சரி, கிறிஸ்மஸ் தாத்தா தயார்! அவருக்கு வாகனம், வாகனம் யினிதே விரைந்திட ரெய்ண்டீர் எனப்படும் நீண்ட கிளைகளையுடைய கொம்புகள் கொண்ட மான்கள் தயாரா?!. அவ்வளவுதான், கிறிஸ்துமஸ் தாத்தா கிளம்பி விடுவார்.
கிறிஸ்மஸ் தாத்தா என்பவர் யார்? அவர் எப்படி உருவானார்?
சரி, கிறிஸ்மஸ் தாத்தா தயார்! அவருக்கு வாகனம், வாகனம் யினிதே விரைந்திட ரெய்ண்டீர் எனப்படும் நீண்ட கிளைகளையுடைய கொம்புகள் கொண்ட மான்கள் தயாரா?!. அவ்வளவுதான், கிறிஸ்துமஸ் தாத்தா கிளம்பி விடுவார்.
யுப்ரட்டீஸ் நதி வற்றியது; வேதத்தின் திட்டமான முடிவுகால முன்னுரைப்பு நிறைவேறியது
சுமார் 1700 மைல் அல்லது 2700 கிலோ மீட்டர் தூரம் வரை வற்றாத ஜீவ நதியாக பாய்ந்து மூன்று தேசங்களை செழிப்படைய செய்து வரும் மிகவும் பழமையான நதிதான் இந்த யூப்ரட்டீஸ் நதி. இந்த நதி துருக்கியில் ஆரம்பித்து சிரியா தேசத்திற்க்கும் ஈராக் தேசத்திற்கும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. அவர்களின் விவசாயம், குடிநீர், மறுசுத்திகரிப்பு, மின்சார உற்பத்தி, மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்கு இந்நதியே வற்றாத ஜீவநதியாக விளங்கி வருகிறது, இதற்கு முந்தைய உலக வல்லரசாக விளங்கிய மகா பாபிலோனின் செழிப்புக்கும் இந்நதி முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. அந்த பாபிலோன் இன்று இல்லை, அது முற்றிலும் வேதத்தின் முன்னுரைப்பின் படியே அழிக்கப்பட்டது, ஆனால் பாபிலோன் இருந்த இடத்தில் இப்பொழுது ஈராக் தேசம் உள்ள்து, இந்த ஈராக் தேசத்திற்கும் யூப்ரட்டீஸ் நதியே முக்கிய பங்காற்றி வருகிறது.
வாலிபனே உன் சிலுவை எங்கே?
‘நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய் தீங்கனுபவி.’
2தீமோத்தேயு 2.3
மனதுக்கு இதமானதும், மகிழ்ச்சி தரக்கூடியதுமான ஏராளமான வாக்குத்தத்தங்கள், ஆலோசனைகள், ஆறுதல் மொழிகள் குவிந்து கிடக்கும் பரிசுத்த வேதாகமத்திலிருந்து குறிப்பாக இந்த வார்த்தையை சுட்டிக்காட்டும் போது சற்றுக் கடினமாகவே இருக்கும். கிறிஸ்தவ வாழ்வு என்பது சாதாரண மகிழ்ச்சி அல்ல; அது நித்திய மகிழ்ச்சி.
கிறிஸ்தவனே கவனி மாட்டிக் கொண்டாயோ Facebook ல்?
இன்று அதிகமாக எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கம் “ஃபேஸ்புக்” (Facebook) ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. பூமியில் வயது வரம்பின்றி அநேகர் இதினால் கவரப்பட்டுள்ளனர்.
“காம்ஸ்கோர்-”ன் ஆய்வின்படி, தற்போது இந்தியர்கள் தேசங்களின் வரிசையிலான ஃபேஸ்புக் புள்ளி விபரத்தின் படி 4.5 கோடி நபர்கள் உபயோகிப்பதால் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளனர்.
தாழ்த்தப்பட்ட ஜாதியானான யூதன் கூட்டி சேர்க்கப்படுதல் - நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்-03
நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்
தாழ்த்தப்பட்ட ஜாதியானான யூதன் கூட்டி சேர்க்கப்படுதல்
யூதர்கள் கி.பி. 70ம் ஆண்டிலும், கி.பி. 135ம் ஆண்டிலும் ரோம அரசாங்கத்தால் பலஸ்தீனா நாட்டிலிருந்து விரட்டப்பட்டு உலகத்தின் பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்து குடியேறினர். அவர்கள் போய்ச் சேர்ந்த நாடுகளிலும் நிம்மதியாகக் குடியிருக்க முடியாதபடி ஆண்டவர்
இலவச தமிழ் வேதாகம மென்பொருள் TAMIL BIBLE SOFTWARE FREE DOWNLOAD
ரோமன் கத்தோலிக்கரல்லாதவர்கள் பயன்படுத்தும் வேதமாகம மென் பொருள் (பழைய மொழி பெயர்ப்பு)
இவ் வேதாகம மென்பொருளின் உள்ளடக்கம்..
- தமிழ் வேதாகமம்
- ஆங்கில வேதாகமம்
- தமிழ்,ஆங்கில ஒப்பீட்டு வேதாகமம்
- தமிழில் வார்த்தை தேடுதல்
- ஆங்கிலத்தில் வார்த்தை தேடுதல்
- tamil Keyboard layout
- விளக்கக் கட்டுரைகள்
on line இல் இதே வகையான வேதாகமத்தை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்
http://www.tamil-bible.com/
இவ்வேதாகமத்தை டவுன் லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
http://tamilchristian.com/index.php/component/jdownloads/summary/3-downloads/4-tamil-bible-for-windows
இந்த மென்பொாருளை நிறுவி பயன்படுத்துவதற்கு அதற்குரிய font ஐ டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
தமிழ் வேதாகம எழுத்துருவை (font) டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்க
http://tamilchristian.com/index.php/component/jdownloads/summary/3-downloads/3-tamil-bible-font
இவ்வேதாகமத்தை டவுன் லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
http://tamilchristian.com/index.php/component/jdownloads/summary/3-downloads/4-tamil-bible-for-windows
இந்த மென்பொாருளை நிறுவி பயன்படுத்துவதற்கு அதற்குரிய font ஐ டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
தமிழ் வேதாகம எழுத்துருவை (font) டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்க
http://tamilchristian.com/index.php/component/jdownloads/summary/3-downloads/3-tamil-bible-font
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரோமன் கத்தோலிக்கர்கள் பயன்படுத்தும் வேதமாகம மென் பொருளை (பொது மொழி பெயர்ப்பு) டவுன் லோட் செய்ய இந்த பட்டனை கிளிக் செய்யவும்.
- தமிழ் கத்தோலிக்க மொழிபெயர்ப்பு
- தமிழ் புதிய பொது மொழிபெயர்ப்பு
- New American Bible ( NAB )
- New Revised Stanard Version ( NRSV )
- Compare between four different Bible
- தமிழில் வார்த்தை தேடுதல்
- ஆங்கிலத்தில் வார்த்தை தேடுதல்
- tamil Keyboard layout
on line இல் இதே வகையான வேதாகமத்தை வாசிக்க… click this link
-----------------------------------------------------------------------------------------------------------------------
வேதாகமம் கூறும் நட்சத்திரக் கூட்டம் - ( வேதாகம அறிவியல்-10 )
“அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பத்தை நீ இணைக்கக் கூடுமோ?” (யோபு 38.31)
என்று வேதாகமம் கேட்கிறது. ஈர்ப்பு சக்தியின் சட்டத்தினால்தான் எல்லா கிரகங்களும் ஒன்றுக் கொன்று இழுத்து தாங்கிய நிலையில் உள்ளது. அவைகளை இணைக்கவும் பிரிக்கவும் முடியாது. என்பதை வான சாஸ்திரிகள் நமக்கு கற்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பதாகவே வேதாகமம் நமக்கு கூறி விட்டது.
மிருகசீரிஷத்தின் கட்டுக்களை அவிழ்ப்பாயோ? (ஆமோஸ் 5.8, யோபு 38.31)
மிருகசீரிஷம் எனும் நட்சத்திர கூட்டத்தின் ஒழுங்கு முறையையும், அவைகள் ஒன்றாக இணைக்கப் பட்டடிருப்பதைப் போல இருப்பதையும் வான சாஸ்திரம் கண்டு கொண்டுள்ளது. அநேக நட்சத்திர கூட்டங்களிலுள்ள நட்சத்திரங்கள் தனித் தனியே பிரயாணம் செய்து கொண்டிருக்கிறன. ஆனாலும் கார்த்திகை நட்சத்திர கூட்டமான, ஆறுமீன் நட்டசத்திர கூட்டமும் மிருகசீரிஷம் என்ற நட்சத்திர கூட்டமும் இணைந்து செல்லும் நட்சத்திர கூட்டங்களாகும்.
துருவ சக்கர நட்சத்திரத்தையும் அதை சேர்ந்த நட்சத் திரங்களையும் வழி
நடத்துவாயோ? (யோபு 38.32)
சுவாதி நட்சத்திரமான துருவ சக்கர நட்சத்திரம் ஓடும் நட்சத்திரமென்றும், அது வினாடிக்கு 84 மைல் வேகத்தில் பிரயாணம் செய்கிறதென்றும் விஞ்ஞானம் கண்டு பிடித்திருக்கிறது. இடி பாடுகள் இல்லாமல் இவைகள் செய்யும் பிரயாணத்தின் மகத்துவத்தை செய்தது யார்?
உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப் பண்ணி, அவைகளை யெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே.. ஏசா 40.26)
எருசலேம் நகரம் உழப்படும் - நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் 02
எருசலேம் நகரத்தைப் பற்றி பரிசுத்த வேதாகமத்தில் முதன்முதலில் ஆதியாகமம்-14;18 இல் “உன்னதமான தேவனுடைய ஆசாரியனும், சாலேமின் ராஜாவுமாயிருந்த மெல்கிசெதேக் ஆபிரகாமை ஆசீர்வதித்தான்” என்று பார்க்கிறோம். இது எபூசியரின் நகரமாயிருந்தபடியால் அந் நகரின் பெயர் காலக்கிரமத்தில் எருசலேம் என்று மருவி வந்தது.
இஸ்ரேலின் எண்ணெய் வளம் - நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் part-01
இஸ்ரேலின் எண்ணெய் இயற்கை வளத்தைப் பற்றி மோசேயின் தீர்க்கத்தரிசனம்.
வேதாகமத்திலுள்ள பல கோத்திரப் பிதக்கள் தாங்கள் மரிக்கும் முன் தங்கள் சந்ததியாரை ஆசீர்வதித்துப் போனதாக அறிந்திருக்கிறோம்.
பரிசுத்த வேதாகமத்தில் ஆபிரகாம் தன் பிள்ளைகளான ஈசாக்குக்கும், இஸ்மவேலுக்கும் வெவ்வேறு ஆசீர்வாதங்கள் கொடுத்ததாய் பார்க்கிறோம்.
அழுகையின் சுவர்
கிமு-1012ம் ஆண்டளவில் சாலமோன் அரசன் மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஓர்னானின் களம் என்னுமிடத்தில் கர்த்தருக்கென்று தேவாலயத்தை கட்டினான்.
இத்தேவாலயம் கிமு-586 இல் நேபுகாத்நேச்சர் என்னும் பாபிலோனிய மன்னனால் இடித்துப் போடப்பட்டது.மீண்டும் இத்தேவாலயம் கிமு-536 இல் செருபாபேலின் தலைமையில் கட்டத்துவங்கப்பட்டு கிமு-519 இல் கட்டி முடிக்கப்பட்டது.
அவ் இரண்டாம் தேவாலயம் ஏரோது மன்னனால் கி.பி-19 அல்லது கி.பி-20ல் அழகு படுத்தப்பட துவக்கப்பட்டு 45 வருடங்களில் முற்றங்கள், சுற்றுக்கூடங்கள், அறைகள் முதலியன கட்டப்பட்டன. இயேசுக் கிறிஸ்துவின் காலத்திலிருந்த தேவாலயம் அதுதான்.
என்றாலும் இயேசுக் கிறிஸ்துவின் முன்னறிவிப்பின்படி (மத். 24.2) அந்த இரண்டாம் தேவாலயம் கி.பி-135ல் ரோமரால் இடிக்கப்பட்டது. ஆகிலும் சுற்றுச் சுவரில் (Retaining Wall) ஒரு சிறு பகுதி இடிக்கப்படாமல் தப்பியது.
இச்சுவர் யூதரால் ஒரு புனித சின்னமாக கருதப்பட்டு, யூதர்கள் அச்சுவர் அருகே போய் அழுது ஜெபம் செய்வர். தங்கள் ஜெபவிண்ணப்பங்களையும் தாள்களில் எழுதி அச்சுவரிலுள்ள சந்துகளில் சொருகி வைத்துவிடுவர்.
தங்களுடைய தேவாலயம் இடிக்கப்பட்டு இப்பொழுது ஆராதனை செய்யவும், பலி செலுத்த முடியாமலிருப்பதையும் நினைத்து ஜனங்கள் இந்த மதிலில் தங்கள் தலைகளை முட்டி அழுது ஜெபம் செய்கிற படியால் இம் மதிலுக்கு அழுகையின் மதில் (Wailing Wall) என்று பெயர் வந்தது.
1948 வருடம் இஸ்ரேல் சுதந்திரம் அடைந்தபொழுது இப்பகுதி யோர்தான் நாட்டிற்கு போய்விட்டது. ஆகையால் யூதர் இப்பகுதிக்கு போகாதபடி தடுக்கப்பட்டனர்.
மீண்டும் 1967 ஜீன் மாதம் 6 நாள் யுத்தத்தில் முழு எருசலேமும் யூதர் கைக்கு வந்தது. அது முதல் யூதர் அங்கு போய் சுதந்திரமாக ஜெபம் செய்கின்றனர்.
அழுகையின சுவரும், பிற்காலத்தில் கட்கப்பட்ட மதில்களும்,வாசல்களும் |
மேலே இருக்கும் படத்தில் மனிதர்கள் நின்று ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கும் சுவர்தான் ஏரோது ராஜா கட்டிய ஆலயத்தில் இடிக்கப்படாமல் மீந்திருக்கும் வெளிப்புற சுவர் பகுதி.
முன்னால் தெரியும் மதிலும் அரைவட்டமாய் காணப்படும் வாசலும் பிற்காலத்தில் கட்டப்பட்டவை
ஜெபம் பண்ணுகிற ஆட்களின் தலைக்கு மேல் வளர்ந்து காணப்படுவது சுவரில் முளைத்து சுத்திகரிப்புக்கு உபயோகப்படுத்தும் ஈசோப்புச் செடி (1இராஜாக்கள் 4.33) (சங்கீதம் 51.7) (Source: Prophetic Roundup- july-sept. 88)
இந்த அழுகையின் மதில் ஏரோது மன்னன் புதுப்பித்து கட்டிய தேவாலயத்தின் மதில்கள் பலமாயிருப்பதற்கு கட்டப்பட்ட ஒட்டுச் சுவரின் (Retaining Wall) ஒரு பாகமாகும். இதில் சில கற்கள் 14மீட்டர் நீளம்(453/4அடி), 3மீட்டர் உயரம்(93/4அடி), 2மீட்டர் அகலமுள்ளவைகளும்(61/2அடி), 300டன் நிறையுள்ளவைகளாயும் இருக்கின்றன.
அக்காலத்தில் இவ்வளவு பெரிய கனமான பாறைகளை எப்படி கொண்டு வந்து கட்டினார்கள் என்பதை கணிக்க முடியவில்லை என்று தற்கால கட்டக்கலை நிபுணர்கள் கருதுகின்றனர்.
கீழே இக்கட்டுரை சம்பந்தமான படங்கள் சிலவற்றை தருகிறேன்.
தொகுப்பு Robert Dinesh
(source இஸ்ரவேல் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்) (Source: News from lsrael, June 1988)
வில்லியம் டின்டேல் William tyndale
இங்கிலாந்தில் சபை சீர்திருத்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது வேதத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பே. ஆங்கிலத்தில் வேதம் மொழி பெயர்க்கப்பட்டு அதிவேகமாக மக்களுடைய கரங்களை எட்டியதும் அவர்களுடைய இருண்டிருந்த ஆத்மீகக் கண்கள் திறக்கத் தொடங்கின. ஆங்கிலத்தில் வேதத்தை மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பித்து வைத்தவர் வில்லியம் டின்டேல். ஏழு மொழிகளைப் பேசும் வல்லமை கொண்டிருந்த டின்டேல் எபிரேய, கிரேக்க மொழிகளில் அதிக பாண்டித்தியம் உள்ளவராக இப்பணிக்குத் தகுந்தவராக இருந்தார்.
அன்பே என்னை மன்னிப்பாயா?
ஒய்யார வானம்,
வட்ட நிலா,
ஓடும் நதி,
ஓரமாய் ஒரு மொட்டைப்பனை,
உச்சியில் ஒரு ஒற்றைக் குருவி
மனதில் எழுகின்றன கற்பனைக் குவியல்
நதியின்
சலசல இரைச்சல் அதற்கு பிள்ளைகளின் அழுகுரலாய் கேட்கிறது.
நிலாவின் வெண்மை முகத்தில் மனைவியின் பாசத்தைக்
காண்கிறது அந்தக் குருவி.
எங்கிருந்தோ வரும் தாமரை வாசனை மனைவியின்
அணைப்பில் உண்டாகும் சுகந்தம் போல இருந்தது அந்தக் குருவிக்கு.
தனிமையை உணர உணர “ஜில்” என்ற குளிருடன் கண்ணீர்
கன்னத்தை நனைக்கிறது. நிலாவின் ஒளியும் நெருப்பாய் கொதிக்கிறது.
குஞ்சுகளையும் மனைவியையும் பிரிந்த மூன்று
நாட்கள் மூன்று யுகங்கள் போல இருந்தது அந்தக் குருவிக்கு.
இத்தனைக்கும் மனைவியின் அந்த ஒரேயொரு வார்த்தையே
காரணம்.
இத்தனை வருடம் அவளை அன்பாக கவனித்தவன் நான்.
அவள் கண்களில் கண்ணீர் கசியாமல் காத்தவன் நான்.
என்னை சந்தேகப்பட்டு அவள் அந்த வார்த்தையை
சொல்லியிருக்கவே கூடாது. என் அன்பை புரிந்து கொள்ளாத அவளோடு இனிமேல் வாழ்ந்தென்ன பிரயோஜனம்.
என்றெல்லாம் நினைத்து வீட்டை விட்டு வந்து
விட்டது அக்குருவி
தனிமையின் கொடுமை ஒரு புறம் “மனைவி என்னை
எங்கெல்லாம் தேடுகிறாளோ” “குஞ்சுகள் என்ன பாடுபடுகின்றனவோ” என்ற எண்ணங்களின் கொலைவெறி
மறுபுறம்.
இரண்டையும் முறித்துக் கொண்டு வருகின்றது
“இல்லை இல்லை என்னில் தவறில்லை அவள்தான் குற்றம் செய்தாள்” என்ற சுயகௌரவம்.
எண்ணங்களின் புயல் ஓய மீண்டும் அமைதி நிலைக்கு
வருகிறது குருவியின் மனம்.
எங்கோ ஒரு மூங்கில் காட்டில். மூங்கில்களில்
வண்டுகள் போட்ட துளைகளினூடே செல்லும் தென்றல் காற்றால் உண்டாகும் இதமான ஓசையினூடாக
காதில் பேசிய இறைவனின் குரலைக் கேட்டது அக்குருவி.
திடீரென ஏதோ ஒரு முடிவை எடுத்ததாய் பறவை
சிறகுகளை விரித்து பறக்கத் தொடங்கியது. நேராக கூடு சென்றது.
கண்ணீர் மல்க பிள்ளைகளை அணைத்தபடி அழுது
கொண்டிருந்த மனைவியை கட்டி அணைத்துக் கொண்டது.
ஏதோ பேச வாய் திறக்கும் முன்னே மனைவியின்
வாய் முந்திக் கொண்டது. அன்பே என்னை மன்னித்துக்கொள்
தொடர்ந்தது குருவி.
நான் உன்னை மன்னிக்கிறேன். என்னையும் நீ
மன்னித்துக் கொள்
அணைப்பு வரவர இறுக்கமாகிக் கொண்டே போனது.
இப்போது இரண்டு குருவிகளின் கண்களிலும் உண்டான
கண்ணீருக்கு மகிழ்ச்சிதான் காரணமாக இருந்தது.
இதை வாசிக்கும் அன்பு உள்ளங்களே மூங்கில்களில்
வண்டுகளிட்ட துளைகளினூடே செல்லும் காற்றால் உண்டாகும் இதமான ஓசையூடாக இறைவன் அக்குருவியின்
காதில் என்ன பேசியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்.
உன் மனைவியை நீ ஏன் மன்னிக்ககூடது?
அன்பானவர்களே இயேசு உங்களைப் பார்த்து கேடகிறார். எனக்கு அநியாயம் செய்தவர்களை நான் மன்னித்தேனே. உனக்கு அநியாயம் செய்தவர்களை
நீ ஏன் மன்னிக்க கூடது?
சிந்திப்பாயாக.
-----------------------------------------------------by - robert dinesh-----------------------------------------------------
நட்சத்திரங்களை எண்ண முடியுமா? - ( வேதாகம அறிவியல்-09 )
வானத்தின் நட்சத்திரங்களை எண்ணமுடியுமென்று எண்ணிய அக்கால விஞ்ஞானிகள் அவற்றை ஆளுக்கொரு எண்ணிக்கையாக கூறிவந்தார்கள்.
கி.பி. 1608 ஆம் ஆண்டுக்கு பின் சில ஆயிரம் நட்சத் திரங்களை தொலைநோக்கிகளின் வழியே விஞ்ஞானிகள் அறிந்துகொள்ள ஆரம்பித்தனா்
சுமார் 100 மில்லியன் நட்சத்திரங்கள் தான் வானத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் 1930 வரை நம்பினர். பிறகு 40 Sextillion நட்சத்திரங்கள் இருப்பதாக கணக்கிட்டனர் (40க்கு பக்கத்தில் 22 பூஜ்ஜியங்கள் போட வேண்டும்.)
ஆனால் அதற்கு முன்னால் எழுதப்பட்ட வேத வார்த்தையானது நட்சத்திரங்களை எண்ண முடியாது என்றது.
எது உண்மை? இன்றைய அறிவியல் என்ன கூறுகிறது?
நட்சத்திரங்களை கணக்கிடவே முடியாது என்று விஞ்ஞானிகள் முடிவாக அறிவித்து விட்டனர்.
வேத வார்த்தைகள் நிரூபிக்கப்பட்டாகி விட்டது.
தொலை நோக்கி இல்லாமலேயே, நட்சத்திரங்களைப் பற்றி வேத எழுத்தாளர்கள் எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? சிந்தியுங்கள்
ஆனால்“அவா் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி அவை களுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். . (சங் 147.4) என வாசிக்கிறோம்
கடவுள் நட்சத்திரங்களின் எண்ணிக்கை யை அறிந்திருக்கிறதுமன்றி, அவைகளை பேரிட்டு அழைக்கிறார். மனித அறிவை பொறுத்த மட்டிலும், நம்மால் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது.
மிகப் பெரிய தூரதிருஷ்டி கண்ணாடிகளின் மூலமாகப் பார்த்தாலும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை முற்றிலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)