேரத்தை குறித்து வைத்துள்ளாரோ அதிலிருந்து ஒரு செக்கன் கூட முந்தவுமாட்டார் பிந்தவுமாட்டார்.

செய்வேன் என்று சொல்லி காலத்தை குறித்த ஒரு விடயத்தை செய்ய மறந்துவிட்டு ஐயோஎன தலையில் கை வைத்துக் கொண்டு நிற்பவரல்ல நம் அப்பா. சொன்னால் சொன்னதை சொன்ன காலத்தில் அவர்  நிறைவேற்றி தீருவார். எல்லாவற்றையும் செய்ய ஒரு கால நேரத்தை குறிப்பது அவரது ஸ்டைல். இந்த வசனங்களை கவனியுங்கள்
Continue Reading | கருத்துகள்

டிசம்பர் 25-ல் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்பது தவறு : போப் ஆண்டவர் வாக்குமூலம்! – இஸ்லாமிய அறிஞர்கள்அதிர்ச்சி!!

IEMTINDIA தளத்தில் வெளியான கட்டுரை 


கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என்ன ஒரு புது தலைப்பாக இருக்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம். தலைப்பில் உண்மை இல்லாமல் இல்லை.இத்தனை நாட்களாக கிறிஸ்தவ மக்களிடையே கிறிஸ்மஸ் தினத்தை குறித்து ஏதாவதும் சொல்லி ஏமாற்ற இருந்த ஒரு வாய்ப்பையும் இழ்ந்துவிட்டோமே என்ற அதிர்ச்சியில் இருக்கிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள்.பெரும்பான்மை
Continue Reading | கருத்துகள் (2)

கண்ணியமாக உடுத்துதலில் சுவிசேஷத்தைப் பிரதிபலித்தல்


(Validating the Gospel in Modesty)
டிரினிட்டி பாப்திஸ்து சபை, மான்ட்வெல், நியூஜெர்ஸி என்கிற இடத்தில் 24, பிப்ரவரி 2008ல் போதகர் அல்பர்ட் N. மார்டின் பிரசங்கித்த செய்தியின் சாராம்சம்


Website: http://www.trinitymontville.org

தமிழில் மொழிபெயர்ப்பு: விநோதாசுரேந்தர்


கடந்த 45 ஆண்டுகளாகநான் உங்கள் மத்தியில்போதகர்களுள் ஒருவராக நின்று பிரசங்கித்திருக்கிறேன்.
Continue Reading | கருத்துகள் (4)

ராபர்ட் கால்டுவெல்


கால்டுவெல் (1814-1891) என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் அவர்கள் திராவிட மொழி நூலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதே.

இளமைக் காலம்

இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது லண்டன் மிஷனரி சொசைட்டி என்னும் கிறிஸ்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838 ஜனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.
Continue Reading | கருத்துகள்

கூட்டத்தோடு கூட்டமாய்

நான் என் தேவனுடன் -- 01


தேவனே...!

கூட்டத்தோடு கூட்டமாய்
நடப்பதை விடவும்
தனிமையில் நடக்கையில் தான் - நீர்
உடனிருப்பதை உணருகிறேன்.

னவேதான் தேவனே...!
நண்பர்கள் உறவெல்லாம்
என் கூட இருப்பதை விட
தனிமையை நான் விரும்புகிறேன்.

ல கலப்பும் சிரிப்புமுள்ள
சந்தோஷ நேரங்களை விட
வேதனையின் வேளைகளையும் விரும்புகிறேன்.

wrote.04-09-2011/  type-13-12-2012 By Robert Dinesh.
Continue Reading | கருத்துகள்

ஆகாயத்தை அடிக்கிறவர்கள்.


இன்றைக்கு நிறைய ஊழியக்காரர்கள் சிலம்பம் பண்ணுவதாக சொல்லிக் கொண்டு ஆகாயத்தை அடிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? சிலம்பம் என்பது நீளமான தடியினால் சுழட்டி சுழட்டி எதிரிகளை அடித்து தோற்கடிக்கும் ஒரு கலை . ஆனால் இன்று சிலர் எதிரிக்கு ஒரு அடி கூட படாமலே தங்கள் தடிகளை சுழட்டி கொண்டிருப்பதை கவனித்து பாருங்கள்.  

I கொரிந்தியர்-9:26. இல் ''ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்''.என்ற இந்த வார்த்தையில் பவுல் சொல்ல வருவது உங்களுக்கு புரிகிறதா? நீங்கள் சிலம்பம் பண்ணினால்  உங்கள் எதிரிக்கு நெத்தியடியாக இருக்க வேண்டுமே தவிர காற்று விசிறி விடுவதாக இருக்க கூடாது . 
Continue Reading | கருத்துகள்

இலங்கை மண்ணின் சாபம் நீங்க ஒரு ஆலோசனை.












கடந்த காலங்களில் இலங்கை மண்ணில் இடம் பெற்ற படுகொலைகள் யாவரும் அறிந்ததே. ஆயிரக்கணக்கானோருடைய இரத்தம் இந்த இலங்கை மண்ணை நனைத்துள்ளது. பூமியில் மனிதனுடைய இரத்தம் சிந்தப்படுவது சாபத்தை கொண்டு வரும் என்பது வேதாகாமத்தின் போதனை. உதாரணமாக இந்த வசனத்தை பாருங்கள் 
Continue Reading | கருத்துகள்

சகோதரர் சாரியாஹ் அவர்களின் சாட்சி

Brother Chariah’s Testimony



நான் மலேசியாவில் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஆண் மகனாகப் பிறந்தேன். என் குடும்பத்தார் சமயத் துறையிலும் அரசியல் துறையிலும் மலேசியாவில் பிரபலம் வாய்ந்தவர்கள். இஸ்லாமிய நாட்டின் பிரபலமானவர்களாக இருந்ததால்இஸ்லாமிய மதம் மட்டுமே எங்களுக்கு முக்கியமானதாகும்எங்கள் வாழ்வின் முக்கிய நோக்கமாகவும் இருந்தது.

இஸ்லாமிய பாரம்ரியத்தில் நான் வளர்க்கப்பட்டதோடு மட்டுமல்லாமல்அரபி மொழி, குர்ஆன் கல்வி, சுத்திகரிக்கும் சடங்குகள் (cleansing rituals), தொழுகை, நோம்பு (உபவாசம்) போன்றவைகள் கற்பிக்கப்பட்டு வளர்க்கப்ப்டடேன்.
Continue Reading | கருத்துகள்

சகோதரர் ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி

The Testimony of Brother Sharafuddin


எனது சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.

என் பெயர் ஷரபுத்தீன். நான் தீபகற்ப மலேசியாவின் (Semenanjung Malaysia) மலாய் இனத்தைச் சார்ந்தவன். குழந்தை பருவத்திலிருந்து நான் தீவிர இஸ்லாமியக் கல்வியைப் பெற்று வந்தேன். உசுலுத்தீன் (Usuluddin), குர்ஆனியக் கல்வி போன்றவற்றைப் நான் கற்கவேண்டுமென்று என் பெற்றோர்கள் கண்கானிப்பாய் இருந்தார்கள்.

இது, நான் ஆன்மீக‌ மற்றும் சமய விவகாரங்களில் மிகவும் கவனமுடன் இருக்க உதவியது. நல்ல‌ பக்தி விநயத்திலும் மார்க்க எழுத்தாளர்களின் சமயக் கட்டுரைகளையும், பண்டைய இஸ்லாமிய மார்க்க அறிவு கட்டுரைகளை (fiqh and theology) வாசிப்பதிலும் நான் பூரண திருப்தியடைந்தேன். இவைகளில் என் அறிவை வளர்த்துக் கொண்டேன்.

Continue Reading | கருத்துகள் (1)

வாலித் அவர்களின் சாட்சி

Walid's Testimony

எனது பெயர் வாலித் (walid), நான் இஸ்ரேலில் உள்ள பெத்லகேம் எனும் நகரில் பிறந்தேன். நான் பிறந்த நாள் இஸ்லாமியர்களின் தீர்க்கதரிசியான முகமது (Al-Mauled Al-Nabawi) அவர்களின் பிறந்த‌ நாளாயிருந்தபடியால் அந்நாள் மிகவும் புனிதமான நாளாகும். இந்த நாளில் நான் பிறந்தபடியால் என் தந்தை அதிக‌ மகிழ்ச்சி அடைந்தார். அதன் காரணமாக எனக்கு அரபி மொழிப்படி வாலித் என பெயர் சூட்டினார். பிறப்பு என்ற பொருள்படும் அரபி வார்த்தை மௌலத் (Mauled – The Birth) என்ற வார்த்தைக்கு இணையாக இந்த பெயரை எனக்கு சூட்டினார். இஸ்லாமிய தீர்க்கதரிசியின் பிறந்த நாளை எப்போதும் நினைவு கூறுவதாக அப்பெயர் இருந்தது.

புனித நகரில் ஆங்கிலமும் இஸ்லாமிய கல்வியும் கற்பித்து வந்த எனது தந்தை ஒரு பாலஸ்தீனிய முஸ்லீமாவார். அமெரிக்கரான எனது தாயாரை 1956 ம் ஆண்டு உயர் கல்வி கற்க அமெரிக்கா சென்ற எனது தந்தை திருமணம் செய்துக்கொண்டார்.
Continue Reading | கருத்துகள்

ஆயிஷாவின் சாட்சி


நான் ஒரு இஸ்லாமியராய், இஸ்லாமிய‌ நாட்டிலே வளர்க்கப்பட்டதால் என்னுடைய மதம் எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. என்னுடைய இளநிலை  படிப்பை முடித்த பிற‌கு, மேற் கொண்டு பல்கலைகழகத்தில் படிக்க அமெரிக்கா வந்தேன். முதல் வருட மாணவர்கள், முதல் வருடத்தோடு தொடர்புடைய ஒரேவிதமான பாடத்திட்டங்களை தெரிந்துக்கொண்டனர். என்னுடன் பயிலும் அமெரிக்க மாணவர் ஒருவரோடு நட்புறவு கொண்டேன். நாங்கள் நலமான‌ நண்பர்களாய் இருந்தோம். செமஸ்டரின்  தொடக்கத்தில் வந்த‌ என்னுடைய பிறந்த நாள் வருவதை கண்டுபிடித்த‌ என் நண்பர், எனக்கு ஒரு சின்ன புதிய ஏற்பாட்டு வேதாகமத்தை பரிசாக கொடுத்தார். முதலில் சிறிது தயங்கினேன்/பின்வாங்கினேன், ஒரு வாரமாக அந்த புத்தகத்தை நான் தொடவில்லை. அந்த புத்தகத்தை தொட பயமாக இருந்தது. ஆனாலும் நான் ஒரு அசைக்ககூடாத முஸ்லிமாக இருந்ததால், இந்த புத்தகத்தை படிக்கலாம் என்ற எண்ணம் வந்தது.
Continue Reading | கருத்துகள்

உலகம் உண்டாவதற்கு முன்பே இருந்தவர்


(உமரின் கடிதம் )


1)இயேசு தேவாலயத்தைவிட பெரியவர்,

 2) யோனாவை விட பெரியவர், 
3) சாலொமோனை விட பெரியவர் மேலும்
4) தாம் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் 

என்று இயேசு கூறிய வசனங்களை மேற்கோள் காட்டினேன். நீண்ட கடிதத்தை நீ படித்தால், உனக்கு சோர்வு உண்டாகும் என்பதால் இயேசுவின் நான்கு உரிமை பாரா ட்டல்களை விளக்கி முடித்தேன். அதன் தொடர்ச்சியாக, இந்த கடிதத்தில், அதே சுவிசேஷங்களில் இன்னும் எந்தெந்த வகையில் இயேசு தம்முடைய தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை காண்போம்.
Continue Reading | கருத்துகள் (2)

யார் இந்த யெகோவாவின் சாட்சிகள்?

முதலில் இது எவ்வாறு ஆரம்பித்தது என்று பார்ப்பது அவசியம். இவர்கள் பொதுவாக வாட்ச் டவர் வேத, துண்டுப்பிரசுர நிறுவனம் (Watch Tower Bible and Tract Society) என்ற பெயரில் உலவுகிறார்கள். சார்ள்ஸ் டேஸ்ரசல் (Charles Taze Russell) என்ற மனிதனின் போதனைகளை யே இக்கூட்டம் சத்தியமாக பின்பற்றுகிறது. 1852 இல் பிறந்த ரசல் 1870 இல் தனது பதினெட்டாம் வயதில் ஒரு கூட்டத்தின் போதகராக அமைந்து சயனின் வாட்ச் டவர் (Zion’s Watch Tower) என்ற பத்திரிகையை ஆரம்பித்து அப்பத்திரிகை மூலம் தனது போதனைகளைப் பரப்பினார்.இப்பத்திரிகையில் வேதத்திற்கு தன்னுடைய சொந்தக் கருத்துக்களை அளித்து வந்தார் ரசல். 1916 இல் இறந்தரசலின் வாழ்க்கை ஒழுங்காக அமைந்திருக்கவில்லை.
Continue Reading | கருத்துகள் (6)

இந்து மதத்தில் கிறிஸ்தவம்?

இந்த கட்டுரையானது நான் இணையத்தில் கண்டெடுத்த கட்டுரையாகும். இதன் கருத்துகளை சரியானவையா என்று ஆராயும்படியாக என் தள வாசகர்களுக்கு இதை பதிவிடுகிறேன். வாசகர்களே நீங்கள் உங்கள் கருத்தை தெரிவியுங்கள். இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்து எதுவுமில்லை.


கடந்த வருடத்தில் இந்தியாவின் 50 ஆவது வருட ஆண்டு விழாவினைச் சிறப்பிக்குமுகமாக திரு. தெய்வநாயகம், டாக்டர் டீ. தேவகலாவை சக ஆசிரியராகக் கொண்டு “இந்து சமயத்தில் கிறிஸ்தவம்” என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். 266 பக்கங்கள் கொண்ட இந்நூல், திரு. தெய்வநாயகம் ஏற்கனவே “திருக்குறள், சைவசித்தாந்தம், விவிலியம் – ஒப்பாய்வு” என்ற தலைப்பில் கொடுத்துள்ள ஆய்வுக்கட்டுரையின் ஆங்கில வடிவமாகும். இந்நூலில் அவர் எதையும் புதிதாகத் தெரிவிக்கவில்லை. இதற்கு பதிலளித்து திருமறையா? திராவிட சமயமா? என்ற சிறு நூலை நாம் வெளியிட்டதை வாசகர்கள் அறிவர். அதனைப் புதுப்பித்து மறுபடியும் வெளியிட எண்ணியுள்ளதையும் வாசகர்கள் அறிவர். “இந்து சமயத்தில் கிறிஸ்தவம்” எனும் இப்புதிய நூலை விமர்சித்து திருமறைத் தீப ஆசிரியர் ஆங்கிலத்தில் ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதன் சுருக்கத்தை இங்கே வாசகர்களுக்கு தமிழில் தருகிறோம்.
Continue Reading | கருத்துகள் (7)

கிறிஸ்துவும் விவேகானந்தரும்



இந்து மத சீர்திருத்தவாதிகளில் முண்ணணி வகிப்பவர் கொல்கத்தாவில் பிறந்த நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta -January 12, 1863 – July 4, 1902). இவர் பின்பு சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) என பிரபலமாக அறியப்பட்டார். இந்தியாவின் பெருமை, யோகா மற்றும் வேதாந்தங்களை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும்.


இவர் இவ்வாறாக சொல்கிறார்.


"கீழை நாட்டைச் சார்ந்தவனான நான், நாசரேத்து நல்கிய இயேசு நாதரை இறைஞ்சுவதாயிருந்தால்,எனக்கு ஒரே வழிதான் உண்டு. அதுயாதெனில், அவரைக் கடவுளாகத் தவிர வேறு முறையில் என்னால் வழிபட முடியாதென்பதே"
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 2; பக்கம் 453)
Continue Reading | கருத்துகள்

சங்கர்தயாள் சர்மாவும் வேதமும்...


 



"பரிசுத்த வேதம் நம்மெல்லாருக்கும் தேவையான செய்தியைக் கொண்டுள்ளதென்பதை நினைவூட்டட்டும்.

பரிசுத்த வேத புத்தகத்தை ஒருவன் படித்து புரிந்து கொண்டால்,தடுப்புச் சுவர்கள் பல தரை மட்டமாகும்."

பகவத் கீதை மட்டும் தொலைந்து போனால் நான் இழந்து போனது ஒன்றுமில்லை.மலைப்பிரசங்கம் இருக்கிறதே"என்றார் காந்தியடிகள்.

வில்லியம் கேரி பரிசுத்த வேதாகமத்தை படித்து அதன் படி நடந்தார்."
 

Continue Reading | கருத்துகள் (1)

பிரேதகுழியிலிருந்து உருவான தேசமும் அதை நிறைவேற்றிய தீர்க்கத்தரிசனமும்:




கிபி 70 -ல் யூதர்கள் உலகெங்கும் சிதறடிக்கப்பட்டு போனார்கள். அப்புறமாய் 2000 ஆண்டுகள் தாய்நாடென்று ஒன்றின்றி சிதறி கிடந்தார்கள். ஆனால் எங்குபோயினும் அநேக உபத்திரவங்கள் மத்தியிலும் தங்கள் தனித்துவத்தை பாதுகாத்து வந்திருக்கின்றனர். அவர்களுக்கு 1940 முதல் 1944 வரை மிக மோசமான காலம். 6 மில்லியன் யூதர்கள் ஹிட்லரால் கூண்டோடு கொல்லப்பட்டனர். யூதர்கள் தங்களை யூதர்கள் என சொல்ல பயந்த காலம் அது. "கடைசி தீர்வு" என ஹிட்லர் யூதர்களை கொன்றுகுவித்தான். அந்நேரம்
Continue Reading | கருத்துகள்

யூதர்களின் வரலாறும், புறஜாதிகளுக்கான சுவிஷேசத்தின் ஆரம்பமும்:


முதல் யூதன் ஆபிரகாம். கிறிஸ்துவுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், தற்கால ஈராக்கில் உள்ள 'ஊர்' என்ற இடத்தில் பிறந்தவன். தேவன் ஆபிரகாமை வேறொரு நாட்டிற்குப் போகச் சொன்னார்.(ஆதியாகமம்: 12:1). அந்த நாட்டை ஆபிரகாமின் சந்ததிக்குச்சொந்தமாகக் கொடுக்க வாக்களித்தார். அதுதான் இஸ்ரேல் நாடு. தேவன் ஆபிரகாமுக்கு, 'நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்' என்று ஒரு வாக்குக் கொடுத்தார். (ஆதியாகமம்: 12:2). அதன் மூலம் உலகம் அனைத்தையும் ஆசீர்வதிக்க ப்போவதாகவும் சொன்னார். அந்த நாடுதான் யூத நாடு.
Continue Reading | கருத்துகள்

2012-டிசம்பரில் உலகம் அழியுமா?





வரும் 2012-ஆம் ஆண்டில் அதுவும் டிசம்பர் மாதத்தில் உலகம் அழிந்துபோக அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லி பல்வேறு செய்திகள் உலகை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. மாயன் கால ண்டர், எகிப்து பிரமிடின் அமைப்பு, பூமியின் சுழலில் ஏற்படப்போகும் மாற்றம், எதிர்பார்க்கப்படும் படு பயங்கர சூரியப் புயல் இப்படி பல காரணங்களை அட்டவணை படுத்திக் கொண்டே போயிரு க்கிறார்கள்.  இன்றைய நிலவரப்படி இது போன்ற டூம்ஸ்டே கதைகளுக்கு மக்களிடையே அதிக கிராக்கி உண்டு. இத்தகைய கதைகள் சீக்கிரமாக சூடுபிடித்து ஜனங்களிடையே பிரபலமாகின்றன. TEOTWAWKI என புதிதாக ஒரு சொல்லையே உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் பார்த் துக்கொள்ளுங்கள்.
Continue Reading | கருத்துகள்

மரியாளை வணங்கச்சொல்லி வேதம் சொல்கிறதா ?





முன்னோட்டமாக:
  கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவு படத்தொடங்கினது. அப்போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். இதை உதாரணமாகக் காட்டி: பாருங்கள் அங்கே அவர்களுக்கு தேவையான திராட்சரசத்தை மரியாள்தான் இயேசுவிடமிருந்து வாங்கிக் கொடுத்தாள். எனவே நம்முடைய தேவைக்கு தாயிடம் கேட்டாள், மறுக்காமல் கிடைக்கும் என்று ரோமன் கத்தோலிக்கர்கள் சொல்கின்றார்கள். இதுதவறானபுரிந்துகொள்ளுதல்.

நான் கொடுக்கும் 10 காரணங்களை படியுங்கள்:
Continue Reading | கருத்துகள் (30)

வெயிலை வெறுத்தவன் வாழ்க்கை (உபத்திரவ குகை)

 


ஒரு தோட்டக்காரனிடம் இரண்டு அழகான புஷ்டியான பப்பாளி மரக்கன்றுகள் இருந்தன. அவைகளை தன் தோட்டத்தில் நடப்போவதாக கூறினான் அந்த தோட்டக்காரன்

அந்த இரண்டு பப்பாளி கன்றுகளில் ஒன்று அதை விரும்பவில்லை. ஐயோ அந்த தோட்டத்திலா நான் நிற்க வேண்டும்? அழுக்கான அந்த சேற்று நிலம்! அங்கு நிற்கும் அழகற்ற மரங்கள்!... இவற்றை நினைக்கும் போது அந்த பப்பாளிக் கன்றுக்கு குமட்டிக்கொண்டு வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நடு வெயிலில் காலகாலம் வாழ வேண்டுமே  என்பதை நினைத்து வேதனைப்பட்டது. எனவே தோட்டக்காரரிடம் கெஞ்சியது,  ''ஐயா என்னால் அந்த வெயிலையும், அந்த உபத்திரவம் நிறைந்த தோட்டத்து சூழலையும் தாங்க முடியாது. தயவு செய்து என்னை வீட்டுக்குள் ஓர் தொட்டியில் நட்டு விடுங்கள்'' என்று அடம் பிடித்தது.

Continue Reading | கருத்துகள்

திரித்துவத்தில் பரிசுத்த ஆவியானவர்



உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும் (சங்.51:11).

சகல ஜாதியாரையும் சீஷராக்கும்படி இயேசு கட்டளையிட்டபோது, புது விசுவாசிகளைப் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானப்படுத்தவேண்டும் என்றும் கூறினார்.
Continue Reading | கருத்துகள்

பரிசுத்த ஆவியானவர் என்பவர் யார்?



பரிசுத்த ஆவியானவர் யார் என்பதைக் குறித்து பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. பரிசுத்த ஆவியானவர் ஏதோ ஒரு மாயமான சக்தி என்று சிலர் நினைக்கின்றனர். வேறு சிலரோ பரிசுத்த ஆவி கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்காக தேவனால் அளிக் கப்படும் ஆள்தத்துவம் இல்லாத சக்தி என்று நினைக்கின்றனர்.

பரிசுத்த ஆவி யானவரைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது? சுருக்கமாகக் கூறினால், பரிசுத்த ஆவியானவர் தெய்வீகத் தன்மை உடையவர்; அவருடைய சிந்தனை, உணர்வுகள் மற்றும் சித்தம் அனைத்தும் பிதாவையும், குமாரனையும் போன்றதே என்றும் வேதாகமம் கூறுகிறது.


பரிசுத்த ஆவிக்கு விரோதமானது தேவனுக்கு விரோதமானது என்பது வேதாகமத்தின் பல இடங்களில் தெளிவாகக் காணப் படுகிறது உதாரணமாக,


அப்போஸ்தலர் 5: 3-4. 
இந்த வசனங்களில் பேதுரு அனனியாவிடம் அவன் ஏன் பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய் கூறினான் என்று, அவன் மனிதனிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய் சொன்னான் என்றும் கண்டிக்கிறான். இது பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்கூறுவது என்பது தேவனிடத்தில் பொய் கூறுவதாகும் என்பதைக் காட்டுகின்றது.

மேலும், தேவனுக்குரிய குணாதியங்களை உடையவராயிருப்பதாலும் பரிசுத்த ஆவியானவரின் சிந்தையும் தேவனின் சிந்தையே என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

உதாரணமாக, அவர் சர்வவியாபி என்பதை சங்கீதம் 139: 7-8 ல் அறியலாம்.உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.”

மேலும்1 கொரிந்தியர் 2: 10-11இல் பரிசுத்த ஆவியானவர் சர்வத்தையும் அறிந்தவர் என்பதையும் நாம் அறியலாம்,

நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்துருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷருக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.” 


மேலும், பரிசுத்த ஆவியானவர் சிந்தை, உணர்வுகள் மற்றும் சித்தம் உடையவராயிருப்பதால் அவர் தெய்வீகத்தன்மை உடையவர் என்று நாம் அறியலாம்.


பரிசுத்த ஆவியானவர் சிந்திக்கிறவர் மற்றும் அறிகிறவர் (1 கொரிந்தியர் 2: 10).

பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தமுடியும் (எபேசியர் 4:30).

ஆவியானவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார் (ரோமர் 8:26-27).

அவர் தமது சித்தத்தின் படி தீர்மானிக்கிறார் (1 கொரிந்தியர் 12:7-11)

 பரிசுத்த ஆவியானவர் தேவன், திரித்துவத்தில் மூன்றாம் நபர். இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்ததுபோல் தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் உண்மையாகவே தேற்றரவாளனாகவும், போதிக்கிறவராகவும் செயல்படமுடியும். (யோவான் 14: 16,26; 15:26)

மனிதன், சரீரமா, ஆவியா, ஆத்மாவா. மனிதனை சரீரம் என்று சொல்லலாமா ? ஆவிதான் என்று சொல்லலாமா? அல்லது ஆத்துமா என்று சொல்லலாமா? இப்படி மனிதனை தனத்தனியாக பிரித்து காண்பித்து விட முடியுமா? முடியும் என்றால், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, இதில் யார் கடவுள் என்று பிரித்து கூறுவது எளிது. கேள்வி கேட்பவர்களே தயாரா?

ஆவி, ஆத்மா, சரீரம் என்னும் முக்கூட்டு கலவைதான் மனிதன். சரீரம் இல்லாவிட்டால் ஆவியோ, ஆத்மாவோ பூமியில் இயங்க முடியாது. அதே போல் ஆவியோ, ஆத்மாவோ இல்லாவிட்டால் சரீரம் பூமியில் இருந்து பயனில்லை.


மனிதன் தேவ சாயலாக படைக்கப்பட்டிருக்கிறான். என்று வேதாகமம் கூறுகிறது. மனிதன் என்ற மைய புள்ளி ஆத்மாவாக இருந்தாலும், பூமியில் வாழ மண்ணான (மண்ணிலிருந்து) சரீரம் (தேவனால்) உண்டாக்கப்பட்டு, சரீரம் இயங்க தேவன் தன் ஜீவ சுவாசத்தை (ஆவியை) கொடுத்தார். மனிதன் ஜீவ ஆத்துமாவானான் அதாவது பூமியில் ஆவி, ஆத்மா, சரீரம் என்னும் முக்கூட்டு கலவையுள்ள மனிதனானன்
தேவ சாயலாக படைக்கப்பட்ட மனிதன் முக்கூட்டு கலவை என்றால், தேவனும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, என்னும் முக்கூட்டு கலவையாக செயல்படுகிறார்.


தேற்றரவாளன் என்ன செய்வார்?



Joh 16:7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.


Joh 16:8-11 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.


அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,



நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,

இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

உலகம் உண்டாவதற்கு முன்னரே தேவ ஆவியானவர் இருந்தார்

Gen 1:1-2 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்.

------------------posted by Teny


Continue Reading | கருத்துகள் (1)

கேள்வியும் பதிலும்

விஞ்ஞானம்

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

add

google.com, pub-5997097430959388, DIRECT, f08c47fec0942fa0

forum

Flag Counter
சிலுவை dot கொம். Blogger இயக்குவது.